Saturday 31 October 2020

03.11.2020  அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் கட்டாய உடற்தகுதி திறனாய்வுத் தேர்வுகள் அனைத்துப் பள்ளிகளிலும் நடத்தி அறிக்கை அளிப்பது சார்பாக இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றிட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் செய்திடுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

அட்டைகள் வழங்கப்பட உள்ள மையம்.

சிறு விளையாட்டு அரங்கம் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்.

நாள் :  09.11.2020.

 

31.10.2020       நினைவூட்டல் – 01     //  மிக அவசரம் //  தனிகவனம் //

அனைத்து வகை அரசு / நிதியுதவி /  மெட்ரிக் / சுயநிதி / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  முதல்வர்களின்  கவனத்திற்கு 

2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான  இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில்  இதுவரை பூர்த்தி  செய்யாமல்  உள்ள பள்ளிகள் தங்கள்  பள்ளி சார்பான விவரங்களை  இன்று  மாலை 5.00 மணிக்குள் பூர்த்தி  செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ONLINE SHEET

 31.10.2020 

  அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இலவச பேருந்து பயணஅட்டை -2018 - 2019 & 2019 -2020 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை பெற்று வழங்கிய  விவரம் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  02.11.2020  மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com )  அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1 . ATTACHMENT2 

Friday 30 October 2020

31.10.2020 அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

NMMS  - மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விற்கான கல்வி உதவித் தொகை 4789 தகுதியுள்ள மாணவ / மாணவியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதம் இணைப்பில் உள்ள 866 மாணாக்கர்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இல்லாததால் கல்வி உதவித் தொகை செலுத்த இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே இணைப்பில் உள்ள தங்கள் பள்ளி மாணவ / மாணவியர்களின் பெயர்களை கண்டறிந்து தற்போது நடைமுயைில் உள்ள வங்கி கணக்கு விவரம் மற்றும் இதர விவரங்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து EXCEL - FORMAT இல் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 04.11.2020 மாலை 3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2, ATTACHMENT - 3.

Thursday 29 October 2020

 29.10.2020

 அனைத்து வகை அரசு / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு 

இணைப்பில் கண்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளுக்கு இணங்க 10.03.2020 க்கு முன்னர் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத்தேர்வு பாகம்  - 1  தேர்ச்சி பெற்று முன் ஊக்க ஊதியம் பெறாத  இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - II பணியாளர்கள் இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் 02.11.2020 காலை 10.00 மணிக்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 1. ATTACHMENT 2 

 29.10.2020

 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

சிறு சேமிப்பு - 2020 -2021 ஆம்  ஆண்டின் உலக சிக்கன நாள் விழா - 30.10.2020 அன்று கொண்டாடுதல் - பள்ளி மாணவ மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பினை வலியுறுத்தி இணைப்பில் உள்ள  போட்டிகள் நடத்திட அனைத்து வகை பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Wednesday 28 October 2020

 29.10.2020  // மிக மிக அவசரம் //

அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

உடற்கல்வி ஆசிரியர்கள் நேரடி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளதால் முறையான ஊதிய விகிதத்தில்  அனுமதிக்கப்பட்ட  உடற்கல்வி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு இன்று பிற்பகல் 12.30 மணிக்குள் அனுப்பிவிட்டு அதன் நகலினை இன்று மாலை 04.00 மணிக்குள்  இவ்வலுவலக ஆ2  பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் இல்லாத பள்ளிகள் இன்மை அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

 29.10.2020 

 அனைத்து வகை அரசு / நிதியுதவி /  மெட்ரிக் / சுயநிதி / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  முதல்வர்களின்  கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள பள்ளி சார்பான விவரங்களை 2020- 2021ஆம் கல்வியாண்டிற்கான  ஆன் லைன் படிவத்தினை  இன்று காலை 12.00 மணிக்குள் பூர்த்தி  செய்யுமாறு அனைத்து வகை அரசு / நிதியுதவி /  மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்  ஆன் லைன் படிவத்தினை நீக்கம் செய்யவோ   மாற்றம் செய்யவோ கூடாது என தெரிவிக்கலாகிறது.   ONLINE SHEET 

