Friday 28 February 2020

28.02.2020       //  தேர்வுகள் அவசரம் //

அனைத்து உயர்நிலை /மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

மார்ச் - 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு / இடைநிலை பொதுத் தேர்வுகள் நடைபெறும் நாட்களில் தேர்வுக்கு வருகைப் புரியாதோர் விவரத்தினை இணைப்பில் கண்ட அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தின் வழியாக பதிவேற்றம் செய்யுமாறு  தெரிவிக்கலாகிறது. ATTACHMENT

Thursday 27 February 2020

27.02.2020
 அனைத்து அரசு  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2019-2020 ஆம் நிதியாண்டிற்கான பயணப்படி, சில்லரை செலவினம் , அஞ்சல் வில்லை நிதி ஒதுக்கீடு  பகிர்ந்தளிக்கப்பட்டு செலவினம் மேற்கொள்ள ஆணை வழங்கப்படுகிறது.  இச்செலவினம்  31.03.2020 க்குள்  மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .ATTACHMENT 
27.02.2020
 அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின்  கவனத்திற்கு 
 முதன்மைக்கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / அறைக்கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கான அறிவுரைகள் அடங்கிய கையேடு மற்றும்  தேர்வு துறைக்கான அடையாள அட்டை ஆகியவற்றை 28.02.2020 அன்று நண்பகல் 12.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில்,  பள்ளியில் பணிபுரியும்  ஏதேனும் ஒரு ஆசிரியர் / பணியாளர் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
27.02.2020  // தேர்வுகள்  //
 அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 

  மார்ச் 2020 - மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு மையங்கள்  - தேர்வறைகள் ஒதுக்கீடு செய்வது சார்பான தேர்வுகள்  இயக்குநர் அவர்களின் கூடுதல் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

27.02.2020  //தேர்வுகள் அவசரம் //
 மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் -2020 ல் முதன்மைக்கண்காணிப்பாளராக செயல்படும் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இணைப்பில் உள்ள ஆன்லைன் (ONLINE EXCEL SHEET ) தாளில் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலரால் அறைக்கண்காணிப்பாளராக பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் இதுநாள் வரை தங்கள் மையத்தில் ஆஜராகாத ஆசிரியர்களின் பெயர்களை இன்று மாலை 05.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ONLINE SHEET
27.02.2020
 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 தமிழ்நாடு பொது சார்நிலைப்பணி -ஓட்டுநர் பணியிடத்திற்கு முன்னுரிமைப் பட்டியல்  இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி  இணைப்பில்  உள்ள படிவத்தினை  பூர்த்தி செய்து  தனிநபர் மூலம் அ1 பிரிவில்  நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT   ATTACHMENT
27.02.2020   // தேர்வுகள் அவசரம்//

 மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்-  2020 ல் நடைபெறும்  தேர்வு அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
தவறும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தாங்களே பொறுப்பு எற்க நேரிடும் என்பதை தெரிக்கலாகிறது. 

Wednesday 26 February 2020

26.02.2020  // SSLC  செய்முறை பொதுத் தேர்வு //

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

SSLC - மார்ச் /ஏப்ரல் - 2020 செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேடு மட்டும் SEAL  செய்யப்பட்ட  உறையில் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இன்று 26.02.2020 மாலைக்குள்  ஒப்படைக்கவும்.

உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் சார்பான படிவங்களை வேலூர் கல்புதூர் அரசு உதவி இயக்குநர்  அலுவலகத்தில்  ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tuesday 25 February 2020

26.02.2020       // தேர்வுகள் அவசரம் //
         மேல்நிலை இரண்டாம் அண்டு வரலாறு பாடத் தேர்வெழுதும் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் / உதவி தலைமையாசிரியர்கள் உலக வரைபடத்தை வேலூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 26.02.2020 அன்று மாலை 05.00 மணிக்குள்  நேரில் பெற்றுச் செல்லுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
25.02.2020

அனைத்து மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வு  முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரின் கவனத்திற்கும் 
தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  தேர்வு மைங்களில் 26-02-2020 காலை 10.00 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று பொறுப்பினை ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். 
26-02-2020 அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர்நிலை /  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Monday 24 February 2020

