Monday 30 September 2019

01.10.2019 - அவசரம் -150ஆவது காந்திஜெயந்தியை முன்னிட்டு திருப்பத்தூர் கல்வி மாவட்டதிற்குட்பட்ட உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள NSS, Scout and Guide, JRC, Green Crop, ECO Club உள்ளிட்ட மன்ற பொருப்பாளர்கள்(Coordinators) -க்கான கூட்டம் திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு ஆட்சியர் அவர்கள் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு ந்டைபெறுவதால் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு அலுவலர்களை விடுவித்து அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். 

Sunday 29 September 2019

30.09.2019 -   அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
  2019 -2020 ஆம் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடம் /ஆங்கிலப் பாடம் ஒரே தாளாக தேர்வு எழுதுதல் - மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டமை - தகவலுக்காக அனுப்பப்படுகிறது.  TAMIL PAPER     ENGLISH  PAPER       
30.09.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெற்று முடிந்த செப்டம்பர் 2019 காலாண்டுத்தேர்வு - தேர்ச்சி அறிக்கையினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து புத்தக வடிவில் 04.10.2019 மாலை 03.00க்குள் தனிநபர் மூலம் (எவ்வித நினைவூட்டுக்கும் இடமின்றி) இவ்வலுவக அ3 பிரிவில் சமர்பிக்க பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. Attachment  2. FORMS 
30.09.2019
 
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 இத்துடன்  இணைத்துள்ள அரசு கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு  2018-2019  to 2019-2020  வரை  11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு இலவச   லேப்டாப்  வழங்கியமை - உரிய பதிவுகள் மேற்கொள்ள கோருதல் சார்பு    ATTACHMENT

Friday 27 September 2019

27.09.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.சி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 2019 - தங்கள் பள்ளியில் ஏதேனும் மாணாக்கர்களின் விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்ப கட்டணம் பதிவேற்றம் செய்யாமல் இருக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 30.09.2019 அன்று ஒருநாள் மட்டும் விடுப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து அதனின்  Summary Report, Fees Receipt, Acknowledgement application for each student-னை இணைத்து வேலூர், கல்புதூர் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அன்றைய தினமே ஒப்படைக்குமாறு அனைத்து வகைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
27.09.2019                   //மிக மிக அவசரம்//
          அனைத்து  அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி  
                                     தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 NMMSS   தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை NSP  இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது  (கல்வி உதவித்தொகை பெற) ஏற்படும் இடையூறுகளுக்கு   இணைப்பில் உள்ள  தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை  கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை கவனமாக பின்பற்றி பதிவேற்றம் / புதுப்பித்தல் பணியை உரிய காலத்திற்குள் நிறைவாக செய்து முடித்திட சார்ந்த பள்ளி  தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
               
        

 27.09.2019
   அனைத்து  அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
    2019 – 2020 ம் கல்வியாண்டிற்கான இரண்டாம் பருவம் விலையில்லா பாடநூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் 30.09.2019 தேதிக்குள் பெற்று வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வழங்கிய விவரங்களை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப தெரிவிக்கப்படுகிறது.  ATTACHMENT

Thursday 26 September 2019

26.09.2019
                                                நினைவூட்டல் - 3                     // மிகவும் அவசரம்//

                                  அனைத்து வகை பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

    ஊரகப் பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல் அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது, என்னென்ன  போட்டிகளில் மாணவ/மாணவிகள் பங்குகொள்கின்றனர் என்கின்ற விவரம் போட்டிகளுக்கான செலவினம் இணைக்கப்பட்டுள்ள  படிவத்தில்  கோரிய விவரங்களை பூர்த்தி செய்து 27.09.2019   அன்று  நன்பகல்  12.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலை    அ 5 பிரிவில்  நேரில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  மறு நினைவூட்டலுக்கு இடம் அளிக்காமல் விரைந்து செயல்பட  தெரிவிக்கலாகிறது. .  ATTACHMENT
26.09.2019
   
            அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள்   கவனத்திற்கு, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின்   (IFHRMS)  கீழ் செயல்முறைப்படுத்துவதற்கான  பயிற்சி 27.09.2019 அன்று  திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணி முதல் நடைபெறும் பயிற்சியில் அனைத்து பள்ளிகளில் இருந்தும் பட்டியல் தயாரிக்கும் (ஊதியம் மற்றும் ஊதியமில்லா பட்டியல்கள்) தகுந்த  நபர்களை பயிற்சியில் பங்குபெற ஏதுவாக விடுவித்து  அனுப்புமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது   ATTACHMENT

          
26.09.2019

நினைவூட்டல் – 1

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு
         பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள்  ( HIGH TECH LAB)  ஏற்படுத்தப்பட்ட விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக 2 பிரிவில் தனிநபர் மூலம் 24.09.2019 மாலைக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இணைப்பில் காணும் 29 பள்ளிகள் சார்பாக விவரங்கள் பெறப்படாத காரணத்தினால் தொகுப்பறிக்கை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்ப இயலாத நிலையில் உள்ளது. எனவே இணைப்பில் காணும் பள்ளிகள் இன்று மாலை 5.00 மணிக்குள் ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Wednesday 25 September 2019


26.09.2019
                             அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 2018-2019  ஆம் ஆண்டு NMMS  தேர்வில்  தேர்ச்சி பெற்ற  மாணவர்களின்  விவரங்களை  NSP  இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை  இணைப்பில் குறிப்பிட்டவாறு பதிவேற்றம் செய்து  இப்பணியை விரைந்து முடிக்குமாறு  தெரிவிக்கலாகிறது   ATTACHMENT


25.09.2019                                                           நினைவூட்டல் - 4

        அனைத்து  வகை  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

 அனைத்து வகை அரசு /நிதியுதவி /மெட்ரிக்  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு  2019 - 2020 ஆம் ஆண்டிற்கான  PTA  செய்தி  சந்தா & இணைப்பு கட்டணத்தை இது நாள் வரை செலுத்தாத இணைப்பில் கண்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  நாளை மாலை  5.00 மணிக்குள்  இவ்வலுவலக ஆ1 பிரிவில்  தனிநபர் மூலம் நேரில்  ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும்  PTA  இணைப்பு கட்டண தொகையை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் நாளை  ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளதால் தலைமை ஆசிரியர்கள் இதன் மீது தனிகவனம் செலுத்தி விரைந்து செயல்படுமாறு  தெரிவிக்கலாகிறது ATTACHMENT

Tuesday 24 September 2019

25.09.2019 - தேர்வுகள் - தனிகவனம் - தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகை திட்டத் தேர்வு 2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - 01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் தேர்விற்கு வெற்று விண்ணப்பங்களை 26.09.2019 முதல் 11.10.2019 வரையில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாணாக்கர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு கட்டணம் ரூ 50/- உடன் 16.10.2019-க்குள் பெற்றுக்கொள்ளவேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் குறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககத்திலிருந்து தகவல் பெறப்பட்டவுடன் இவ்வலுவலக இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என்பதை தெரிவிக்கலாகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணுமாறு அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment 

24.09.2019                                        //  மிக மிக அவசரம்//

           அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி
                                 தலைமை ஆசிரியர் அவர்களின் கவனத்திற்கு 

 NMMS - தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற 2018 - 2019 ஆம் கல்வியாண்டில்  8 ஆம் வகுப்பு பயின்று  NMMS - தேர்வில் தேர்ச்சி பெற்று  2019 - 2020 ஆம் கல்வியாண்டில்  9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களின் விவரங்களை இணையதளத்தில் உடன் பதிவேற்றம் (FRESH REGISTRATION)  செய்து பதிவேற்றம் செய்த  SUMMARY REPORT  இவ்வலுவலக அ5 பிரிவில் 25.09.2019 -க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 மேலும் நடுநிலைப்பள்ளிகளுக்கு அருகில் உள்ள உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் உள்ள மாணாக்கர்கள் தங்கள் பள்ளிகளில் பயில்வதை உறுதி செய்து கொண்டு அம்மாணக்கர்களின் விவரங்களை சரிபார்த்து இணையதளத்தில் உரிய காலத்திற்குள் பதிவேற்றம் செய்திட சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்     ATTACHMENT