 28.10.2020 

 அனைத்து வகை அரசு / நிதியுதவி /  மெட்ரிக் / சுயநிதி / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  முதல்வர்களின்  கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள பள்ளி சார்பான விவரங்களை  ஆன் லைன் படிவத்தினை நாளை காலை 11.00 மணிக்குள் பூர்த்தி  செய்யுமாறு அனைத்து வகை அரசு / நிதியுதவி /  மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ONLINE SHEET 

 28.10.2020   //நினைவூட்டல் - 1//

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் தாளாளர்கள் கவனத்திற்கு

 2020 -2021  ஆம் கல்வியாண்டில் புதியதாக மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுத அங்கீகாரம் பெறப்பட்ட பள்ளிகள் மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வு எழுத தேர்வு மையங்கள் மாற்றம் குறித்த விவரங்களை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து 29.10.2020 அன்று மதியம் 02.00 மணிக்குள்  தனி நபர் மூலம்  அ3 பிரிவில் நேரில் ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

 28.10.2020 

 அனைத்து வகை  தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு 

தேசிய ஒற்றுமை தினம் - சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான 31.10.2020 அன்று தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்க இணைப்பில் உள்ள உறுதி மொழியை  11.00 மணிக்கு எடுத்திட  அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Tuesday 27 October 2020

 27.10.2020   அனைத்து வகை  மெட்ரிக்  உயர் /மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - மாநில கணக்காயரால் செயல்திறன் தணிக்கை நடைபெற்றமை - ஆசிரியர் தகுதி தேர்வு சார்பான விவரங்கள் கோரியமை - மீண்டும் 19.10.2020 முதல் தணிக்கை நடைபெற உள்ளதால் இணைப்பில் கோரிய விவரங்களை காலதாமதமின்றி உடன் இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு  அனுப்புமாறு அனைத்து வகை  மெட்ரிக்  உயர் /மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

 27.10.2020

 அரசு / நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை - 10 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வி தகுதிகளை அந்தந்த பள்ளிகளில் ஆன் லைன் வாயிலாக பதிவு செய்தல் சார்பாக  USERID PASSWORD  கீழ்கண்ட இணைப்பில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது. ATTACHMENT ATTACHMENT 

Monday 26 October 2020

 27.10.2020

 அரசு / நிதியுதவி  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 NEET  2021 -  2020  நவம்பர் 01 முதல்  தொடங்கப்படவுள்ள இலவச ஆன் லைன் வகுப்பு சார்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின்  செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

 27.10.2020

 அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளின் கழிவறைகள் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் சார்பான தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு  நடவடிக்கை மேற்கொள்ள  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT 

 27.10.2020    அனைத்து வகை அரசு/ நிதியுதவி பெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளித்  தலைமைஆசிரியர்கள் மற்றும்  தாளாளர்கள் கவனத்திற்கு,

வருகின்ற 02.11.2020 மற்றும் 03.11.2020 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் ஸ்ரீமீனாட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள முகாமில் ஊக்க ஊதியம் சார்பான விவரங்கள் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து முழு வடிவில்   தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் /   தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Thursday 22 October 2020

 23.10.2020    // தனி கவனம் //

அனைத்து  அரசு  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2020 -2021  ஆம் நிதியாண்டிற்கு 220202109AA என்ற கணக்கு தலைப்பின் கீழ் பண்டிகை முன் பணம் மற்றும் மின்கட்டணம் தேவைப்பட்டியல் இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் தாமதமாக பெறப்படும் தேவைப்பட்டியலுக்கு ஒதுக்கீடு செய்ய இயலாது  என்பதையும்  திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. 

 22.10.2020  

அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் அரசினர் தொழில் பயிற்சி நிலையம் வானியம்பாடியில் 2020 -2021  ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இடை நின்றவர்கள், தற்போது 10 வகுப்பு துனணத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்  மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இடை நின்றவர்கள் பயன்பெறும் வகையில் இணைப்பில் கண்ட கடிதத்தினை பள்ளி தகவல் பலகையில்  ஒட்டவேண்டும். மேலும்  மாணவர்களின் பெயர் மற்றும் முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வாணியம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வருக்கு நேரடியாக அனுப்பி விட்டு அதன் நகலை திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தனி நபர் மூலம்  ஒப்படைக்குமாறு அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT  