25.02.2020  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் சாரண சாரணீய இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவல் அவர்களின் பிறந்த நாள்  “ உலக சிந்தனை நாள் ” ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே சாரண சாரணீய மாணவர்களின் “உலக சிந்தனை நாள்” பேரணி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் துவக்கி வைக்கப்பட உள்ளது. எனவே திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் இப்பேரணியில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. சாரண சாணீய மாணவர்கள் மற்றும் சாரண ஆசிரியர்கள் முழு சீருடையில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

நாள்                                                : 27.02.202  வியாழக்கிழமை

நேரம்                                             : காலை 8 மணி

பேரணி புறப்படும் இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர்

வழி                                                  : தூய நெஞ்சக் கல்லூரி

பேரணி வந்து சேருமிடம் : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
25.02.2020    // தேர்வுகள் அவசரம் //

 அனைத்து மேல்நிலை தேர்வு முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 
மார்ச் 2020 - மேல்நிலை தேர்வுக்கான அறைக்கண்காணிப்பாளர் ஆணையினை இன்று (25.02.2020) பிற்பகல் 02.00 மணி முதல்  மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

24.02.2020     // நினைவூட்டல் //

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மார்ச்/ ஏப்ரல் 2020 , இடைநிலை , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - தேர்வுப் பணிக்கான  கையேடுகள் 
ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT   ATTACHMENT
ATTACHMENT

Sunday 23 February 2020

24.02.2020 

செய்முறைத்தேர்வுகள் பத்தாம் வகுப்பு - அனைத்து வகை அரசு / நிதியுதவி /  மெட்ரிக் / உயர் நிலை மற்றும்  மேல்நிலைப்பள்ளி செய்முறை தேர்வு தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு பிப்ரவரி  2020 செய்முறை தேர்வுக்கான படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளது.  ATTACHMENT 
24.02.2020
 அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
பிப்ரவரி 2020 ஆசிரியர்கள்  மற்றும் பணியாளர்களின் சம்பள பட்டியல்  (INCOME TAX)  சரியாக இருக்கும் பட்சத்தில் இன்று மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர் சார்ந்த கருவூலத்தில் சமர்பிக்க தெரிவிக்கலாகிறது.  இன்று மாலைக்குள் சமர்பிக்கப்படும் பட்டியல்கள் மட்டுமே இந்த மாத ஊதியத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கலாகிறது.பின்னர் சமர்ப்பிக்கப்படும் பட்டியல்கள் 01.03.2020  ம் தேதிக்கு மேல் ஊதியம் பெற இயலும் என திருப்பத்தூர்  சார் கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார் .
24.02.2020     அனைத்து  அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

இடைநிலை மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகள் மார்ச் / ஏப்ரல் 2020 - தேர்வு மையங்களுக்கு முதன்மை விடைத் தாட்கள் மற்றும் வரைபடம் வழங்குதல் தொடர்பாக இணைப்பில் கண்ட அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Friday 21 February 2020

21.02.2020
 அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்துதட்டச்சர் நிலை III - 31.03.2020 நிலவரப்படி காலியாக /காலி ஏற்படவுள்ள  பணியிடங்களின் விவரங்களை (தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்படவுள்ளதால்) இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 24.02.2020 அன்று  காலை 11.00 மணிக்குள் திருப்பத்தூர்  மாவட்டக்கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில்  நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலிப் பணியிடங்கள் இல்லை எனில் இன்மை அறிக்கை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Thursday 20 February 2020

21.02.2020     // மிக மிக அவசரம் // தனிகவனம் //

 அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


ஆதிதிராவிடர் நல ஆணையரின் கடிதத்தில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 3  ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை சம்மந்தப்பட்ட மாணவிகளின் வங்கி கணக்குகளில் அல்லது அவரது தாயார் பெயரில் தொடங்கப்பட்ட அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் மட்டுமே கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே இணைப்பில் உள்ள படிவத்தில் மாணவிகளின் விவரத்தினை பூர்த்தி செய்து 3 நகல்களில்  இவ்வலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் 24.02.2020  அன்று மாலைக்குள்  நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

குறிப்பு: குறுந்தகட்டில்  பதிவு செய்து 24.02.2020 அன்று மாலைக்குள் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


