Thursday, 28 April 2022

IFHRMS

 29.04.2022  

 அனைத்து அரசு  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்தமை உபரிப்பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தமை கூடுதல் தேவையுள்ள பணியிடங்களுக்கு பணிநிரவல் ஆணை பெற்றவர்கள் IFHRMS மூலம் ஊதியம் வழங்க அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள்  விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் காலதாமதம் ஏதுமின்றி இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும் 30.04.2022 அன்று பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு பணிந்து அனுப்பவேண்டியுள்ளதால்  இந்நேர்வில் காலதாமதம் இல்லாமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  மீள  தெரிவிக்கலாகிறது. இணைப்பு1 இணைப்பு2 

Tuesday, 26 April 2022

  27.04.2022   // தனி கவனம் //  மிக அவசரம்//  நினைவூட்டுதல் 1

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2021 - 2022 ஆம் கல்வியாண்டில் மாணவ /  மாணவியர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை ( POWER FINANCE)  வழங்கும் பொருட்டு வங்கி கணக்கு விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் 26.04.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறும் அதன் நகலினை  EXCEL SHEET  இல் தட்டச்சு செய்து இரு நகல்கள் இவ்வலுவலக அ4 பிரிவில் 26.04-2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறும் கோரப்பட்டிருந்தது ஆனால் சில பள்ளிகள் தவிர மற்றப்பள்ளிகள் இதுநாள் வரை ஆன் லைன் படிவத்தில் உள்ளீடு செய்யாமல் இருப்பதும் , நகல் இவ்வலுவகத்தில் ஒப்படைக்காமல் உள்ள காரணத்தினால் தொகுப்பறிக்கை செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையில் இருப்பதால் இனியும் காலம் தாழ்த்தாமல் மேற்காண் பொருள் சார்து உடன் நடவடிக்கை எடுத்து உரிய படிவங்களை பூர்த்தி செய்து  இருநகல்கள் இவ்வலுவலக அ4 பிரிவில் 27.04.2022 மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  .  மேலும்  உரிய படிவத்தில்  பூர்த்தி செய்த விவரங்களை  குறுந்தகட்டில் பதிவு செய்து இவ்வலுவகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்விவரப்படிவத்தில் தகுதி வாய்ந்த மாணவர் எவர் பெயரும் விடுபடவில்லை எனவும் யாருடைய பெயரும் இருமுறை பதிவு செய்யப்படவில்லை எனவும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் உறுதி மொழி சான்று அளிக்கவேண்டும் . மேலும் அனைத்து மாணவர்ளின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் எடுத்து உரிய படிவத்துடன் இணைக்கப்படவேண்டும்  இணைப்பு1 இணைப்பு2 

 26/04/2022

 அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை அசிரியர்களின் கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள வங்கி கணக்கு  படிவத்தில் உள்ள தலைமைஆசிரியர்கள் தங்கள் வங்கி கணக்கு எண்ணை சரிபார்த்து   மஞ்சள் கலத்தில் உள்ள (  Proposed to Remittance) தொகையினை  இணைக்கப்பட்டுள்ள அரசுக்கணக்கில்  செலுத்தி ரேண்டம் எண்ணுடன் செலுத்துச்சீட்டினை இவ்வலுவலகத்தில் 27.04.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் பள்ளிக்கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் அவர்களுக்கு  செலுத்து சீட்டினை அளிக்கும் வகையில் ஆ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு1 இணைப்பு2

  26.04.2022

அனைத்து வகை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ன் கீழ் திரு.சுரேஷ்குமார்  என்பார் மனுவில் கோரிய தகவல்கள் உரியவருக்கு அனுப்பிவிட்டு இவ்வலுவலக அ5 பிரிவில்  நேரடியாக ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு

 26.04.2022

அனைத்து வகை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ன் கீழ் திரு.லிதர்சன் என்பார் மனுவில் கோரிய தகவல்கள் உரியவருக்கு அனுப்பிவிட்டு இவ்வலுவலக அ5 பிரிவில்  நேரடியாக ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு 