 22.10.2020  

அனைத்து வகை மெட்ரிக் பள்ளி தாளாளர்களின் கவனத்திற்கு 

2020 - 2021 ஆம் கல்வியாண்டின் புதியதாக 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்ற பள்ளிகள்  அதன் விவரங்களை  இவ்வலுவலக அ3 பிரிவில் நாளை (23.10.2020 ) மாலை 03.00 மணிக்குள் 2 நகல்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

  22.10.2020    // நினைவூட்டல் - 5 //

NMMS - உதவித்தொகை - 2020 - 2021  ஆம் கல்வியாண்டில் NMMS உதவித்தொகை பெற இணைப்பில் உள்ள பள்ளி மாணவ / மாணவிகளின் விவரங்களை NSP இணையதளத்தில் இதுநாள் வரை (FRESH ENTRY - RENEWAL ) பதிவேற்றம் / புதுப்பித்தல்  பணிமுடிக்காமல் இருக்கும் பள்ளிகள் 31.10.2020 அன்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விரைந்து முடிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் INSTITUTE LEVEL இல் VERIFY  செய்துவிட்டு விண்ணப்பித்ததற்கான REPORT  ஐ இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT        ATTACHMENT 

 22.10.2020   // தனிகவனம் //

அனைத்து  அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பயிற்சி  -அரசு அலுவலர் பயிற்சி நிலையம்   இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கான 41  பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப்பயிற்சி - 43 ஆம் அணி -  பவானி சாகர் பயிற்சி நிலையத்தில் (இருபாலருக்கும் ) 17.03.2020 பிற்பகல் முதல் பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.  கோவிட்- 19 கோட்பாடுகளை பின்பற்றி அடிப்படை பயிற்சி 27.10.2020 முதல் 14.12.2020 வரை நடைபெறவுள்ளதால் , ஏற்கனவே 17.03.2020 அன்று பயிற்சியிலிருந்து  விடுவிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் மட்டும்   இணைப்பில் உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாது பின்பற்றி 26.10.2020 பி.ப.5.00 மணிக்குள் பாவனி சாகர் பயிற்சி மையத்திற்கு கலந்துக்கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள்      கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT1   ATTACHMENT2 

  22.10.2020    // நினைவூட்டல் -1//

 அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

MBC -2019-2020  ஆம் கல்வியாண்டிற்கான 6 ஆம் வகுப்பு பயின்ற MBC மாணவிகளின் பெண்கல்வி ஊக்கத்தொகை NEFT மூலம் தலைமை ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இணைப்பில் உள்ள பள்ளி தலைமை  ஆசிரியர்கள் உரிய பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தி  விட்டு பயனீட்டு சான்று (UTILIZATION CERTIFICATE )  மற்றும் பற்றொப்பம் (ACQUITTANCE) 3 நகல்களில் 22.10.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை 7 பள்ளிகளிடமிருந்து மட்டுமே வரப்பெற்றுள்ளது. எனவே காலந்தாழ்த்தாமல் இணைப்பில் உள்ள பள்ளிகள் 23.10.2020 மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அன்று மாலைக்குள் பயனீட்டுச்சான்று வழங்காத தலைமை ஆசிரியர்களின் பட்டியல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவும் தெரிவிக்கலாகிறது. ATTACHMENT1. ATTACHMENT2    ACQUITTANCE

Wednesday 21 October 2020

  22.10.2020   // நினைவூட்டல் - 1 //

 அனைத்து வகை  அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தங்கள் பள்ளியில்  அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் விவரங்களை இவ்வலுவலகத்திற்கு 2 நகல்களில் 20.10.2020 அன்று மாலை  5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்நாள் வரை சில பள்ளிகள் மட்டுமே வழங்கியுள்ளன, இதுவரை வழங்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (22.10.2020) பிற்பகல் 03.00 மணிக்குள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அறிக்கை வழங்கவேண்டியுள்ளதால்  தாமதத்திற்கு இடமில்லாமல் தனி கவனம் செலுத்தி ஒப்படைக்குமாறு மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    ATTACHMENT   படிவம் 

குறிப்பு. இப்பொருள் தொடர்பாக தகவல் இல்லை எனில் இன்மை அறிக்கை  தவறாது வழங்கப்படவேண்டும் . 