20.02.2020     // மிக மிக அவசரம் // தனிகவனம் //
 அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
ஆதிதிராவிடர் நல ஆணையரின் கடிதத்தில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 3  ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை சம்மந்தப்பட்ட மாணவிகளின் வங்கி கணக்குகளில் அல்லது அவரது தாயார் பெயரில் தொடங்கப்பட்ட அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் மட்டுமே கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே இணைப்பில் உள்ள படிவத்தில் மாணவிகளின் விவரத்தினை பூர்த்தி செய்து 3 நகல்களில்  இவ்வலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் 24.02.2020  அன்று மாலைக்குள்  நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT, ATTACHMENT

20.02.2020  அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

நடைபெறவுள்ள SSLC,  +1, +2   தேர்வுகளில் தமிழ் மொழி அல்லாத பிற மொழிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவங்களில் (SSLC,  +1, +2  தனித் தனித் தாள்களில் வழங்க வேண்டும் )  இன்று மாலைக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் வழங்க வேண்டும். பிற மொழிகளில் தேர்வு எழுதும் மாணவர்கள் இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாமல் அனுப்பப்பட வேண்டும். ATTACHMENT
20.02.2020
 அனைத்து மெட்ரிக் / சி.பி.எஸ்.சி. பள்ளி முதல்வர் / தாளாளர்களின் கவனத்திற்கு
 2020 -2021 ஆம்  கல்வியாண்டில் பள்ளிகளுக்கான நுழைவு நிலை வகுப்பில்      25 % சதவிதம்  குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009 ன்படி மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்திணை பூர்த்தி செய்து தனி நபர் மூலம் 21.02.2020 அன்று காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில்  நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
20.02.2020    பொது தேர்வுகள்   // மிக அவசரம்  //

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொது தேர்வுக்கான வினாத்தாட்களின் எண்ணிக்கையினை திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 21.02.2020  காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிக்குள் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday 19 February 2020

20.02.2020  அனைத்து   அரசு / அரசு நிதியுதவி பெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும்  பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கவனத்திற்கு,

IFHRMS, - ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் வேலூர் மாவட்டத்தில் 01.03.2020 முதல் நடைமுறைப்படுத்துதல் - அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது -  01.03.2020 முதல் IFHRMS மூலமாக மட்டுமே ஊதியம் மற்றும் பிற வகைப் பட்டியல்கள் ஏற்பளிக்கப்பட உள்ளது. எனவே, இத்திட்டத்தின் மூலம் அனைத்து வகை பட்டியல்களும் அனுப்பிட நடவடிக்கை மேற்கொண்டு  தயார் நிலையில் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தினை அலுவலகத்திற்கு 25.02.2020 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் தொடர்பான தொழில் நுட்ப ஐயப்பாடுகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட சார்நிலைக் கருவூல அலுவலரை அணுகிடுமாறும் தெரிவிக்கலாகிறது.  ATTACHMENT
20.02.2020
   இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
முதலமைச்சர் 2019  கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இணைப்பில் குறிப்பிட்டஇடங்களில் 21.02.2020 முதல் 22.02.2020 வரை   நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள உடற்கல்வி ஆசிரியர்களின் பட்டியல் இணைக்கப்படுகிறது. இவர்களை 20.02.2020 பிற்பகல் விடுவித்து அனுப்ப  சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

20.02.2020               // தேர்வுகள் அவசரம் //
 அனைத்து  அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 இன்று  20.02.2020 நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு செய்முறை  பொதுத் தேர்வுக்கான (INTERNAL / EXTERNAL) ஆசிரியர் நியமனம் தொடர்பான தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நாளை 21.02.2020 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு திருப்பத்தூர் டோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது .
  வரும்போது பள்ளியின் அனைத்து ஆசிரியர் / பணியாளர்களின் பெயர் பட்டியலுடன்  பிப்ரவரி மாத வருகை பதிவேட்டின்  நகலினையும்   கொண்டுவரவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
19.02.2020       // மிக மிக அவசரம் // 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் 2014 - 2015 ஆம் கல்வியாண்டு முதல் 2019 - 2020 ஆம் கல்வியாண்டு வரை பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற்று வழங்கிய விவரத்தினை ONLINE SHEET இல் உள்ளீடு செய்யும்படி பலமுறை வலியுறுத்தியும் கீழ் கண்ட பள்ளிகள் இதுவரை உள்ளீடு செய்யாமல் உள்ளது மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது. இதனால் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனியும் காலதாமதத்திற்கு இடமளிக்காமல் உடனடியாக ONLINE SHEET இல் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.    
19.02.2020
  அனைத்து  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 பவானி சாகர்  அடிப்படைப் பயிற்சியில் கலந்துகொள்ள தகுதியுள்ள    இளநிலை  உதவியாளர் / உதவியாளர் (நேரடி நியமனம் உட்பட ) இணைக்கப்பட்ட படிவத்தில்  மருதம் FONT  ல் பூர்த்தி செய்து இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Tuesday 18 February 2020