Monday 23 September 2019

24.09.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கவனத்திற்கு - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 - புதிய பாடத்தொகுதி குறீயிடு (Group Code) மற்றும் புதிய பாடங்களுக்கான புதிய பாடத்தொகுதி குறியீடு (Subject Code) தெரிவித்தல் சார்பு 
24.09.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2020, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடம் - இருதாள்களாக தேர்வு எழுதும் நடைமுறையை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடைபெறுதலுக்கான அரசாணை - Attachment 

Sunday 22 September 2019


23.09.2019 -  நினைவுட்டல் -2 தேர்வுகள் - தனி கவனம் - அனைத்து வகை அரசு/ நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பிஎஸ்.இ உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - தேசிய திறனாய்வுத் தேர்வு (NTS EXAM 2019) ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட் விவரங்களை (Summary Report and Fees Receipt, Acknowledgement application for each student) 23.09.2019 முதல் 27.09.2019-க்குள் வேலூர், கல்புதூர், மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Friday 20 September 2019

20.09.2019

              அனைத்து அரசு  உயர்/ மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்
                                                            கவனத்திற்கு.
 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான கனவு ஆசிரியர் விருதிற்கு தகுதி வாய்ந்தவர்கள் சார்பாக  கருத்துருக்கள்  30.09.2019 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT 
20.09.2019

  அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்
                                                     கவனத்திற்கு
 பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள்  ( HIGH TECH LAB)  ஏற்படுத்தப்பட்ட விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் 24.09.2019 மாலைக்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT   ATTACHMENT

Thursday 19 September 2019

19.09.2019 - தேர்வுகள் மிக அவசரம் - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு - பள்ளி மாணாக்கர் விவரங்களை பதிவிறக்கம் செய்தல், மாணாக்கர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் 20.09.2019 அன்று ஒருநாள் மட்டும் முதன்மைக்கல்வி அலுவலகத்தின் வழியாக திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவ்வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளுமாறு  அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. 

19.09.2019

     //அவசரம்  - தனிகவனம் //

அனைத்து நிதி உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

ASTPF வைப்புநிதி 2018 -2019 ஆம் ஆண்டிற்கு கணக்குகள் ஒத்திசைவு செய்து விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 20.09.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக  1 பிரிவு எழுத்தரிடம் நேரில்  தனிநபர் மூலம் ஒப்படைக்க தெரிவிக்கலாகிறது. ATTACHMENT

நிதியுதவி பெறும் பள்ளிகள் 

1. புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி,  ஜோலார்பேட்டை.
2. உபைபாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
3. தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
4. டான்  போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.
5. மேரி இமாக்குலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
6. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
7. புனித சார்லஸ் மேல்நிலைப்பள்ளி, அத்தனவுர்.
8. இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
9.  TMS மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
10. அரசு கார்டன் உயர்நிலைப் பள்ளி திருப்பத்தூர்.

19.09.2019
                   அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை 
                                                    ஆசிரியர்கள் கவனத்திற்கு 
 NMMSS  2019-2020 - இக்கல்வியாண்டிற்கு உதவித்தொகை பெற தேர்ச்சி  பெற்ற 9 ஆம் வகுப்பு மாணவர்களின்  விவரங்களை உடனடியாக பெற்று NSP  இணையதளத்தில் 25.09.2019 க்குள் விண்ணப்பிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் NMMSS  தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்கவும்  தெரிவிக்கப்படுகிறது. இப்பொருள் மீது தனிகவனம் செலுத்தி உரிய காலக்கெடுவிற்குள் பதிவேற்றம் செய்திட தலைமை ஆசிரியர்களின் பொறுப்பாகும் 
19.09.2019
               அனைத்து உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் 
                                          கவனத்திற்கு.
கோவை மண்டல துறை தணிக்கை:  செப்டம்பர்  - 2019 மாதம் நடைபெறுகின்ற பள்ளி தணிக்கையின்  போதே நிலுவையில் உள்ள தணிக்கைத்தடைகள் நிவர்த்தி செய்யப்பட உள்ளதால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி தணிக்கை தடை நிலுவைகளை  சம்பந்தப்பட்ட  தணிக்கை கண்காணிப்பாளர்களை தொடர்பு கொண்டு நீக்கம் செய்து கொள்ள தெரிவிக்கலாகிறதுATTACHMENT
19.09.2019

   அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

 இணைப்பில் உள்ள சென்னை பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி இடைநிற்றல் மாணவர்களின் விவரம் சார்ந்த அறிக்கையினை 20.09.2019 க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT
19.09.2019
         
               அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக்கல்வி 
                                      அலுவலர்களின் கவனத்திற்கு.
 டெங்கு காய்ச்சல் - விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் - இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு  முறைகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தவறாது பின்பற்றுமாறு அறிவுருத்தி  முன்நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுருத்தப்படுகிறது. ATTACHMENT




Wednesday 18 September 2019

19.09.2019
   
 திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும்  மெட்ரிக் பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சியினை பள்ளியளவில்  05.10.2019 க்குள் முடித்திடவேண்டுமாய் அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்/முதல்வர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்கண்காட்சியில் பள்ளிவாரியாக தேர்வு செய்யப்படும் அறிவியல்  படைப்பினை வரவிருக்கும் 10.10.2019 அன்று கல்வி மாவட்ட அளவிலான கண்காட்சியில் காட்சிப்படுத்த தகுந்த ஏற்பாட்டினை செய்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
18.09.2019
              அனைத்து அரசு / தொடக்கக்கல்வி /உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி 
                               தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

 வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகளின்படி வாக்காளர்கள் விவரத்தினை சர்பார்த்து அதன் அறிக்கையின்  படிவத்தினை உடன் அனுப்பிவைக்கமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTCHMENT
18.09.2019 - தகவல் மிக அவசரம்  - அனைத்து வகை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் கவனத்திற்கு - தங்கள் பள்ளியில் இறுதியாக பெறப்பட்ட தற்காலிக தொடர் அங்கீகார ஆணையின் நகலினை இரு நகல்களில் (02 Copy) இவ்வலுவலக அ4 பிரிவில் தனிநபர் மூலமாக (19.09.2019) வியாழன் காலை 10.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் மற்றும் தாளாளர்களுக்கு தெரிவிக்கலாகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்படுள்ள EMIS இணையதள பதிவேற்ற சார்பான சான்றினை மூன்று (03 Copy) நகல்களில் ஒப்படைக்கவும் தெரிவிக்கலாகிறது. சான்று
18.09.2019  அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும்                          மெட்ரிக் CBSC பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்                                             கவனத்திற்கு

பாரத சாரண சாரணியம் தமிழ்நாடு - இந்த ஆண்டிற்கான சாரண மாவட்ட பொதுக்குழு கூட்டம் வருகின்ற 19.09.2019 (வியாழன்) ஆம் தேதி மாலை 2.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் இணைப்பில் குறிப்பிட்டுள்ள படி  அனைத்து சாரண சாரணிய  ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள்/பொறுப்பாசிரியர்கள்  கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டும், என தெரிவிக்கலாகிறது. ATTACHMENT  

Tuesday 17 September 2019

  
17.09.2019   அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/வட்டார கல்வி அலுவலர்கள்  கவனத்திற்கு

           வன உயிரின வார விழா:  அக்டோபர் 19 ம் மாதம் முதல் வாரம் வன உயிரின வார விழா சிறப்பாக கொண்டாட மாவட்ட அளவில் மாணவ/மாணவிகளுக்கு 28.09.2019 அன்று வினாடி வினா, பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. ஆர்வம் உள்ள மாணவ/மாணவியர்களை தேர்ந்தெடுத்து இணைப்பில் உள்ள அறிவுரைகளை கவனமாக பின்பற்றி பொறுப்பாசிரியர் மூலம் நேரடியாக கலந்துக்கொள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT


17.09.2019      அனைத்து அரசு/அரசு உதவிப் பெறும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

           NSIGSE  2010- 2011 மற்றும் 2011 - 2012 கல்வியாண்டுகளில் பத்தாம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகளின் வங்கி கணக்கு எண் /ஆதார் எண் பெற இயலாத மாணவிகளின் பெயர் பட்டியல் மட்டும் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.09.2019  அன்று மாலை 3.00 க்குள் அனுப்பி வைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்மை அறிக்கை எனில் எந்த கல்வியாண்டு இன்மை அறிக்கை என்பதனை குறிப்பிட்டு இரண்டு நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Monday 16 September 2019

17.09.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச்/ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணையினை மாணாக்கர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து வகைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். Attachment
16.09.2019

            அரசு மற்றும் அரசு  நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை 
                                   ஆசிரியர்கள் கவனத்திற்கு 

  STUDENT POLICE CADET CLUB    பயிற்சியில் கலந்து கொள்ள இரு பொறுப்பு ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல் சார்பு   ATTACHMENT
16.09.2019                               //மிகவும் அவரசம்//

                     மெட்ரிக்/ நர்சரி மற்றும்  தொடக்கப்பள்ளிகள் முதல்வர்கள் / 
                              தாளாளர் அவர்களின் கவனத்திற்கு 
 17.09.2019  இல் குழுந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009- தனியார் சுயநிதிப்பள்ளிகளில்  25%  இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை  EMIS   ல் பதிவேற்றம் சார்பான கூட்டம் .ATTACHMENT 

Sunday 15 September 2019

16.09.2019

     சிறுபான்மை நிதியுதவி பெறும்  பள்ளி  தாளாளர் மற்றும் செயலர் 
                                      அவர்களின் கவனத்திற்கு .
      கீழ்காணும் பள்ளிகள் தகவல் உரிமைச்சட்டத்தில் கோரப்பட்டுள்ள விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு மாலை 04.00 மணிக்குள் தவறாமல் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT

நிதியுதவி பெறும் பள்ளிகள் 


1. புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி,  ஜோலார்பேட்டை.

2. உபைபாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.

3. தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
  
4. டான்  போஸ்கோ மேல்நிலைப்பள்ளிஜோலார்பேட்டை.

5. மேரி இமாக்குலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.

6. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.

7. புனித சார்லஸ் மேல்நிலைப்பள்ளி, அத்தனவுர்.




Friday 13 September 2019

13.09.2019         நினைவூட்டல் - 2                     // மிகவும் அவசரம்//

       அனைத்து வகை பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

    ஊரகப் பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல் அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது, என்னென்ன  போட்டிகளில் மாணவ/மாணவிகள் பங்குகொள்கின்றனர் என்கின்ற விவரம் போட்டிகளுக்கான செலவினம் இணைக்கப்பட்டுள்ள  படிவத்தில்  கோரிய விவரங்களை பூர்த்தி செய்து 13.09.2019  இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில்   அ 5 பிரிவில்  நேரில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .  ATTACHMENT
  

Thursday 12 September 2019

13.09.2019

  அனைத்து வகை தலைமை ஆசிரியர் அவர்களின் கவனத்திற்கு 

 தங்கள் பள்ளியின் UDISE CODE  மற்றும் பள்ளியின்  PROFILE  உள்ளீடு செய்யாத தலைமை ஆசிரியர்கள்  இன்று மாலை 05.00 மணிக்குள்   அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்யுமாறு கோட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
  ATTACHMENT
25.09.2019                                                           நினைவூட்டல் - 4
 
        அனைத்து  வகை  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

 அனைத்து வகை அரசு /நிதியுதவி /மெட்ரிக்  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு  2019 - 2020 ஆம் ஆண்டிற்கான  PTA  செய்தி  சந்தா & இணைப்பு கட்டணத்தை இது நாள் வரை செலுத்தாத இணைப்பில் கண்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்  நாளை மாலை  5.00 மணிக்குள்  இவ்வலுவலக ஆ1 பிரிவில்  தனிநபர் மூலம் நேரில்  ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும்  PTA  இணைப்பு கட்டண தொகையை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் நாளை  ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளதால் தலைமை ஆசிரியர்கள் இதன் மீது தனிகவனம் செலுத்தி விரைந்து செயல்படுமாறு  தெரிவிக்கலாகிறது ATTACHMENT

12.09.2019
                அனைத்து  அரசு /நகரவை /நிதியுதவிப்பள்ளி   தலைமை ஆசிரியர்கள்                     கவனத்திற்கு 

 நாளை (13.09.2019) வேலூர் அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் இரத்து செய்யப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் 
12.09.2019
                               தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் 
அனைத்து அரசு/அரசு உதவிபெறும் / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் 13.09.2019 அன்று நடைபெறும்.
இடம்   : அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, வேலூர்.
நாள்     : 13.09.2019 
நேரம்  :  11.30  முதல் 12.30 வரை.
  அனைத்து தலைமை ஆசிரியர்ளும் கூட்டத்திற்கு வரும் போது 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான  PTA  செய்தி  சந்தா & இணைப்பு கட்டணத்தை இது நாள் வரை செலுத்தாத பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் நாளை நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மேற்படி இணைப்பு கட்டணத்தை வழங்காத மெட்ரிக் பள்ளிகளும் நாளை 04.00 மணிக்குள்  DEO  அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது 

ATTACHMENT

Wednesday 11 September 2019


12.09.2019 – தேர்வுகள் மிக அவசரம் – தனி கவனம் – அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு – மார்ச்/ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் – முதன் முதலாக தேர்வெழுதும் புதிய பள்ளிகளின் விவரங்கள் (பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு), தேர்வு மையங்கள் மாற்றம் கோரிய பள்ளிகள் மற்றும் அங்கீகாரம்/தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளின் விவரங்களை 16.09.2019 திங்கட்கிழமை காலை 11.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தனிநபர் மூலமாக இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்பிக்க அனைத்து வகைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment


12.09.2019

                                        மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்
                                             ..எண். 2903/2/2019    நாள்.  09/09/2019

        கீழ்கண்ட பள்ளிகள் இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள் பூர்த்தி செய்து 13/09/2019  அன்று நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி தாளாளர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிதியுதவி பெறும் பள்ளிகள்

1. புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி,  ஜோலார்பேட்டை.

2. உபைபாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.

3. தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
  
4. டான்  போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.

5. மேரி இமாக்குலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.

6. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.

7. புனித சார்லஸ் மேல்நிலைப்பள்ளி அத்தனவுர்.  ATTACHdeottrMENT



12.09.2019                                 நினைவூட்டல்  - 3

 VPRC - மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு  பள்ளிகளில் பணி புரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு  ஜனவரி  - 2019 முதல்  June -2019  வரையுள்ள மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிய விவரம் மற்றும் வங்கி கணக்கு  புத்தக முதல் பக்க நகல் , DEBIT & CREDIT  பக்க நகல் ஆகியவற்றை இன்று மாலை 5.00 மணிக்குள் அ5 பிரிவில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . VPRC  மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் எவரும் இல்லை எனில் 'இன்மை' அறிக்கை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT 
                               

Tuesday 10 September 2019

10.09.2019

        அனைத்து  வகை தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு
                          ந.க.எண் 2890/ஆ3/2019 நாள்  .9.2019.

பார்வையில் காண் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி மாணவர்களுக்கு சத்துணவு சமைப்பது , இடத்தை தூய்மையாக  வைத்திருப்பது மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்குவது சார்பாக அரசு முதன்மை செயலர் அவர்களின் அறிவுரையை பின்பற்ற அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

10.09.2019
  அனைத்து   வகை தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு
                    ந.க.எண் 2924/ஆ3/2019 நாள்   .09.2019.