  22.10.2020    //நினைவூட்டல் -1//

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் / மெட்ரிக் / சி.பி.எஸ்.சி. பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு 

பொது சுகாதாரம் - இணைப்பில் உள்ள கடிதப்படி அக்டோபர் 2020 ல் பள்ளி நோய் தடுப்பு பணி சார்பாக பள்ளி குழுந்தைகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT  ATTACHMENT 2

 21.10.2020

 அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் / முதல்வர்களின் கவனத்திற்கு 

போட்டிகள் - விழிப்புணர்வு வாரம் 2020 - " விழிப்பான இந்தியா , செழிப்பான இந்தியா " என்ற தலைப்பில் இணைப்பில் உள்ள விவரப்படி விருப்பமுள்ள 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளின் படைப்புகளை dvacvaw@gmail.com & deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.10.2020 மாலை 04.00 மணிக்குள் இணைப்பில் உள்ள விதிமுறைகளை கவனமாக பின்பற்றி அனுப்பிட தங்கள் பள்ளி மாணவ / மாணவிகளுக்கு அறிவுறுத்தும்படி அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

ATTACHMENT 

 21.10.2020

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் / மெட்ரிக் / சி.பி.எஸ்.சி. பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு 

பொது சுகாதாரம் - இணைப்பில் உள்ள கடிதப்படி அக்டோபர் 2020 ல் பள்ளி நோய் தடுப்பு பணி சார்பாக பள்ளி குழுந்தைகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

 21.10.2020   //நினைவூட்டல் - 2

அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 இணைப்பில் உள்ள கடிதத்தின்படி தேசிய பெண்குழுந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத்தொகைத் திட்டத்தின் படி (NSIGSE)  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் SC/ST  பிரிவு மாணவியர் தங்கள் இடைநிலைக்கல்வியை கைவிடா வண்ணம் அவர்களின் இடைநிற்றலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 2012 -2013, 2013 - 2014 , 2014 - 2015, 2015 - 2016, மற்றும் 2016 -2017 ஆகிய 5 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இத்திட்டத்திற்கு தகதியான மாணவியரின் பெயர்பட்டியலை சரிபார்த்து அவர்களின் வங்கிகணக்கு  தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ளதா என்பதையும்  வங்கியின் பெயர் ,IFSC  குறியீடு மற்றும் வங்கிகணக்கு எண் நடைமுறையில் உள்ளதா என்பதையும் உறுதி செய்து மாணவியரின் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து  ஆண்டு வாரியாக தொகுத்து 4 நகல்களில் 29.10.2020  க்குள் தனிநபர் மூலம் நேரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என  அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்மை அறிக்கை என்றாலும 4 நகல்களில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ATTACHMENT1 ATTACHMENT2.ATTACHMENT3.ATTACHMENT4.  

 21.10.2020

அனைத்து அரசு / நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள கடிதத்தின் படி "ஆங்கில வழிக்கல்வி கற்பிப்பு கட்டணம் திரும்பபெறுதல் திட்டம் மற்றும்   கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிடுப்பு திட்டம்" ஆகிய திட்டங்களின் கீழ் 2019 - 2020 ஆம்  ஆண்டில் பயன்பெற்ற பயணாளிகளின் (  COMMUNITIES WISE ) விவரங்களை  இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரிதியை 2 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்பிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ATTACHMENT 

Tuesday 20 October 2020

 21.10.2020

 அனைத்து வகை  அரசு / நிதியுதவி சிறுபான்மை பள்ளிகளைச் சார்ந்த தலைமை ஆசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு

மதரஸா கல்வி முறையை நவீனப்படுத்துதல் மற்றும் மௌலானா ஆசாத் கல்வி அமைப்பின் மூலம் கல்வி கூடங்களின் கட்டமைப்புகளை  மேம்படுத்துதல் தொடர்பாக இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) 22.10.2020 மாலை 05.00 மணிக்குள் அனுப்பிவைக்குமாறு சிறுபான்மை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தொடர்பாளர் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

 20.10.2020

2019 -2020  ஆம் கல்வியாண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு பயின்ற SC/ST/SCC  மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பயிற்சி தொடர்பாக வழங்கப்பட்ட பயிற்சி ஆணை மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை  ஆசிரியரால் வழங்கப்பட்ட வருகை சான்றின் அடிப்படையில் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டக்கொள்ளப்பட்டது. ஆனால் சில பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளிடமிருந்து எந்த ஒரு அறிக்கையும் வரப்பெறாதது மிகவும் வருத்தத்தக்கது. இனியும் காலந்தாழ்த்தாமல் இணைப்பில் உள்ள படிவத்தில் கோரிய தகவல்களை பூர்த்தி செய்து 2 நகல்களில் வருகைச் சான்று மற்றம் பயிற்சி ஆணை 2 நகல்களுடன் 21.10.2020 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