தகவல் அறியும் உரிமை ச்சட்டம் 2005

 26.04.2022 

அனைத்து அரசு உயர்நிலை மற்றும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில்  திரு.ஜலீல்முகைதீன் என்பாரின் மனுவில் கோரிய தகவல் உரியவருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலக அ5 பிரிவில்   நேரில் ஒப்படைக்க கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Sunday, 24 April 2022

தேர்வுகள் // அறிவியல் செய்முறைத் தேர்வுகள்

 25.04.2022  // 

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக்  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்விற்கு புறத் தேர்வர்களாக நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமன ஆணையினை இவ்வலுவலகத்தில் மாலை 04.00 மணி முதல் தனி நபர் மூலம் பெற்றுச்செல்லுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை  ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

 செய்முறை தேர்விற்கான  இணைப்பில் உள்ள படிவங்களை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HSC +1 , HSC +2,         SSLC 

Saturday, 23 April 2022

தேர்வுகள் //அறிவியல் செய்முறைத் தேர்வுகள்//

அனைத்து  வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக்/ உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின்  கவனத்திற்கு 

    நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 2022க்கு   அறிவியல் செய்முறைத் தேர்வுகளுக்கு புறத்தேர்வர்களாக நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தங்கள் பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
    செய்முறைத் தேர்வுகள் 25.04.2022 முதல் 02.05.2022 வரை அரசுதேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு 1   இணைப்பு 2 இணைப்பு 3 இணைப்பு 4

Friday, 22 April 2022

POWER FINANCE

  22.04.2022   // தனி கவனம் //  மிக அவசரம்//

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2021 - 2022 ஆம் கல்வியாண்டில் மாணவ /  மாணவியர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை ( POWER FINANCE)  வழங்கும் பொருட்டு வங்கி கணக்கு விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் 26.04.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறும் அதன் நகலினை  EXCEL SHEET  இல் தட்டச்சு செய்து இரு நகல்கள் இவ்வலுவலக அ4 பிரிவில் 26.04-2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள் . மேலும் மேற்கண்ட விவரங்களை தயார் செய்யும் போது இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியரின் விவரங்களை தனி கவனம் செலுத்தி மிக துல்லியமாக பதிவு செய்யும்  பணியினை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இவ்விவரப்படிவத்தில் தகுதி வாய்ந்த மாணவர் எவர் பெயரும் விடுபடவில்லை எனவும் யாருடைய பெயரும் இருமுறை பதிவு செய்யப்படவில்லை எனவும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் உறுதி மொழி சான்று அளிக்கவேண்டும் . மேலும் அனைத்து மாணவர்ளின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் எடுத்து உரிய படிவத்துடன் இணைக்கப்படவேண்டும்  இணைப்பு1 இணைப்பு 2   ஆன் லைன் 

Thursday, 21 April 2022

 22.04.2022  

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

மேலாண்மை குழு மறுகட்டமைப்பு சார்ந்த வழிகாட்டுதல்களில் இணைப்பில் கண்டவாறு சேர்க்கை மற்றும் நீக்கம் சார்ந்த விவரங்களை பின்பற்றி செயல்படுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு 1 இணைப்பு2 இணைப்பு3 இணைப்பு 4 இணைப்பு 5

தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல்

21.04.2022 

அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 மே 2022 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு , தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல் , வருகைத்தாள், இருக்கைத்திட்டம், பதிவிறக்கம் செய்தல் சார்பான இணைப்பில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு   அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .இணைப்பு 

+1 &+2 HALL TICKET

 21/04/2022 

  அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்  மே 2022  பள்ளி மாணவர்களுக்கான  மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket)  பதிவிறக்கம் செய்தல் தொடர்பான அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு  

CENTRE WISE NR

 21.04.2022  

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  மே 2022 தேர்வு மைய வாரியான (Centrewise NR )  பெயர் பட்டியல் (Seating plan )  மற்றும் CSD Forms  பதிவிறக்கம் செய்தல் தொடர்பான  இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின்  அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு 

தேர்வுகள்

21.04.2022 

அனைத்து  வகை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக்/ உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின்  கவனத்திற்கு 

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 2022  பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றும் பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது சார்பான இணைப்பில் உள்ள  அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 

Tuesday, 19 April 2022

 20.04.2022

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள பகுதி நேர துப்புரவாளர் மற்றும்  இரவுக்காவலர் தங்கள் பள்ளியில் பணிபுரிந்து கொண்டு இருப்பின்  அதன் விவரத்தினை அல்லது இன்மை அறிக்கையினை  இன்று  மாலை 4.00 மணிக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் (deotpt2015@gmail.com) என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு 

EXAM

 

19.04.2022// தேர்வுகள்//   // தனிகவனம்//

அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு .

 இடைநிலை மே 2022 இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தட்கல் உட்பட(20.04.2022 புதன்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Monday, 18 April 2022

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ன் கீழ் தகவல் கோருதல்

 18.04.2022  

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இணைப்பில் காணும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 இன்  மனுவிற்கு தகவல்களை உரிய கால கெடுவிற்குள் மனுதாரருக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வலுவலகம் அனுப்புமாறு அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இணைப்பு1 இணைப்பு2

Tuesday, 12 April 2022

 12.04.2022 

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும்  ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் 7 வது ஊதிய குழுவில்  தெரிவிக்கப்படாத  சிறப்பு படிகள் , தனி ஊதியம்  மற்றும் இதர படிகள்  10./ 2017 முதல் வழங்கப்பட்டுவருகிறது. அவ்வாறு வழங்குவதற்கு ஆணை ஏதேனும் இருப்பின் அதன் நகலினை அனுப்பிவைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. தற்போது வரை வழங்கப்பட்டு வரும் சிறப்பு படிகள் தனி ஊதயம் மற்றும் இதர படிகளுக்கு உரிய அரசாணை / விதிகள் அரியப்படாத பட்சத்தில்  சம்மந்தப்பட்ட அரசு உழியர்  ஏப்ரல் 22 சம்பளப்பட்டியலில் கேட்பு செய்யப்படவேண்டாம் என்றும் மேலும் அவ்வாறு இது வரை வழங்கப்பட்ட  தொகையினை அரசு கணக்கில் செலுத்தி ஈடுகட்டுமாறு பணம் பெற்று வழங்கும் அலுவலருக்கு அன்புடன்  தெரிவிக்கலாகிறது.  இணைப்பு 

2022-2023 பண்டிகை முன்பணம் மற்றும் மின்கட்டணம் தேவை பட்டியல் கோருதல் தொடர்பாக

 12.04.2022  //  தனி கவனம் // நிதி ஒதுக்கீடு  அவசரம் //

அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2022 - 2023 ஆம் நிதியாண்டிற்கு கணக்கு தலைப்பு வாரியாக பண்டிகை முன்பணம் மற்றும் மின்கட்டணம் தேவைப்பட்டியல் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில்  13.04.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு    அனைத்து பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.மேலும் உள்ளீடு செய்யும்  பள்ளிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு  இயலும் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறதுONLINE SHEET  

Friday, 8 April 2022

 08/04/2022

அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு –

 உத்தராகாண்ட் மாநிலம் டேராடுனில் உள்ள ராஷ்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வுகள் வரும் ஜனவரி 2023-இல் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து பெருமளவு மாணவர்களை தகுதித்தேர்வில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு 

Thursday, 7 April 2022

தேர்வுகள்

 08.04.2022

அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

நடைபெறவுள்ள மே 2022 இடைநிலைக்கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வுக்கான முகப்புத் தாட்களை 06.04.2022 முதல் 09.04.2022 வரையிலான நாட்களில் தேர்வு மைய தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி முதன்மை விடைத்தாளுடன்  முகப்புத்தாட்களை இணைத்து தைக்கும் பணியினை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.