மேற்கண்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 2019 ஆண்டு   செம்பம்பர் - மாதம்  ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாதமாக கடை பிடிக்க  தெரிவித்துள்ளார் , எனவே  இத்துடன் இணைத்துள்ள உறுதி மொழியினை கடைப்பிடிக்க அனைத்து வகை உயர்/மேல்நிலை மற்றும் தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

                                                                     .
10.09.2019
  அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய அலுவலர்கள் கவனத்திற்கு .

01.12.2018 நிலவரப்படி அடிப்படை பணியாளர்களிலிருந்து பதிவு எழுத்தராக பதவி உயர்வு பெற தகுதி உடைய பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இதில் எவரது பெயரேனும் விடுபட்டு இருப்பின் அவர்கள் சார்பான விவரத்தினை  17.09.2019 - க்குள் உரிய ஆவணங்களுடன் அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது. குறித்த காலத்திற்குள் விடுபட்ட பெயர்  சார்பான விவரங்கள் பெறப்படவில்லை எனில்  முன்னுரிமை பட்டியலில் திருத்தங்கள் ஏதும் இல்லை என கருதி இணைப்பில் உள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்பதை தெரிவிக்கலாகிறது. 
இணைப்பு 

 பதிவு எழுத்தராக பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல்
ATTCHEMENT

10.09.2019 – அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – 2019-20ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு 2202-02-109AA என்ற கணக்கு தலைப்பில் மின்கட்டணத் தொகை மற்றும் பண்டிகை முன்பணம்  தேவைப்படும் பள்ளிகள் தேவைப்பட்டியலினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உரிய கட்டண இரசீதின் நகலுடன் 16.09.2019 காலை 11.00 மணிக்குள் தனிநபர் மூலம் நேரில் ஆ1 பிரிவில் சமர்பிக்குமாறு அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment 

Sunday 8 September 2019


09.09.2019 – தேர்வுகள் – மிக கவனம் – அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.சி உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனதிற்கு – தேசிய திறனாய்வுத்தேர்வு நவம்பர் 2019 – பள்ளி மாணக்கர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல், பதிவேற்றம் முடிந்தவுடன் Summary Report/Fees Receipt/ தேர்வு விவரத்தினை 27.09.2019-க்குள் வேலூர் மாவட்ட உதவி இயக்குநர் அலுவலத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment

09.09.2019 – அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு -    

மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் -  பெயர்ப்பட்டியல் தயாரித்தல் – மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதாத பள்ளி இடையில் நின்ற மாணாக்கர் – பெயர் பட்டியல் சேர்த்தல்  - முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகள் Attachment
மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் – பெயர்ப்பட்டியல் தயாரித்தல் – பள்ளி மாணாக்கர்கள் விவரங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் – முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகள் Attachment 

08.09.2019 – தனிகவனம் – சிறுபான்மையினர் நலம் தொடர்பான கடவுச்சொல் (Password) இந்நாள் வரை பெறப்படாத ஊராட்சி ஒன்றிய தொடக்கநடுநிலைப்பள்ளிகள்/பிரைமரி/நர்சரி/அரசு / அரசு  உதவி பெறும்   உயர்நிலைமேல்நிலை/ மெட்ரிக்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் 09.09.2019  நாளை (திங்கட்கிழமை) காலை 09.00 மணி முதல் நடைபெறவுள்ள முகாமில் கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சொல் (Password) பெற்றுக்கொள்ளுமாறு சார்ந்த அனைத்து வகைப் பள்ளித் தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்முகாமில் கலந்துக்கொள்ள தவறும் பட்சத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அலுவலகத்தில் சென்று கடவுச்சொல் பெற வேண்டும் என்பதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள தொடக்க/நடுநிலை/பிரைமரி மற்றும் நர்சரி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவித்து கடவுச்சொல் (Password) பெற்றுச்செல்ல தகுந்த அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முகாம் நடைபெறும் தேதி:- 09.09.2019 காலை 09.00 மணி முதல்
இடம்ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிதிருப்பத்தூர்.
தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்:- 
1.  HM'S PHOTOS - 2
2.  HM'S AADHAR   CARD 
3.  UDISE CODE 
4.  SCHOOL DETAILS