கோரும் தகவல்கள் எதுவாயினும் இன்மை அறிக்கை எனில் 2 நகல்களில் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதனை கருத்திற்கொள்ளுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 20.10.2020   அனைத்து வகை  மேல்நிலை / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மார்ச் 2020 - இல் நடைபெறாத பத்தாம் வகுப்பு / மேல்நிலை பொதுத் தேர்வுக்காக பெறப்பட்ட மாணவர்களின் வருகைப் பதிவேடு 21.10.2020 புதன்கிழமை திருப்பத்தூர் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முகப்பு கடிதத்துடன் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலை / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 20.10.2020   அனைத்து வகை  மேல்நிலை / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மார்ச் 2020 - இல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான செய்திக் குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மேலும் இணைப்பில் காணும் இவ்வலுவலக செயல்முறைக் கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்களின் படி 21.10.2020 அன்று தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலை / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2 

Monday 19 October 2020

 19.10.2020  

 அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின்  கல்வி தகுதிகளை அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு பணிகளை மேற்கொள்ள  USER ID , PASS WORD  இணைக்கப்பட்டுள்ளது. 

ATTACHMENT1. ATTACHMENT2 

Sunday 18 October 2020

 19.10.2020    // நினைவூட்டல் - 4//

NMMS - உதவித்தொகை - 2020 - 2021  ஆம் கல்வியாண்டில் NMMS உதவித்தொகை பெற இணைப்பில் உள்ள பள்ளி மாணவ / மாணவிகளின் விவரங்களை NSP இணையதளத்தில் இதுநாள் வரை (FRESH ENTRY - RENEWAL ) பதிவேற்றம் / புதுப்பித்தல்  பணிமுடிக்காமல் இருக்கும் பள்ளிகள் 31.10.2020 அன்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விரைந்து முடிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்பித்ததற்கான REPORT  ஐ இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Saturday 17 October 2020

 17.10.2020   // மிக மிக அவசரம் // 

 மார்ச் 2020 அரசு பொதுத்தேர்வில்  முதன்மைக்கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரால்லாத பணியாளர்களுக்கான உழைப்புதியம் மற்றும் தேர்வு மைய சில்லரை செலவினங்களுக்கான பற்றொப்ப சீட்டுக்கள் இதுநாள் வரை சமர்பிக்காத  முதன்மைக்கண்காணிப்பாளர்கள் அதற்கான  பற்றொப்ப சீட்டுக்களை வேலூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 20.10.2020  க்குள் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

 17.10.2020

 அனைத்து வகை  அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

அரசு பொதுத்தேர்வில் தங்கள் பள்ளியில்  அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் விவரங்களை இவ்வலுவலகத்திற்கு 2 நகல்களில் 20.10.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT   படிவம் 

Friday 16 October 2020

 16.10.2020

 அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

MBC -2019-2020  ஆம் கல்வியாண்டிற்கான 6 ஆம் வகுப்பு பயின்ற MBC மாணவிகளின் பெண்கல்வி ஊக்கத்தொகை NEFT மூலம் தலைமை ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இணைப்பில் உள்ள பள்ளி தலைமை  ஆசிரியர்கள் உரிய பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தி  விட்டு பயனீட்டு சான்று (UTILIZATION CERTIFICATE )  மற்றும் பற்றொப்பம் (ACQUITTANCE) 3 நகல்களில் 22.10.2020 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT1. ATTACHMENT2 ACQUITTANCE

Thursday 15 October 2020

 

16.10.2020

அனைத்து அரசு /அரசு உதவி பெறும் உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு,