எனவே, தேர்வு மைய தலைமையாசிரியர்கள் தங்கள் மையத்தில் தேர்வு எழுதும் அனைத்து தேர்வுகளுக்கும் தேர்வு எழுதும் அனைத்து பாடங்களுக்கான முகப்புத் தாட்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதை தங்கள் தேர்வு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து 06.04.2022 அன்று முதல் பதிவிறக்கம் செய்த பெயர் பட்டியலை பெற்று முகப்புத்தாட்களில் அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளனவா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

முகப்புத்தாட்கள்   கிடைக்கப்பெறாத /சேதமடைந்த (Barcode-Reg No.  Overlapped,barcode smudged) முதன்மை மொழி பாடம் மாற்றம், பயிற்று மொழி மாற்றம் கொண்ட தேர்வர்களுக்கு புதிய முகப்புத் தாட்களை தேர்வு மையத்திற்கு என வழங்கப்பட்டுள்ள userid/password கொண்டு இணையதளம் மூலம் 13.04.2022 அன்று முதல் அந்தந்த தேர்வு மையத்திலேயே  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

பெயர் பட்டியலில் சரியான பதிவுகள் இருந்து, தேர்வு மையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட முகப்புத் தாட்களில் கீழ் குறிப்பிட்டுள்ள திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் பின்வரும் வழிமுறைகளின் படி செயல்பட சம்பந்தப்பட்ட  தேர்வு மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. தேவரின் பெயர் (candidates' Name)

2. புகைப்படம் மாறி இருத்தல்.

                                              பிற்சேர்க்கை 

வ.எண்

முகப்புத்தாளில் (Top Sheet) உள்ள குறை

நிவர்த்தி செய்தல்

  

    1

முப்புத்தாளில் (Top Sheet) பெயர் தவறாக இருப்பின்

பெயர் சிவப்பு நிற மையினால் திருத்தம் செய்து Attest  செய்தல் வேண்டும்

    2

மாணவர்களின் புகைப்படம் மாறியிருந்தால்

மாணவரின் சரியான புகைப்படத்தை பெற்று ஒட்டி Attest செய்தல் வேண்டும்

 

  

 


தேர்வுகள்

 07.04.20222     //தேர்வுகள்// மிக மிக அவசரம் //

அனைத்து  வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு..

மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கும், அப்பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு பெயர் பட்டியலில் இடம் பெற்றதற்கு பின்பு மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் அல்லது இறப்பின் காரணமாக பதிவு எண் நீக்கம் செய்தல், இரண்டு பதிவு எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளவர்கள்களின்   ஒரு பதிவு எண் மட்டும் நீக்கம்(DELETION) செய்யப்பட உள்ள மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றை அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  நாளை( 08.04.2022) மாலை 3.00pm மணிக்குள் இவ் அலுவலக அ3 தேர்வுத்துறை பிரிவில் தனி நபர் மூலம் இரண்டு நகல்கள் சமர்ப்பிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

குறிப்பு: மேற்கண்ட பணி மிகவும் அவசரம் என்பதால் இவ் வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



ஆய்வக உதவிளார் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர்

 07.04.2022  //

அனைத்து  அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனதிற்கு 

ஆய்வக  உதவியாளர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளராக பணிபுரியும் பணியாளர்கள் விவரம் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து  11.04.2022 அன்று மாலை 05.00 க்குள் இரு நகல்களில்  அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை ஒப்படைக்க  தெரிவிக்கலாகிறது.இணைப்பு 

Tuesday, 5 April 2022

 06.04.2022  // அவசரம்//

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) ஆணைக்கிணங்க தங்கள் பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் தற்போதைய நிலையினை இணைப்பில் கண்டுள்ள  ONLINE SHEET -  இல் (30.03.2022) இன்று பிற்பகல் 02.00 மணிக்குள் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது ஆனால்  நாளது தேதி வரை  கீழ்கண்ட பள்ளிகள் படிவம் 1 மற்றும்  படிவம் 2 பதிவிடவில்லை இன்று 12.00 மணிக்குள் பதிவிடுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1   ONLINE SHEET

