Friday 30 November 2018

30.11.2018 -  தேர்வுகள் அவசரம் - 2018-2019ஆம் கல்வியாண்டு -10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை Attachment 

Thursday 29 November 2018

29.11.2018 -தேர்வுகள் அவசரம் - அனைத்து (NMMS) தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு -  01.12.2018 அன்று நடைபெற இருந்த தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைக்கானத் தேர்வு (NMMS), அண்மையில் வீசிய " கஜா"  புயலால் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக 15.12.2018 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
29.11.2018 - தேர்தல் அவசரம் - இணைப்பில் உள்ள  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அளித்த தேர்தல் சார்பான படிவத்தினை ஆராய்ந்து குறைகள் கண்டறியப்பட்டு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலம் 4 நாட்களாக தெரிவித்தும் இந்நாள் வரை குறைகள் களைந்து மீள வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்காதது மிகவும் வருந்தத்தக்க செயலாகும் எனவே இன்று மாலை 5.00 மணிக்குள் தேர்தல் சார்பான படிவத்தினை நேரில் தனி நபர் மூலம் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறின் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. Attachment 
29.11.2018 -  2017-2018 மற்றும் 2018 -2019ம் கல்வியாண்டிற்கான விலையில்லா மழைக்கோட்டு (Rain Coat)  மலைப்பிரதேசங்களில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு விநியோகித்து விட்டு அதன் விவர அறிக்கையினை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரதியினை ( Hot copy) இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது. 

Tuesday 27 November 2018

28.11.2018 - தேர்வுகள் – NMMS தேர்வுகள் டிசம்பர் 2018 -  டிசம்பர் - 01.12.2018 -  (சனிகிழமை) அன்று நடைபெற உள்ள 2018 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்விற்கான (NMMS)  இணைப்பில் கண்ட  அறைகண்காணிப்பாளர்களை தேர்வு   மைய பணிக்காக விடுவித்து அனுப்புமாறு  சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுககொள்ளப்படுகிறார்கள்.  Attachment 
27.11.2018 - மாநில கணக்காயரின் தணிக்கை - கூட்டமர்வு தணிக்கை தடை நிலுவைப்பத்திகள் 29.11.2018 மற்றும் 30.11.2018 தேதிகளில் தருமபுரி முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும்  கூட்டமர்வில் நிலுவைப்பத்திகளுக்கான நிவர்த்தி பதில் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 


27.11.2018 - கோவை தணிக்கை - திருப்பத்தூர், வாணியம்பாடி  கல்வி மாவட்டம் அனைத்து வகைப்பள்ளிகள் இணையமர்வு கூட்டத்தில் தவறாது தணிக்கை தடைகளுக்கான தடைநீக்க பதில்கள் நேரில் எடுத்து வந்து  தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.    Attachment 
பள்ளிகளின் பெயர் பட்டியல்
இடம் :- ஸ்ரீ மீனாட்சி அரசு (ம) மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்  
நாள் :- 29.11.2018 

Wednesday 21 November 2018


22.11.2018 - அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு 

(மெட்ரிக்,சி.பி.எஸ்.இ உட்பட)- மழை காரணமாக இன்று (22.11.2018) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

எனவே, இன்று (22.11.2018) அனைத்துவகை பள்ளிகளுக்கும் விடுமுறை (மெட்ரிக்,சி.பி.எஸ்.இ உட்பட) என தெரிவிக்கப்படுகிறது. விடுமுறை அளிக்காத பள்ளிகள் அதனால் ஏற்படும் அசம்பாவிதத்திற்கு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் / முதல்வரையே சாரும் என தெரிவிக்கலாகிறது. 
மாவட்டக்கல்வி அலுவலர், திருப்பத்தூர்

Tuesday 20 November 2018

20.11.2018 -  வடகிழக்கு பருவமழை 2018 முன்னேற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அவர்களால் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 20.11.2018 அன்று நடைபெற்றது.  அக்கூட்டத்தில் எதிர்வரும் 20.11.2018 முதல் 22.11.2018 வரை கனமழை பொழிய உள்ளதால் அதிக மழை பொழிந்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் அப்பகுதிகளில் உள்ள தலைமை ஆசிரியர்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் சம்மந்தப்பட்ட பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் கோரும் நிலையில் பள்ளியின் வகுப்பறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   

Monday 19 November 2018

20.11.2018 - மிக மிக அவசரம் - நலத்திட்டங்கள் - அனைத்து வகை  அரசு/நிதியுதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 2019 -2020-ம் கல்வி ஆண்டில் விலையில்லா பாடநூல் உத்தேச தேவைப்பட்டியல் இணைப்பில்  உள்ள ஆன்லைன் படிவத்தில் அனைத்து படிவங்களும், அனைத்து கலங்களும் எவ்வித மாற்றமும் செய்யாமல்  உடனடியாக இன்றே பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.   ON LINE ATTACHMENT 

Thursday 15 November 2018

15.11.2018 -  நினைவூட்டல் - பொதுத்தேர்தல் - வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமணம் மற்றும் பயிற்சி தகவல் தரவு (Data base)  தளத்தில் உள்ளீடு செய்து, விண்ணப்ப படிவத்தினை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டிருந்தது, இந்நாள் வரையில் சமர்ப்பிக்காதவர்கள் உடன் சமர்பித்து அதன் விவரத்தினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கலாகிறது.  Attachment  
15.11.2018 - 2018-19 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளின் ஆதார் எண் பெற்றிருக்கும் விவரம் குறித்து இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை (16.11.2018) மாலை 5 மணிக்குள் deotptb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் -  இணைப்பு படிவம்
15.11.2018 -மிக மிக அவசரம் தனிகவனம் விலையில்லா பாடநூல்கள் -2019-2020ம் கல்வி ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்புகள் உத்தேச தேவைப்பட்டியல் 16.11.2018 க்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக ஆ3 பிரிவில் மூன்று நகல்களில் நேரில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.  Attachment  

Wednesday 14 November 2018

14.11.2018 - Training for the BRTEs about the modified  ABL - District training -reg. Attachment 

Tuesday 13 November 2018

14.11.2018 - னைத்து மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் - 2011 - 2012 ஆம் ஆண்டு  முதல் 2016-2017 ம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு  வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவனத்தில் ERP Entry மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.  Attachment-1 , Attachment -2 
14.11.2018-  2018-19 Training programme in partnership with NGOs - STIR Education's Intrinsic Teacher Motivation Implementation in Vellore District. Attachment 
14.11.2018 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - மாமோ சவால் (MOMO CHALLENGE) என்ற புதிய இணையதள விளையாட்டின் தீமைகள் குறித்தும் தங்கள் கைப்பேசியில் விளையாடுவதைத் தடுக்க மாணாக்கர்களுக்கு அறிவுரை வழங்ககுதல். Attachment 
13.11.2018 - தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்குஅரசு/அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில பிரிவுகளின் எண்ணிக்கை மற்றும் மாணவர்கள்  எண்ணிக்கை விவரத்தினை இவ்வலுவலக deotpt2015@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க  தெரிவிக்கலாகிறது. Attachment  Form 
13.11.2018 - சிறுபான்மை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் கவனத்திற்கு - 2018-2019ஆம் ஆண்டு அரசு உதவி பெறும்/தனியார் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் (IDMI) மைய அரசின் நிதி உதவியில் செயல்படுத்துவது குறித்து கூட்டம் 15.11.2018 வியாழக் கிழமை அன்று வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெறும் கூட்டத்தில் தவறாது கலந்துக்கொள்ள தெரிவிக்கலாகிறது.  Attachment  

Monday 12 November 2018

13.11.2018 - தேர்வுகள்- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மைய தலைமை ஆசிரியர்/முதல்வர்களுக்கான கூட்டம் 
இடம் : - அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர், 
நாள் :- 14.11.2018, நேரம் :- காலை - 11.00 மணி
(குறிப்பு :- இணைப்பில் உள்ள  படிவத்தினை பூர்த்தி செய்து நடைபெறும்  கூட்டத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது) ATTACHMENT 

Sunday 11 November 2018

12.11.2018 - மிக மிக அவரசம் - தேர்தல் - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு பொதுத்தேர்தல்கள்-2019 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் சார்பாக பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் ஆளறிச்சான்றினை வழங்கி விண்ணப்ப படிவத்தினை இன்று (12.11.2018) மாலை 5.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்திலிருந்து பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Friday 9 November 2018

  09.11.2018 - தேர்தல் அவசரம் தனிகவனம் - பொதுத்தேர்தல்கள் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் மற்றும் பயிற்சி  தகவல் தரவு (Database) ஏற்படுத்துதல் இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி  சான்று மற்றும் படிவத்துடன் 14.11.2018 முதல் 20.11.2018க்குள் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்,  மேலும் ஒப்படைக்கப்பட்ட விவரத்தினை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ1 பிரிவில்   ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   

Wednesday 7 November 2018

08.11.2018 - தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 2018 -2019ஆம் கல்வியாண்டிற்கான (11-ம் வகுப்பு தொகுதி - II) ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி விடுப்பட்ட பாடநூல்களை பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் உடனடியாக பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Friday 2 November 2018

02.11.2018 -  அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தீபாவளி 2018- பண்டிகையின்போது மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்பாடாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் இணைப்பில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி கொண்டாட தெரிவிக்கப்படுகிறது.  Attachment   Attachment  

Thursday 1 November 2018


02.11.2018 – NMMSகல்வி உதவித்தொகை – தற்போது 10-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் முழு விவரங்களை ஆன்லைனில்(National Scholarship Portal – என்ற இணையதளத்தில்)  உடனடியாக புதுப்பிக்கும்படி சார்ந்த அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (Renewel option தற்போது செயல்பாட்டில் உள்ளது)

01.11.2018 - நினைவூட்டு தனி கவனம் - அனைத்துவகை உயர்/மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு  - தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பெறப்பட்டுள்ள வினா வங்கி ஏடுகளை இந்நாள் வரையில் உரிய தொகையினை செலுத்தி  பெற்றுச்செல்லாத பள்ளிகள் நாளை முதல் ஆ1 பிரிவில் பெற்றுச் செல்ல தெரிவிக்கலாகிறது. Attachment   Attachment 
01.11.2018 - நினைவூட்டல் - ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு உயர் /மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்துமாறு  தெரிவிக்கப்பட்டிருந்தது, (படம் வரைதல், வண்ணம் தீட்டுதல்,கட்டுரை எழுதுதல், மற்றும் பேச்சுபோட்டிகள்) நடத்தப்பட்ட போட்டிகளின் விவர அறிக்கைகளை  அனுப்பிவைக்குமாறும் மேலும் போட்டிகளுக்கான உத்தேச செலவித்தொகையினை நாளை மாலை 3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

பள்ளி எண்                                     :
பள்ளியின் பெயர்                        :
வங்கி கணக்கு எண்                 :
வங்கியின் பெயர்/கிளை        : 
IFSC NUMBER                                  : 
01.11.2018 -  அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 1 மற்றும் 2-க்கு மேற்பட்ட இளநிலை உதவியாளர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட விவரத்தினை  இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி  deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரதியை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.  Attachment