NMMS – 2016 – 2017 ஆம் கல்வியாண்டில் மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விற்கான கல்வி உதவித் தொகை 6492 தகுதியுள்ள மாணவ / மாணவியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதம் இணைப்பில்  உள்ள 703 மாணாக்கர்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இல்லாததால் கல்வி உதவித் தொகை செலுத்த இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இணைப்பில் உள்ள தங்கள் பள்ளி மாணவ /மாணவியர்களின் பெயர்களை கண்டறிந்து தற்போது நடைமுறையில் வங்கி கணக்கு விவரம் மற்றும் இதர விவரங்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து  Excel Format – ல்  deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21.10.2020 மாலை 3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 ,   படிவம்

 16.10.2020

 அனைத்து அரசு / அரசு உதவிபெறும்  உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2019 -2020  ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா காலணிகள் மாணவர்களுக்கு  உரிய தடுப்பு நடிவடிக்கையுடன் வழங்கிட அனுமதிக்கப்படுகிறது. மேலும் விலையில்லா காலணிகள் வழங்கும்போது  போதிய இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து வர மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அத்துடன் கை கழுவுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைக்க வேண்டும் தடுப்பு நடவடிக்கையுடன் விலையில்லா காலணிகள் வழங்கி. அதன்  அறிக்கையை  இரு நகல்களில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 

Wednesday 14 October 2020

 14.10.2020

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்புதல் பொருட்டு 2020-2021 ஆம் அண்டிற்கான  தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயாரித்தல் சார்பாக இணைப்பில் காணும் பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்கள் விவரங்களை  இணைக்கப்பட்டுள்ள  படிவத்தில் பூர்த்தி  செய்து உரிய இணைப்புகளுடன் 16.10.2020 மாலை 04.00 மணிக்குள் நான்கு நகல்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 


Monday 12 October 2020

 12.10.2020 

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

    மார்ச் 2020 ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது  தொடர்பான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. 

    மேலும்  இணைப்பில் காணும் இவ்வலுவலக செயல்முறை கடிதத்தில்  தெரிவித்துள்ள விவரங்களின்படி 13-10-2020 அன்று தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில்  அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இhttps://deotirupatter.files.wordpress.com/2020/10/certificate-distribution-instructions-sop.pdfணைப்பு 1  இணைப்பு 2  இணைப்பு 3

Thursday 8 October 2020

 09.10.2020   // தனிகவனம்//

 அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின்  கவனத்திற்கு 

 தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் CPS MISSING CREDIT  உள்ளவர்களுக்கு  இம்மாதம் 20.10.2020 ஆம் தேதிக்குள்   CPS MISSING CREDIT சரி செய்து அறிக்கையை சார்நிலை கருவூலத்தில் சமர்பிக்குமாறு அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும் (அக்டோபர் 2020)இம்மாத ஊதிய பட்டியலை IFHRMS  இல் தயார் செய்து 16.10.2020 க்குள் கருவூலத்தில் சமர்பிக்க  அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. 

Wednesday 7 October 2020

  08.10.2020   // நினைவூட்டல் -1

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்/ முதல்வர்களின் கவனத்திற்கு 

பெருந்தலைவர் காமராசர் - இணைப்பில் உள்ள செயல்முறை கடிதம் மற்றும் அரசாணையின் நிபந்தணையின்படி 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 07.10.2020 க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com )  அனுப்பிவிட்டு அதன் பிரதியை 3 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தேதியில் 13 பள்ளிகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே , 08.10.2020 இன்று பிற்பகல் 02.00 மணிக்குள் வரப்பெரும் மாணவர்களின் விவரங்கள் மட்டுமே திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தகுதியான மாணவ /மாணவிகள் இல்லை எனில் இன்மை அறிக்கை 3 நகல்களில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

குறிப்பு . மாணாக்கர்களின் மதிப்பெண் விழுக்காட்டிற்கு இணைப்பில் உள்ள அட்டவணை 1 ல்  உள்ள அறிவுரைகளை பின்பற்றவும் .