19.02.2020
 மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2020 - தேர்வு மைய தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 - தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத்திட்டம் - பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT1 . ATTACHMENT1 
19.02.2020
 அனைத்து  வகை  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 மார்ச் 2020 - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணாக்கருக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை ( HALL TICKET ) பதிவிறக்கம் செய்தல் சார்பான அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 1, ATTACHMENT 2 
19.02.2020
    அனைத்து  வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் - சரிபார்த்தல் - பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளுதல் 20.02.2020 முதல் 24.02.2020 வரையிலான நாட்களில்    அரசுத் தேர்வுகள்  துறை இணையதளத்திற்கு (WWW.dge.tn.gov.in )  சென்று தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளிக்கான User ID  மற்றும் Password- ஐ பயன்படுத்தி பதிவேற்றம் செய்திட வேண்டுமென   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு  அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களின் அலைபேசி எண்  அல்லது கீழ்க்குறிப்பிட்டுள்ள அரசுச் தேர்வுகள் இயக்கக தொழில்நுட்பப்பிரிவின் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள  வேண்டும்  . 9498383073 , 9498383074 , 9385494105  ATTACHMENT 
19.02.2020

 தூய நெஞ்சக் கல்லூரி உளவியல் துறை மற்றும் விரிவாக்க கல்வி  மற்றும் சேவைகள் துறை இணைந்து இரண்டு நாள் பள்ளி மாணவர்களுக்கான மனநல கண்காட்சி  நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. சிவன் அருள் தலைமைத்தாங்கி துவக்கி வைக்க உள்ளார் . இதில்   இணைப்பில் உள்ள  சார்ந்த பள்ளிகள் குறிப்பிட்ட நாளில் அனைத்து 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் ஒரு பொறுப்பாசிரியர் தலைமையில் கலந்துக்கொள்ள   பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
குறிப்பு . அரசு பள்ளிகளுக்கு  05. K.M  அதிகம்  உள்ள பள்ளிகளுக்கு மட்டும் போக்குவரத்து வசதி செய்து தரப்படும்

18.02.2020      // தனிகவனம் //  அவசரம் //
 அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மேல்நிலைப் பொதுத் தேர்வு மார்ச் - 2020 க்கான முதன்மைக்கண்காணிப்பாளர் , துறை அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களுக்கான நியமன ஆணைகளை  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் இன்று (18.02.2020) மாலை 04.30 மணிக்கு மேல் நேரில் வந்து பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

Monday 17 February 2020


17.02.2020
அனைத்து  உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
நடைபெறவுள்ள மார்ச் 2020  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு வெற்று முதன்மை விடைத்தாள் தங்கள் தேர்வு மையங்களுக்கு தேவையான   வெற்று விடைத்தாட்களை  20.02.2020 அன்று  திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 வரை வழங்கப்படவுள்ளது. எனவே அனைத்து உயர்/  மேல்நிலைப்பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள்  / உதவி தலைமை ஆசிரியர்கள் மேற்படி  தேதியில்  வெற்று முதன்மை விடைத்தாட்களை நேரில் பெற்றுச் செல்ல வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Friday 14 February 2020

14.02.2020
 அனைத்து  வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் - சரிபார்த்தல் - பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளுதல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை பின்பற்றுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Thursday 13 February 2020

14.02.2020
அனைத்து மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்/ தாளாளர் / முதல்வர்கள் கவனத்திற்கு
 இணைப்பில் உள்ள RTE 2009 -  சார்பான படிவத்தினை பூர்த்தி செய்து 17.02.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில்  தனிநபர் மூலம்  2 நகல்கள் நேரில்  ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
13.02.2020
 ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு  - வட்டாரக்கல்வி அலுவலர் பதவிக்கான இணையவழி தேர்வு 14.02.2020 முதல் 16.02.2020 வரை நடைபெறவுள்ளது. இதில் சொல்வதை எழுதுபவர்  (Scribe) பணியாணை இணைப்பில் கண்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும்  சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Tuesday 11 February 2020

12.02.2020
 அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
மார்ச்/ ஏப்ரல் 2020 , இடைநிலை , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - தேர்வுப் பணிக்கான  கையேடுகள் 
ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT  ATTACHMENT   ATTACHMENT
ATTACHMENT
12.02.2020
 அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 - முதன்மை விடைத்தாட்கள் வழங்குவதற்கான  அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின்   இணைப்பில் உள்ள  அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
12.02.2020
 அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 - +1  Arrear   தேர்வர்களுக்கு  செய்முறைத்  தேர்வு நடத்துதல், இணைப்பில் உள்ள  அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் உள்ள அறிவுரைகளை  பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
11.02.2020  // தனிகவனம் // மிக மிக அவசரம் //

அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தேசிய கல்வி உதவித் தொகை (National Scholarship Portal) இணைய வாயிலாக பதிவு செய்யாத இணைப்பில் உள்ள பள்ளிகள் உடனடியாக Institute Nodal Officer Registration Form பதிவு செய்து சமர்ப்பித்தவுடன் சரிபார்ப்பு படிவத்தினை இரண்டு நகல் எடுத்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று உடனடியாக வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT- 1  ATTACHMENT - 2
11.02.2020  // தனிகவனம் // மிக மிக அவசரம் //

அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ATTENDANCE APP - EMIS ல் மாணவர்கள்,  ஆசிரியர்கள் - ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் வருகைப் பதிவு புதிய பதிப்பு இணைப்பில் கண்ட செயல்முறைகளை பின்பற்றி தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT
11.02.2020
  அனைத்து  வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
10.02.2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில்  வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மார்ச் 2020 ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான (அரையாண்டு பொதுத்தேர்வில் 1/2/3/ பாடங்களில் தவறிய ) சிறப்பு பயிற்சி வகுப்புகள் இணைப்பில் உள்ள மையங்களில் நடைபெற உள்ளதால், தங்கள் பள்ளியில்  பயிலும் மெல்ல கற்கும்   மாணவர்களை தகுந்த  ஆசிரியரின்  பாதுகாப்போடு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT
11.02.2020   நினைவூட்டல் - 01.  // மிக மிக அவசரம் //

அனைத்து வகை அரசு /அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு PRE MATRIC மற்றும் POST MATRIC  புதுப்பித்தல் (RENEWED) விண்ணப்பங்களை 14.02.2020 க்குள் சமர்ப்பிக்க ( SUBMIT ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
11.02.2020
                                         மாவட்டக்கல்வி அலுவலர், திருப்பத்தூர்
                                               ந.க.எண். 372/அ2/2020 நாள்,11.02.2020
 கீழ்கண்ட பள்ளிகள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கோரப்பட்ட விவரங்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்தில் 13.02.2020  மாலைக்குள் அ2 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி தாளாளர்/ செயலர்க்கு தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அனுப்பவேண்டிய முகவரி
  T.C.  அருள்மொழி
நகரத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி, 
நெ.8/8 தர்மராஜா கோயில் தெரு,
திருப்பத்தூர் மாவட்டம்

பள்ளியின் விவரம்
1.DOMINIC SAVIO HSS TIRUPATTUR
2 . MARY IMMACULATE HSS THIRUPATTUR
3 . UBAIBAS (G) HSS TIRUPATTUR
4. DON BOSCO HSS JOLARPET
5.OSMANIA HSS TIRUPATTUR
6.ST CHARLES HSS ATHANAVOOR YELAGIRI
7. ST JOSEPHS (G) HSS JOLARPETTAI
 
 
 