பள்ளிகள் விவரம் 

                                   படிவம் 1 

1 .அரசு உயர்நிலைப்பள்ளி, பீ.நாயக்கனூர்

2 . அரசு மேல்நிலைப்பள்ளி, பொம்மிகுப்பம்

                                       படிவம் 2 

1 . அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மடவாளம்

2 .அரசு மேல்நிலைப்பள்ளி, பொம்மிகுப்பம்

3. அரசு மேல்நிலைப்பள்ளி, பால்நாங்குப்பம்

4 . அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகமூத்தம்பட்டி

5 .அரசு மேல்நிலைப்பள்ளி, கொரட்டி

6. அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பேரி

7 .அரசு மேல்நிலைப்பள்ளி,நத்தம்

8. அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி

9. அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை

10 . அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயபுரம்

11 . அரசு மேல்நிலைப்பள்ளி, தாமலேரிமூத்தூர்

12. அரசு மேல்நிலைப்பள்ளி,வக்கணம்பட்டி

13 .அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்

14 . அரசு மேல்நிலைப்பள்ளி , மிட்டூர்

15. அரசு மேல்நிலைப்பள்ளி, பூங்குளம்

16 . அரசு உயர்நிலைப்பள்ளி,  ஜமுனபுதூர் பூங்குளம்

17.  ADW , ஜடையனூர்

18 .அரசு  உயர்நிலைப்பள்ளி, தோரணம்பதி

19. அரசு உயர்நிலைப்பள்ளி, கிழக்குபதனவாடி

20 .அரசு உயர்நிலைப்பள்ளி, எலவம்பட்டி

21.அரசு உயர்நிலைப்பள்ளி, செவ்வாத்தூர்

22. அரசு உயர்நிலைப்பள்ளி, குமிடிகாம்பட்டி

23. அரசு உயர்நிலைப்பள்ளி, சின்னகம்மியம்பட்டு

24.அரசு உயர்நிலைப்பள்ளி, அசோக்நகர்

25 . அரசு உயர்நிலைப்பள்ளி, பீ.நாயக்கனூர்

26 . அரசு உயர்நிலைப்பள்ளி, நிம்மியம்பட்டு

27 . ADW  ,ஆலங்காயம்



தேர்வுகள்

 

05.04.2022 // தனிகவனம்//

அனைத்து  தேர்வு மைய பள்ளித்தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மே- 2022 மேல்நிலை இரண்டாம் ஆண்டு/ இடைநிலை பொதுத் தேர்வுக்கு வெற்று  முதன்மை விடைத்தாள்கள்/ முகப்பு தாட்கள் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றுச் செல்ல கோருதல் தொடர்பாக இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அவர்களின் செயல்முறைகளை  பின்பற்றுமாறு அனைத்து தேர்வு மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

தேர்வுகள்

 05.04.2022  // தனிகவனம்//

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 2022- அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட  வேண்டிய நாட்கள் மற்றும் இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு1 இணைப்பு2 இணைப்பு3

Monday, 4 April 2022

  05.04.2022

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் திரு. ஹ.ஜலில்முகைதீன் என்பவர் மனுவில் கோரிய தகவல் உரியவருக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வலுவல அ1 பிரிவில்  நேரில் ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு 

 05.04.2022

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் திரு. அ.பாலு என்பவர் மனுவில் கோரிய தகவல் உரியவருக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வலுவல அ1 பிரிவில்  நேரில் ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு

 05.04.2022

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் திரு.ஐ.சங்கர் என்பவர் மனுவில் கோரிய தகவல் உரியவருக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வலுவல அ1 பிரிவில்  நேரில் ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்புமனு 

 05.04.2022  

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களின்  கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களை உரியவருக்கு அனுப்பிவிட்டு அதன் ஒரு நகலினை  இவ்வலுவலகத்தில்  ஆ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Sunday, 3 April 2022

விலையில்லா நோட்டுப்புத்தகம்

 04.04.2022

அனைத்து அரசு  மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான  மூன்றாம் பருவ நோட்டு புத்தகங்கள் திருப்பத்தூர் அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியில் 05.04.2022 அன்று காலை 10.00 மணி முதல் வழங்கப்படவுள்ளதால் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகள் பெற்றுச் செல்லும்படி  கேட்டுக்கொள்ப்படுகிறார்கள்.

Friday, 1 April 2022

விலையில்லா நலத்திட்டங்கள்

 01.04.2022   

அனைத்து அரசு  மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான  மூன்றாம் பருவ நோட்டு புத்தகங்கள் திருப்பத்தூர் அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியில் 04.04.2022 அன்று காலை 10.00 மணி முதல் வழங்கப்படவுள்ளதால் கந்திலி மற்றும் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகள் பெற்றுச்செல்லும்படி  கேட்டுக்கொள்ப்படுகிறார்கள்.