ATTACHMENT1  ATTACHMENT2 

 08.10.2020   //தனிகவனம்//   // நினைவூட்டல் -1 //

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 மத்திய கல்வி உதவி தொகை திட்டம் - பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் (NSIGSE)  - 2012-2013, 2013-2014, 2014 - 2015 , 2015 - 2016  மற்றும் 2016-2017  ஆகிய  ஆண்டுகளில் 9 ஆம் வகுப்பு பயின்று தொடர்ந்து அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இத்திட்டத்திற்கு தகுதியான SC/ST  மாணவியர்களின் விவரங்கள் பெறப்பட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அம்மாணவியர்களை கண்டறிந்து  இணைப்பில் உள்ள படிவத்தில்  அம்மாணவியர்களின் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரதி 4 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் 30.09.2020  க்குள் சமர்ப்பிக்குமாறு  தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தேதியில் 15 பள்ளிகள் மட்டுமே முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது.  எனவே இணைப்பில் உள்ள பள்ளிகள்  இனியும் காலந்தாழ்த்தாமல் மேற்படி குறிப்பிட்ட ஆண்டுகளில் ஆண்டு வாரியாக தொகுத்து கண்டிப்பாக 4 நகல்களில்  இன்று  (08.10.2020) மாலை 05.00 மணிக்குள் தனி நபர் மூலம் நேரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இன்மை அறிக்கை என்றாலும் ஆண்டு வாரியாக 4 நகல்களில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT  ATTACHMENT1   ATTACHMENT2     PROFORMA

 07.10.2020    //தனிகவனம்//

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 மத்திய கல்வி உதவி தொகை திட்டம் - பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் (NSIGSE)  - 2012-2013, 2013-2014, 2014 - 2015 , 2015 - 2016  மற்றும் 2016-2017  ஆகிய  ஆண்டுகளில் 9 ஆம் வகுப்பு பயின்று தொடர்ந்து அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இத்திட்டத்திற்கு தகுதியான SC/ST  மாணவியர்களின் விவரங்கள் பெறப்பட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அம்மாணவியர்களை கண்டறிந்து  இணைப்பில் உள்ள படிவத்தில்  அம்மாணவியர்களின் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரதி 4 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் 30.09.2020  க்குள் சமர்ப்பிக்குமாறு  தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தேதியில் 15 பள்ளிகள் மட்டுமே முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது. எனவே இனியும் காலந்தாழ்த்தாமல் மேற்படி குறிப்பிட்ட ஆண்டுகளில் ஆண்டு வரியாக தொகுத்து கண்டிப்பாக 4 நகல்களில் நாளை (08.10.2020) மாலை 05.00 மணிக்குள் தனி நபர் மூலம் நேரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் இன்மை அறிக்கை என்றாலும் ஆண்டு வாரியாக 4 நகல்களில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்    ATTACHMENT1   ATTACHMENT2     PROFORMA

  07.10.2020  

அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு

 MBC  பெண்கல்வி ஊக்கத்தொகை -2020-2021  ஆம் கல்வியாண்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த  6 ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ 72000/- க்கு மிகாமல் உள்ள மாணவியர்களின் எண்ணிக்கையை  ONLINE SHEET  இல்  நாளை காலை 11.00 மணிக்குள்  உள்ளீடு செய்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

.  ONLINE SHEET 

 07.10.2020   

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

தங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள  ONLINE SHEET  இல் எந்த ஒரு விவரமும் விடுபடாமல் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

ATTACHMNET ON LINE SHEET 

Monday 5 October 2020

 06.10.2020  

அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு

6 வகுப்பு பயிலும் MBC  ஊக்கத்தொகை -2020-2021  ஆம் கல்வியாண்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மாணவியருக்கு பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கிட இணைப்பில் உள்ள ONLINE SHEET  ல் இன்று (06/10/2020) மாலை 5.00 மணிக்குள்  உள்ளீடு செய்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் சாதி சான்று நகல் மற்றும் வருமான சான்று  தயார் நிலையில் வைத்துக்கொண்டு உள்ளீட்டுப் பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  

ONLINE SHEET 

  05.10.2020    //கடைசி நினைவூட்டல்//  மிக மிக அவசரம் //

ஆதி திராவிடர் நலம் – 2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற SC/ST மாணவிகளுக்கு பெண்கல்வி உதவித் தொகை வழங்கியமைக்கான பயனீட்டு சான்று (Utilization Certificate) மற்றும் பற்றொப்பம்      (Acquittance)  இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை 06.10.2020 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

 

 05.10.2020    // நினைவூட்டல் - 1  // தனிகவனம்  //

  சிறுபான்மையினர் நலம் - இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் நாளது வரை கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ்  பதிவு செய்யப்படாமல் உள்ளது . எனவே மேற்படி பள்ளிகளுக்கு எதிர்வரும் 06.10.2020 அன்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால்  இணைப்பில் கண்டுள்ள  அனைத்து பள்ளிகளும்  வந்து கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பதிவு செய்யமாறு  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  

