Thursday 30 December 2021

30.12.2021        // ப்ரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் //  தனி கவனம் //                                                                             //நினைவூட்டல் - 1//

அரசு /  அரசு உதவிபெறும் - தனியார் / ஆதிதிராவிடர் நல உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2021 -2022 ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ மாணாக்கர்களுக்கு (SC/ST/SCC) ப்ரி மெட்ரிக் (10) மற்றும் போஸ்ட் மெட்ரிக்(12) கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் பணியினை முடிக்க 20.12.2021 முதல் இணையதளம் திறக்கப்பட்டுள்ளதால் இப்பணியை எந்த வித பிழையில்லாமல் செம்மையாக முடித்து  print for Despatch  நகலை வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் 31.12.2021 க்குள் தனிநபர் மூலம் ஒப்படைத்துவிட்டு அதன்  நகல் மற்றும் இணைப்பில் உள்ள படிவம் 1 ஐ பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை தனிநபர் மூலம் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு  அனைத்து வகை பள்ளி  தலைமை  ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

     மேலும் புதிய விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க இணைப்பில் உள்ள நடைமுறையினை பின்பற்றி தக்க முன்னேற்பாடுகள் செய்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1  இணைப்பு2  இணைப்பு3 இணைப்பு 4 இணைப்பு 5


 30.12.2021  // TRUST EXAM//

அனைத்து  அரசு / அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

ஊரகத்திறனாய்வு தேர்வு பிப்ரவரி 2022   இல் நடைபெறுதல் - விண்ணப்பிக்க கால அவகாச நீட்டிப்பு தொடர்பான   இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின் படி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 

Tuesday 28 December 2021

 29.12.2021  // மிக அவசரம் தனி கவனம் // 

அனைத்து அரசு / அரசு நிதியுதவு / மெட்ரிக்பள்ளி / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு

2021- 2022 ஆம் ஆண்டிற்கான NSP MINORITY SCHOLARSHIP ( தேசிய கல்வி உதவித்தொகை )  இணையதளத்தில் பதிவு செய்த  புதுப்பித்தல் (RENEWAL)  மாணவர்களின் விவரங்களை ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் தெரிவித்துள்ளவாறு  புத்தக வடிவத்தில் கோரப்பட்டதற்கிணங்க உரிய விவரங்களை  லிகல்  தாள் ( LEGAL SHEET    LAND SCAPE)  நகல் எடுத்து இரு நகல்கள் இவ்வலுவலக  அ4 பிரிவில் இன்று ( 29.12.2021 ) மாலை 05.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

 28.12.2021  // தேர்வுகள் // 

அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் /முதல்வர்களின்  கவனத்திற்கு –

 தேர்வுகள் – 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான 2021-2022-கல்வியாண்டில் பொதுத் தேர்வுக்கு முன்னர் மாணவர்களின் அறிவுத் திறனை சோதிக்கும் வகையில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன அதற்கான தேர்வுகால அட்டவணைகள்  இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்விற்கான (குறைக்கப்பட்ட) பாடத்திட்டம்  இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. 

    மேற்காணும் விவரத்தினை  அனைத்து பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் அறியும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் தேர்வுகள் நடத்துவது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் விவரங்கள் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

குறிப்பு. அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு1 . இணைப்பு2 இணைப்பு3

Monday 27 December 2021

 28.12.2021        // ப்ரி மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் // 

அரசு /  அரசு உதவிபெறும் - தனியார் / ஆதிதிராவிடர் நல உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2021 -2022 ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ மாணாக்கர்களுக்கு (SC/ST/SCC) ப்ரி மெட்ரிக் (10) மற்றும் போஸ்ட் மெட்ரிக்(12) கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் பணியினை முடிக்க 20.12.2021 முதல் இணையதளம் திறக்கப்பட்டுள்ளதால் இப்பணியை எந்த வித பிழையில்லாமல் செம்மையாக முடித்து  print for Despatch  நகலை வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் 31.12.2021 க்குள் தனிநபர் மூலம் ஒப்படைத்துவிட்டு அதன்  நகல் மற்றும் இணைப்பில் உள்ள படிவம் 1 ஐ பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை தனிநபர் மூலம் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு  அனைத்து வகை பள்ளி  தலைமை  ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

     மேலும் புதிய விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க இணைப்பில் உள்ள நடைமுறையினை பின்பற்றி தக்க முன்னேற்பாடுகள் செய்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1  இணைப்புஇணைப்பு3


 28.12.2021  // நிதியுதவி பெறும் பள்ளிகள் மட்டும்//

அனைத்து  அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் முதல்வர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்தின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அறக்கட்டளைகள் குறித்த விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 29.12.2021 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு 

Friday 24 December 2021

 

24.12.2021  EMIS  //தேர்வுகள் அவசரம்//

நினைவூட்டல் -1

அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு.

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக 20.12.2021 வரை கால அவகாசம் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டது,

அவ்வாறு EMIS-ல் பதிவேற்றம் செய்யபட்ட மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து அதன் நகலினை EMIS-ல் இருந்து பதிவிறக்கம் செய்து                  இவ்வலுவலக தேர்வுத்துறை பிரிவில் 28.12.2021  மாலை 4 மணிக்குள் முகப்பு கடிதத்துடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இணைப்பு

 

அனைத்து வகை அரசு/நிதியுதவி/ உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ கவனத்திற்கு

IFHRMS புதிய பணியிடம் சேர்ப்பது குறித்து கோரிக்கை இருப்பின் அதற்கான அரசாணைகள் /ஆணைகளை இணைத்து இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  மாவட்ட கல்வி அலுவலரின் கையொப்பத்துடன்  இணைத்து பள்ளிக்கல்வி ஆணையராக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலருக்கு படிவத்தினை dsefc@nic.in என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும், அதன் நகலினை 28.12.2021 மாலை 5 மணிக்குள் இரு நகல்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களூக்கும் தெரிவிக்கலாகிறது.இதில் ஏதேனும் காலதாமதம் ஏற்படின் சார்ந்த தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க்கநேரிடும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.இணைப்பு


Thursday 23 December 2021

 24.12.2021            //தேர்வுகள்//


அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு.


 தேர்வுகள் – நடைபெற்று முடிந்த செப்டம்பர் 2021, மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு எழுதி,மறுகூட்டல்- 2   (Re-total-II)   மற்றும் மறுமதிப்பீடு.  (Revaluation)   கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவு எண்களின் பட்டியல் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் (Notification  பகுதியில்)  27.12.2021 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவுகளுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மறுகூட்டல்/ மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், உடன் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை (statement of marks) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


குறிப்பு: அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Wednesday 22 December 2021

 22/12/2021  // தனி கவனம் அவசரம்// 

                           //மேல்நிலை பள்ளி  தலைமை ஆசிரியர் பதவி உயர்வு//

அனைத்து அரசு உயர்நிலை பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

01.01.2022 நிலவரப்படியான அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்பதவி உயர்விற்கு தேவையான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு இணைப்பில் உள்ள  தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு தகுதிவாய்ந்த உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பாக கருத்துருக்கள் 3 நகல்களில் நாளை 23.12.2021 பிற்பகல் 03.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதி வாய்ந்தவர்கள் இல்லை எனில் இன்மை அறிக்கையினை  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1 இணைப்பு2

Monday 20 December 2021

 20/12/2021     //மிக மிக அவசரம்/தனி கவனம் // நினைவூட்டல் 1 //

அனைத்து அரசு/ அரசு /நிதிஉதவி பெறும் உயர்/மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

ஆதிதிராவிடர் நலம் - கல்வி உதவித்தொகை -  பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் - சுகாதார தொழில்புரிவோரின் குழந்தைகளக்கான பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதிபெற்ற மாணவியர் விவரங்களை 22.12.2021 காலை 11.00 மணிக்குள் இணைப்பில் உள்ள   Excel படிவத்தில்  பூர்த்தி செய்து  deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் இரண்டு நகலினை அ5 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு  அனைத்து  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு

குறிப்பு :  தகுதியுள்ள மாணவிகள் எவரம்  இல்லை எனில்
                      தவறாமல் இன்மை அறிக்கை வழங்கவும் 

Thursday 16 December 2021

 17.12.2021   // மிக அவசரம் //தனிகவனம் //

அனைத்து வகை அரசு  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2021 - 2022 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பிற மாவட்டம் / பிற மாநிலத்திலிருந்து வந்து சேர்ந்த மாணவர்களின் விவரம் இணைக்கப்பட்டுள்ள ONLINE SHEET இல் இன்று முற்பகல் 12.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET

 16/12/2021  //மிக மிக அவசரம்/தனி கவனம்// 

அனைத்து அரசு/ அரசு /நிதிஉதவி பெறும் உயர்/மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

ஆதிதிராவிடர் நலம் - கல்வி உதவித்தொகை -  பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் - சுகாதார தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும்  தகுதிபெற்ற மாணவியர் விவரங்களை 17.12.2021 மாலை 3.00 மணிக்குள் இணைப்பில் உள்ள   Excel படிவத்தில்  பூர்த்தி செய்து  deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் இரண்டு நகலினை அ5 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு  அனைத்து  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு

 16.12.2021    //தேர்வுகள்//

அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு – 

தேர்வுகள் – 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான அலகுத்தேர்வுகள் – திருப்பத்தூர் மாவட்டம் – அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு 17.12.2021 முதல் 24.12.2021 வரை நடைபெறவுள்ள அலகுத்தேர்வுக்கான வினாத்தாட்களை இணைப்பில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி ஒன்றிய வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆளறிச்சான்றிதழ்களை வழங்கி 16.12.2021 இன்று பிற்பகல் 02.00 மணிமுதல் பெற்றுக்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. இணைப்பு

Wednesday 15 December 2021

 16.12.2021 // நிதியுதவி பெறும் பள்ளிகள்//     நினைவூட்டு 1   இணைப்பு புதிய படிவம்//

அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வைப்பு நிதி கணக்குகள். ASTPF  2019-2020 ஆம் நிதியாண்டிற்கு உரிய (BOOK ADJUSTMENT )  வட்டி தொகை சரி செய்ய மற்றும் 2020- 2021 ஆம் நிதியாண்டிற்கு கணக்குகள் ஒத்திசைவு செய்ய வேண்டி  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்திணை பூர்த்தி செய்து 13.09.2021 அன்று காலை 11.00 மணிக்குள் உரிய ஆவணங்களுடன் இவ்வலுவலக  அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்நாள் வரை சில பள்ளிகல் உரிய தகவல் கிடைக்காத காரணத்தினால் தொகுப்பறிக்கை செய்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க முடியாக காரணத்தினால் உரிய பள்ளிகள் இதன் மீது  தனிகவனம் செலுத்தி 16.12.2021 மதியம் 1.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்திணை  பூர்த்தி செய்து 2 நகள்கலில் இவ்வலுவலக அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு

 16.12.2021 // நிதியுதவி பெறும் பள்ளிகள்//     நினைவூட்டு 1 

அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வைப்பு நிதி கணக்குகள். ASTPF  2019-2020 ஆம் நிதியாண்டிற்கு உரிய (BOOK ADJUSTMENT )  வட்டி தொகை சரி செய்ய மற்றும் 2020- 2021 ஆம் நிதியாண்டிற்கு கணக்குகள் ஒத்திசைவு செய்ய வேண்டி  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்திணை பூர்த்தி செய்து 13.09.2021 அன்று காலை 11.00 மணிக்குள் உரிய ஆவணங்களுடன் இவ்வலுவலக  அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்நாள் வரை சில பள்ளிகல் உரிய தகவல் கிடைக்காத காரணத்தினால் தொகுப்பறிக்கை செய்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க முடியாக காரணத்தினால் உரிய பள்ளிகள் இதன் மீது  தனிகவனம் செலுத்தி 16.12.2021 மதியம் 1.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்திணை  பூர்த்தி செய்து 2 நகள்கலில் இவ்வலுவலக அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  .  இணைப்பு 

 

15/12/2021  //மிக மிக அவசரம்/தனி கவனம்//

அனைத்து அரசு/ அரசு /நிதிஉதவி பெறும் உயர்/மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

ஆதிதிராவிடர் நலம் - கல்வி உதவித்தொகை -  பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் - சுகாதார தொழில்புரிவோரின் குழந்தைகளக்கான பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதிபெற்ற மாணவியர் விவரங்களை 17.12.2021 மாலை 3.00 மணிக்குள் இணைப்பில் உள்ள   Excel படிவத்தில்  பூர்த்தி செய்து  deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் இரண்டு நகலினை அ5 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு  அனைத்து  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு

Tuesday 14 December 2021

 15.12.2021  // அரசு விலையில்லா நலத்திட்டம்//

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  6 முதல் 8 வரை பயிலும்  மாணவ , மாணவியர்களுக்கு 2021 -2022 ஆம் கல்வியாண்டிற்கான 3 மற்றும் 4 வது இணை சீருடைகள் வழங்கப்பட்டுவிட்டது. சீருடைகள்  பெறாதப்பள்ளிகள் அல்லது கூடுதலாக தேவைப்படும் பள்ளிகள் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 14.12.2021 //   தேர்வுகள் தனி கவனம்  //

அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் /மெட்ரிக் /உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு

நடைபெற்ற செப்டம்பர் - 2021  பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவின் மீது  மறுகூட்டல் கோரி  விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் தேர்வு எண்களின் பட்டியல் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில். 15. 12. 2021 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்படுகிறது இதில் இடம் பெறுபவர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட  மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பட்டியலில் இடம் பெறாத தேர்வர்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பு .அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் இணைப்பில் உள்ள கடிதத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு

Monday 13 December 2021

 13/12/2021   

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்கள் சார்பாக இணைப்பில் காணும் செயல்முறைகளில் உள்ள படிவத்தில் சேர்க்கை / நீக்கம் மற்றும் திருத்தம் விவரங்களை பூர்த்தி செய்து இரு நகல்களில் இவ்வலுவலக ஆ2 பிரிவில் 13.12.2021 மாலை 05.00 மணிக்குள் தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சேர்க்கை / நீக்கம் / திருத்தம் இல்லை எனில் அதே படிவத்தில் இன்மை அறிகையினை அளிக்க வேண்டும்    இணைப்பு    இணைப்பு2

Thursday 9 December 2021

 09.12.2021   // தேர்வுகள் // EMIS //

அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் /மெட்ரிக் /உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு

2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான பள்ளி மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு அனைத்து உயர்நிலை  மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் 22.11.2021 முதல் 04. 12.2021 வரையிலான நாட்களில் EMIS  தளத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் பெயர் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.தற்போது சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட பணியை மேற்கொள்வதற்கு கூடுதல் கால அவகாசம் கோரியதால் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் செய்யும் பணியினை மேற்கொள்ள 20.12.2020 வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது மேற்குறிப்பிட்ட பணிகளை  மேற்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பு ஆகும்.

குறிப்பு :-அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் இணைப்பில் உள்ள கடிதத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு

Wednesday 8 December 2021

 08.12.2021  // குழந்தைகள் தினம்//

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

அரசு பள்ளிகளில் பயின்றுவரும் குழந்தைகளுக்கு நவம்பர் 2021 மாத நாட்கள் முழுவதும் தேசிய குழந்தைகள் தினவிழா கொண்டாடுதல் சார்பாக  மாவட்ட குழந்தைகள் அலுவலரின் கடிதப்படி இவ்வலுவலக அ4 பிரிவில் நாளை 09.12.2021 காலை 10.00 மணிக்கு  உரிய அஞ்சல் அட்டையை பெற்று சென்று இணைப்பில் உள்ளவாறு  அஞ்சல் அட்டையில் தங்கள் பள்ளிகளில்  பயிலும் மாணாக்கர்களுக்கு எதாவது ஒரு தலைப்பில் அஞ்சல் அட்டையில் வரைபடம் வரைந்து 09.12.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 

Tuesday 7 December 2021

 08/12/2021.           //தேர்வுகள்//

அனைத்து வகை அரசு/ அரசு உதவிபெறும் / மெட்ரிக்  உயர் /மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின்  கவனத்திற்கு 

2021- 2022 ஆம் கல்வி ஆண்டு மேல்நிலைபள்ளி  இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு- மாணவர்களது பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் குறித்த விவரங்களை அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின்  இணைப்பில் உள்ள கடிதத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு  அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு

 08.12.2021.       //தேர்வுகள்//

அனைத்து வகை அரசு உயர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

 8.11.2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவிருந்த தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேர்வு கால அட்டவணை 20. 12. 2021 முதல்    24.12.2021 வரை மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் குறித்த விவரங்களை அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ளவாறு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தங்கள் பகுதியில் உள்ள மாணாக்கர்களுக்கு தெரிவிக்குமாறு, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு.

Monday 6 December 2021

 07/12/2021  // ஊக்கத்தொகை //

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் படி 2020-2021  மற்றும் 2021-2022 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் (சுயநிதிப் பாடப் பிரிவு நீங்கலாக) 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் வங்கி கணக்கு விவரத்தை EMIS இணையதளத்தில் 08.12.2021 க்குள்  பதிவேற்றம் செய்து முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் , இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 08.12.2021 அன்று 05.00 க்குள் நேரில் தனி நபர் முலம் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Friday 3 December 2021

 03.12.2021  

 அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

மாவட்டக்கல்வி அலுவலரின் டிசம்பர் மாத பயணத்திட்டம் தகவலுக்காக அனுப்பலாகிறது. இணைப்பு 

Thursday 2 December 2021

 03.12.2021  //  விலையில்லா பாடநூல்கள் //

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

சென்னை -6 பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.கஎண்.50455/வி2/இ3/2021 நாள். 01.12.2021 இன் படி தங்கள் பள்ளி அளவில் தேவைக்கு அதிகமாக உள்ள பாடப்புத்தகங்கள்   03.12.2021 இன்று மாலைக்குள் இவ்வலுவலகத்தில்  உரிய கடிதத்துடன் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 03/12/2021  // மாற்றுப்பணி // 

 அரசு மேல்நிலைப்பள்ளி,பெரியகண்ணாலப்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளிகள் , தோரணம்பதி மற்றும் சந்திரபுரம் பள்ளி தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு மாற்றுப்பணி மூலம் பணிபுரிய  ஆய்வக உதவியாளர்கள்  திரு.எ.அருண், திரு.பி.பெரியசாமி , திரு.சௌகத்  என்பார்களின்  ஆணை  இத்துடன் அனுப்பலாகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 02.12.2021   // தனி கவனம் மிக மிக அவசரம் //  நினைவூட்டல் 2

அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு

 2021 - 2022 -ஆம் கல்வியாண்டில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித்   திட்ட உதவித்தொகைக்கு பள்ளிகள் வாரியாக அனைத்து விண்ணப்பங்களும் ஆன் லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தி இணைப்பில் உள்ள சான்றினை அனைத்து அரசு  மற்றும் நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களும் 02. 12. 2021  இன்று காலை 11.00  மணிக்குள்  deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை  இவ்வலுவலக  அ5 பிரிவில் 2 நகல்களில் தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது ஆனால் இன்னும் சில பள்ளிகள் ஒப்படைக்கவில்லை. எனவே , நாளை 03.12.2021 காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தவறும் பட்சத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்க நேரிடும் என்பதை தெரிவிக்கலாகிறது.

குறிப்பு:-  மாணவர்கள்  எவரும்  NMMS FRESH  AND RENEWAL இல்லை என்றாலும் கட்டாயம் இன்மை அறிக்கை வழங்க வேண்டும்  இணைப்பு

  02/12/2021  // மிக மிக அவசரம்//  IFHRMS//   நினைவூட்டல் 1

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

IFHRMS ல் பணியிடம் விவரம் ( POST DETAILS) பதிவிறக்கம் செய்து சரிபார்த்து மாற்றம் இருக்கும் பள்ளிகள் சரிசெய்தும்    சரி செய்த நகலுடன் இன்று  (02.12.2021 ) அனைத்து உயர்நிலைப்பள்ளிகளும்,  நாளை (03.12.2021) அனைத்து மேல்நிலை/ நிதியுதவி பள்ளிகளும் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நேரில் வந்து ஆ1 பிரிவில் சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இப்பொருள் சார்ந்து சென்னையில் 06.12.2021 அன்று நடைபெறும் கூட்டத்தில் அலுவலகம் சார்பாக கலந்துகெள்ளவேண்டியுள்ளதால்  உடனடி கவனம் செலுத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

குறிப்பு இணைப்பில் உள்ள பள்ளிகள் மட்டும் 02.12.2021  இன்றே  வந்து சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள் இன்றே இப்பணியை முடிக்க  தவறும் பட்சத்தில்   சார்ந்த தலைமை ஆசிரியர்கள் முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. இணைப்பு 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் இணைப்பு 

Wednesday 1 December 2021

 02/12/2021  // மிக மிக அவசரம்//  IFHRMS// 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

IFHRMS ல் பணியிடம் விவரம் ( POST DETAILS) பதிவிறக்கம் செய்து சரிபார்த்து மாற்றம் இருக்கும் பள்ளிகள் சரிசெய்தும்    சரி செய்த நகலுடன் இன்று  (02.12.2021 ) அனைத்து உயர்நிலைப்பள்ளிகளும்,  நாளை (03.12.2021) அனைத்து மேல்நிலை/ நிதியுதவி பள்ளிகளும் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நேரில் வந்து ஆ1 பிரிவில் சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இப்பொருள் சார்ந்து சென்னையில் 06.12.2021 அன்று நடைபெறும் கூட்டத்தில் அலுவலகம் சார்பாக கலந்துகெள்ளவேண்டியுள்ளதால்  உடனடி கவனம் செலுத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

குறிப்பு இணைப்பில் உள்ள பள்ளிகள் மட்டும் 02.12.2021  இன்றே  வந்து சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள் இன்றே இப்பணியை முடிக்க  தவறும் பட்சத்தில்   சார்ந்த தலைமை ஆசிரியர்கள் முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. இணைப்பு 

  02.12.2021   // தனி கவனம் மிக மிக அவசரம் //  நினைவூட்டல் 1

அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு

 2021 - 2022 -ஆம் கல்வியாண்டில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித்   திட்ட உதவித்தொகைக்கு பள்ளிகள் வாரியாக அனைத்து விண்ணப்பங்களும் ஆன் லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தி இணைப்பில் உள்ள சான்றினை அனைத்து அரசு  மற்றும் நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களும் 02. 12. 2021  இன்று காலை 11.00  மணிக்குள்  deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை  இவ்வலுவலக  அ5 பிரிவில் 2 நகல்களில் தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

குறிப்பு:-  மாணவர்கள்  எவரும்  NMMS FRESH  AND RENEWAL இல்லை என்றாலும் கட்டாயம் இன்மை அறிக்கை வழங்க வேண்டும்  இணைப்பு


 01.12.2021   // தனி கவனம் மிக மிக அவசரம் //

அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு

 2021 - 2022 -ஆம் கல்வியாண்டில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித்   திட்ட உதவித்தொகைக்கு பள்ளிகள் வாரியாக அனைத்து விண்ணப்பங்களும் ஆன் லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தி இணைப்பில் உள்ள சான்றினை அனைத்து அரசு  மற்றும் நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களும் 02. 12. 2021 காலை 11.00  மணிக்குள்  deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை  இவ்வலுவலக  அ5 பிரிவில் 2 நகல்களில் தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

குறிப்பு:-  மாணவர்கள்  எவரும்  NMMS FRESH  AND RENEWAL இல்லை என்றாலும் கட்டாயம் இன்மை அறிக்கை வழங்க வேண்டும்  இணைப்பு