Monday 10 February 2020

11.02.2020     // மிக மிக அவசரம்//
 அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு நாப்கின் VENDING MACHINE   தேவைப்படும் பள்ளிகள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 11.02.2020 பிற்பகல் 02.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deottr@nic.in)  அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
11.02.2020

  ஊரக திரணறிவுத் தேர்வில் 2017 -2018   மற்றும் 2018 - 2019  ஆண்டில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் கீழ்கண்ட பள்ளிகளில் தொடர்ந்து படித்து வருகிறார்கள் என்ற சான்று மாவட்டக்கல்வி அலுவலகத்தில்  ஒப்படைக்குமாறு    தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
1. பெரியகண்ணாலப்பட்டி
2 . ஆதியூர்
3. நத்தம்
4 . கெஜல்நாயக்கன்பட்டி(ஆண்கள்)
5 . பெரியகரம்
6 . வக்கணம்பட்டி
7. வெங்களாபுரம்
8 . சின்னகம்மியம்பட்டு
9 . ஜம்மனபுதூர் பூங்குளம்
11.02.2020
                                மாவட்டக்கல்வி அலுவலர் திருப்பத்தூர் 
                                   ந.க.எண். 399 / அ2/2020 நாள்  /02/2020 

 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் குழு காப்பீட்டு திட்டத்தில் உள்ள பணியாளர்கள் எண்ணிக்கை மற்றும் மாதாந்திர சந்தா தொகை அரசுக்கணக்கில் செலுத்திய  விவரம்  இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து  13.02.2020 அன்று மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
                                                                                                      மாவட்டக்கல்வி அலுவலர்,
                                                                                                                    திருப்பத்தூர்

1 . DOMINIC SAVIO HSS TIRUPATTUR
2 . MARY IMMACULATE HSS THIRUPATTUR
3 . RAMAKRISHNA HSS TIRUPATTUR 
4 . TMS HSS TIRUPATTUR 
5 . UBAIBAS (G) HSS TIRUPATTUR
6 . DON BOSCO HSS JOLARPET
7 . OSMANIA HSS TIRUPATTUR
8 . ST CHARLES HSS ATHANAVOOR YELAGIRI
9 . ST JOSEPHS (G) HSS JOLARPETTAI 
10 . GOVT GARDEN HS TIRUPATTUR

10/02/2020
  அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
நடைபெறவுள்ள மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுக்கு வெற்று முதன்மை விடைத்தாள் தங்கள் தேர்வு மையங்களுக்கு தேவையான   ( +1 மற்றும்  +2 ) வெற்று விடைத்தாட்களை  15.02.2020 அன்று  திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 வரை வழங்கப்படவுள்ளது. எனவே அனைத்து மேல்நிலைப்பள்ளி ( +1 மற்றும்  +2) தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள்  / உதவி தலைமை ஆசிரியர்கள் மேற்படி  தேதியில்  வெற்று முதன்மை விடைத்தாட்களை நேரில் பெற்றுச் செல்ல வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Thursday 6 February 2020

07.02.2020
 அனைத்து  +1  செய்முறை தேர்வு மைய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 மார்ச் 2020  மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) செய்முறை  தேர்வு வினாத்தாள்கள்   திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் இருந்து   இன்று 07.02.2020   பிற்பகல் 02.00 மணிக்கு பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், மேலும்  தலைமை ஆசிரியர் அல்லாத பிற ஆசிரியர்கள்  வரும்போது ஆளரிச்சான்றுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
06.02.2020
னைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
ள்ளி இறை வணக்க கூட்டத்தின்போது கொரோனா வைரஸ் காய்ச்சல்(nCov - 2019), நோயின் அறிகுறிகள், கொரோனா வைரஸ் பரவும் விதம், நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவ/ மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday 4 February 2020