ATTACHMENT 

Saturday 3 October 2020

 03.10.2020

 அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

02.06.2019 முதல் 30.04.2020 முடிய அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சார்பாக இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து asecceo1@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05.10.2020 அன்று முற்பகல் 11.00 மணிக்குள் அனுப்பி விட்டு தலைமை ஆசிரியரால் கையொப்பமிட்ட நகலினை  05.10.2020 மாலை 03.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி  அலுவலர் அலுவலகத்தில் ஆ2 பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ஓய்வு பெற்றவர்கள் எவரும் இல்லை எனில் அதே படிவத்தில் இன்மை அறிக்கையினை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நகலினை இவ்வலுவலகத்தில் 05.10.2020 மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

 03.10.2020 

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்/ முதல்வர்களின் கவனத்திற்கு 

பெருந்தலைவர் காமராசர் - இணைப்பில் உள்ள செயல்முறை கடிதம் மற்றும் அரசாணையின் நிபந்தணையின்படி 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 07.10.2020 க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com )  அனுப்பிவிட்டு அதன் பிரதியை 3 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ATTACHMENT1  ATTACHMENT2 

  03.10.2020    // மிக மிக அவசரம்//

அனைத்து அரசு / நிதியுதவி / வனத்துறை / ஆதிதிராவிடர் நலத்துறை  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2019 -2020  ஆம் கல்வியாண்டில் LKG   முதல் 12 ஆம் வகுப்பு வரை  30.09.2019 நிலவரப்படி மற்றும் 2020 - 2021  ஆம் கல்வியாண்டில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி கல்வி பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 01.10.2020 பிற்பகல் 04.00 மணிக்குள்  தனி நபர் மூலம் 2 நகல்களில்  இவ்வலுவலக ஆ2 பிரிவில்   ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்நாள் வரை இணைப்பில் கண்ட பள்ளிகளில் இருந்து விவரங்கள் பெறப்படாததால் தொகுப்பு அறிக்கை தயார் செய்ய இயலாத நிலையில் உள்ளது. எனவே இணைப்பில் கண்ட பள்ளிகள் இன்று (03.10.2020) மாலை 04.00 மணிக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT  

ATTACHMENT2 SCHOOL LIST  

Friday 2 October 2020

 03.10.2020    //தனிகவனம் //

  சிறுபான்மையினர் நலம் - இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் நாளது வரை கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ்  பதிவு செய்யப்படாமல் உள்ளது . எனவே மேற்படி பள்ளிகளுக்கு எதிர்வரும் 06.10.2020 அன்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால்  இணைப்பில் கண்டுள்ள  அனைத்து பள்ளிகளும்  வந்து கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பதிவ செய்யமாறு  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  

ATTACHMENT 

Thursday 1 October 2020

 

01.10.2020   // மிக அவசரம் //

அனைத்து வகை நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

01.06.2019 முதல் 30.04.2020 முடிய அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில், உபரி பணியிடத்தி்ல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விவரம் (மாத வாரியாக) இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அதன் நகலினை 03.10.2020 அன்று காலை 10.00 மணிக்கு தனி நபர் மூலமாக இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி தாளாளர்கள் / செயளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


நிதியுதவி பெறும் பள்ளிகள்

1. புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி,  ஜோலார்பேட்டை.
2. உபைபாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
3. தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
4. டான்  போஸ்கோ மேல்நிலைப்பள்ளிஜோலார்பேட்டை.
5. மேரி இமாக்குலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
6. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
7. புனித சார்லஸ் மேல்நிலைப்பள்ளி அத்தனவுர்.   
8. அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளி திருப்பத்தூர்.
9. இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
10. TMS மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.

 01.10.2020   // கடைசி நினைவூட்டல் //

சிறப்பு ஊக்கத்தொகை - அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 -2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டி இணைப்பில் உள்ள அனைத்து பள்ளிகளும் EMIS  இணையதளத்தில் UPDATE  செய்யப்பட வேண்டும் மேலும் இணைப்பிலுள்ள படிவத்தில் விடுப்பட்ட கலங்களை இதுவரை பூர்த்தி செய்யாத பள்ளிகள் இனியும் காலந்தாழ்த்தாமல் உடன் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT