Saturday 30 May 2020

30.05.2020  அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2019 - 2020 ம் கல்வி ஆண்டில் 30.04.2020 வரை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் கீழ்கண்ட சான்றுகளை அலுவலகத்தில் ஒப்படைத்து பணி விடுவிப்பு ஆணை பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

1. SSA - 2019 - 2020 வரை தடையில்லா சான்று
2. RMSA - 2019 - 2020 வரை தடையில்லா சான்று
3. ஆசிரியர் சிக்கன நாணய கூட்டுறவு கடன் சங்கம் தடையில்லா சான்று
4. ARF  - படிவம்
5. பொறுப்புகள் ஒப்படைத்த விவரம்

30.05.2020 அனைத்து வகை அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

VPRC மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஆகஸ்ட் - 2019 முதல் மார்ச் - 2020 வரையுள்ள மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிய விவரம் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களுடன் வங்கி கணக்கு  புத்தக முதல் பக்க நகல் மற்றும் CREDIT  & DEBIT பக்க நகல் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையும் இரு நகல்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் சுகாதார பணியாளர்கள் நியமன விவரம் மற்றும் ஜீன் - 2019 முதல் மார்ச் - 2020 வரை அவர்கள் ஊதியம் பெற்றமைக்கான சான்று ஆகியவற்றை இரு நகல்களிலும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Thursday 28 May 2020

28.05.2020  அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தேர்வுகள் – முகாம் பணி – மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 – மேல்நிலை மைய மதிப்பீட்டு முகாம் ONLINE MARK ENTRY பணி  –  கீழ்கண்ட  இணைப்பில் உள்ள ஆசிரியர்களை ONLINE MARK ENTRY முகாம் பணிக்காக 29-05-2020பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT,- 

Wednesday 27 May 2020

27.05.2020   // தேர்வுகள் அவசரம்//
 பத்தாம் வகுப்பு தேர்வு மைய தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
JUNE -2020 ( மார்ச் 2020 ) - இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கூடுதலாக அகல துணி வேய்ந்த காகித உறைகள் மற்றும் கோடிட்ட, கோடிடப்படாத  வெற்று கூடுதல் விடைத்தாட்கள் கீழ்கண்ட நாளில் பெற்றுச் செல்ல   தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் / உதவி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT 

 இடம் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி , திருப்பத்தூர்
 நாள்  :  01.06.2020
நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை 

Tuesday 26 May 2020

26.05.2020  தேர்வு மையத் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

நடைபெற்று முடிந்த மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வின் வருகைப் பதிவேடு பட்டியல் (Hall Wise Attendance Sheet) மற்றும் பெயர்பட்டியல் (Naminal Roll) ஆகியவற்றை தொகுத்து  காட்பாடி கல்புதூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரகத்தில் 28.05.2020 க்குள் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளதால் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT

Friday 22 May 2020

22.05.2020  அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தேர்வுகள் – முகாம் பணி – மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 – மேல்நிலை மைய மதிப்பீட்டு முகாம் பணி – ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குதல் –  கீழ்கண்ட  இணைப்பில் உள்ள ஆசிரியர்களை முகாம் பணிக்காக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT,- 1   ATTACHMENT- 2

Thursday 21 May 2020

21.05.2020 // தேர்வுகள் அவசரம் //
அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்/ முதல்வர்களின் கவனத்திற்கு
அரசு / அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும்  பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோவிட் - 19 ஊரடங்கு உத்திரவு காரணமாக வெளி மாநிலம் அல்லது வெளி மாவட்டத்தில்  எவரேனும் தங்கி இருந்தால் அதன் விவரத்தினை இத்துடன்  இணைக்கப்பட்டுள்ள  EXCEL  படிவத்தில் பூர்த்தி செய்து  நாளை (22.05.2020) காலை 11.00 மணிக்குள்  இவ்வலுவலக ( deottr@nic.in )  என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்பிவைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
 மேலும் மேற்காணும் தகவல்கள் திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 23.05.2020 க்குள் பணிந்தனுப்ப கோரப்பட்டுள்ளதால் இப்பொருளில் தனிகவனம் செலுத்தி அனுப்புமாறும் , படிவங்களில் எண்ணிக்கை மட்டுமே கோரப்பட்டுள்ளதால் காலதாமதம் தவிர்த்து  அனுப்ப அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் மீளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இது மிகவும் அவசரம் 

Wednesday 20 May 2020


20.05.2020
அனைத்து வகை அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

சர்வதேச உயிரிப்பல்வகைமை தினம் - மே 22 2020  - கொண்டாடும் வகையில் இணைய வழி கட்டுரை போட்டி நடத்துதல் சார்பாக இணைப்பில் கண்ட கடிதத்தில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களிடையே கட்டுரைப் போட்டி நடத்தி கட்டுரைகள் அனைத்தும் 30 மே 2020 மாலை 5.00 மணிக்குள் secy.tnbb@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Monday 18 May 2020

19.05.2020
 இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு 
ஆதிதிராவிடர் நலம் - ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் - 2019 -2020 ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியுடைய அனைத்து  SC /ST/ SCC  மாணாக்கர்களுக்கு ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  ஆகிய இரண்டு திட்டங்களிலும் இது நாள் வரை இணைய வழியில்  விண்ணப்பிக்காத இணைப்பில் உள்ள  பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்காததிற்கான  காரணத்தை எழுத்து வடிவில் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் , மேலும் தகுதியுடைய அனைத்து   SC /ST/ SCC மாணாக்கர்களுக்கு உடனடியாக விண்ணப்பிற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT  ATTACHMENT 

Saturday 16 May 2020

16.05.2020    //தேர்வுகள் அவசரம் //

2020 இடைநிலை பொதுத்தேர்வு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளியில் நடைபெற உள்ளதால் சார்ந்த பள்ளியில்  வகுப்பறைகள் மற்றும் Desk and Bench  தேவையான அளவு உள்ளதா ?  என்பதை கீழே உள்ள  Excel online sheet - ல் இன்று (16.05.2020 )  பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ONLINE SHEET 

Friday 15 May 2020

15.05.2020
 அனைத்து வகை அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 
1. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்திரவின் பெயரில் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு ஜமாபந்தி முறையில் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் ( சாதி/ வருமானம் / இருப்பிடம் ) வருவாய்  துறையின் மூலம் வழங்கப்பட்டுவருகிறது. ஜமாபந்தி நடைபெறும் மையங்களில் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து மாணவர்களுக்கு மேற்கண்ட சான்றிதழை பெற்று தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. அனைத்து வகை அரசு  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான மின்கட்டண தேவை பட்டியல் விவரத்தினை  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

Friday 8 May 2020

08.05.2020
அனைத்து அரசு / நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
ஏப்ரல் 2020 -க்கான ஊதியப்பட்டியல்கள் - IFHRMS - மூலம் வில்லை எண்கள் சார் கருவூலத்தில் சமர்ப்பிப்பது  சார்பான இணைப்பில் உள்ள  திருப்பத்தூர் உதவி கருவூல அலுவலர் அவர்களின்  செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT  ATTACHMENT