05.02.2020          //  மிக அவசரம் //

அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,


பள்ளியில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இன்று பிற்பகல் 01.00 மணிக்குள் தனிநபர் மூலம் மூன்று நகல்களில் இவ்வலுவலக ஆ2 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பணியிடம் அனுமதிக்கப்பட்ட அரசாணை நகல் மற்றும் தொடர்நீட்டிப்பு அரசாணை நகல்,  அளவுகோல் பதிவேட்டின் நகல் இணைத்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் இல்லாத பள்ளிகள் இணைப்பில் காணும் படிவத்தில் இன்மை அறிக்கையினை இவ்வலுவலக மின்னஞ்சலில் (deottr@nic.in) பிற்பகல் 01.00 மணிக்குள் அனுப்பிவிட்டு அதன் நகலினை ஆ2 பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தொகுப்பறிக்கை இன்று மாலை சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால் எவ்வித சுணக்கமும் இன்றி விவரங்கள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2 
04.02.2020
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
இணைப்பில் உள்ள அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுள் எவரேனும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம் போதிக்கவில்லை எனில் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் 06.02.2020  அன்று காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
04.02.2020
 ஊரகப் பகுதியிலுள்ள அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களிடையே தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் விழிப்புணர்வு போட்டிகள் இணைப்பில் கண்டுள்ள நாட்களில் நடத்தி  வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை ஒருங்கிணைந்த  தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT
04.02.2020
 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை - திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு  உதவித்தொகை வழங்க  05.02.2020 அன்று காலை 10.30 மணியளவில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளதால், தங்கள் பள்ளியில் பயிலும்  மாற்றுத்திறனாளி மாணவர்களை ஒரு பொறுப்பாசிரியருடன்  தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Monday 3 February 2020

03.02.2020  // மிக மிக அவசரம் // 

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம் 2019 - 2020 ஆம் கல்வியாண்டு PRE MATRIC, POST MATRIC கல்வி உதவித் தொகை திட்டம் - அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டு 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயின்று இணைய வழியில் விண்ணப்பித்திருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களின் புதுப்பித்தல் செய்யப்பட்ட (Renewal)  விண்ணப்பங்களை 05.02.2020 க்குள் இணைய வழியில் சமர்ப்பிக்க      (Submit) செய்யுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT- 1, ATTACHMENT - 2
03.02.2020
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு மார்ச் 2020 செய்முறைத்தேர்வு - கீழ்கண்ட அரசு தேர்வு இயக்குநர் சென்னை அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT.1.     ATTACHMENT.2
03.02.2020  அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

IFHRMS சார்பாக DATA VALIDATION  மற்றும்  DATA SIGNATURE  சரிபார்த்தல் சார்பான வகுப்பு 04.02.2020 மாலை 2.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளியில் WIPRO  ஊழியர் மற்றும் திருப்பத்தூர் சார் கருவூல அலுவலரால் பயிற்சி நடத்தப்பட உள்ளது. எனவே பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர் மற்றும் கணினி தெரிந்த நபர் என பள்ளிக்கு இருவர் வீதம் இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள பணியாளர்களை விடுவிக்க வேண்டி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த வகுப்பை பயன்படுத்தி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் விவரங்களை தவறில்லாமல் உள்ளீடு செய்தால் மட்டுமே ஊதியம் பெறுவதில் சிரமம் தவிர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் வரும் போது    பணியாளர்களின்  SALARY STATEMENT , SCALE REGISTER  மற்றும் NUMBER STATEMENT   உடன் கொண்டுவர தெரிவிக்கலாகிறது. 

 03.02.2020
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 மிகமிக அவசரம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டு பவானி சாகர் பயிற்சி முடிக்காதவர்களின் விவரத்தினை திருப்பத்தூர்  மாவட்டக் கல்வி அலுவலக கீழ்காணும் கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு உடன் தெரிவிக்குமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  சி.செந்தில்குமார் 9443035514, 8610714765. இருக்கைப்பணி கண்காணிப்பாளர் 
03.02.2020

             திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
                                     ந.க.எண் .151/அ5/2020  நாள் 30.01.2020

 இணைப்பில் கண்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைக்கடிதத்தின் படி JRC  போட்டிகள் பள்ளி  அளவில் நடத்தப்பட்டு கல்வி மாவட்ட அளவிளான போட்டிகள் திங்கட்கிழமை (03.02.2020 ) காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர், இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.  இதில் வெற்றி பெற்ற கீழ் காணும் மாணவர்கள் 04.02.2020  அன்று காலை 10.00 மணிக்கு காட்பாடி SSA  அரங்கில் நடைபெறும் போட்டியில்  கலந்துக்கொள்ளுமாறு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT