Tuesday 30 April 2019

30.04.2019 - புகையிலை தடுப்பு 

 அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர் கவனத்திற்கு சில சமூக விரோதிகள் பள்ளி குழந்தைகளுக்கு / மாணாக்கர்களுக்கு  உண்ணும் உணவுப்பொருட்களில் /தின்பண்டங்களில் புகையிலை மற்றும்  அது சார்ந்த போதை பொருட்களை விற்பனை செய்வதாகவும்  அது உடல் நலத்திற்கு தீங்கு /கேடு விளைவிக்கும் என  எச்சரிக்கை  வாசகம் இன்றி விற்பனை செய்வதாகவும்  தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு புகார் வரப்பெற்றுள்ளது.  அவ்வாறு  புகையிலை மற்றும் போதை பொருட்களை பள்ளி மாணாக்கர்களுக்கு விற்பனை செய்வது  சட்டப்படி  குற்றமாகும்.

         எனவே அவ்வாறு தங்கள் பள்ளிக்கு அருகே விற்பனை செய்யும்  சமூக விரோதிகளை கண்டால் உடனே  சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் காவல் துறைக்கு புகார்  அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
30.04.2019 - அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - மேல்நிலை இரண்டாம் ஆண்டு மார்ச் 2019 பருவத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் / தேர்விற்கு வருகை புரியாதவர்கள் ஆகியோர் நடைபெறவிருக்கும் ஜூன் 2019 துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள்ளிவாயிலாகவும் தனிதேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் 03.05.2019 முதல் 08.05.2019 பிற்பகல் 05.45 மணி வரையில் விண்ணபித்தலுக்கான அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவிரைகள் Attachment 

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 - அகமதிப்பீட்டு மதிப்பெண் பூஜ்ஜியம் வழங்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் சரிபார்த்தல்அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்குமார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு தொடர்பாக   அகமதிப்பீட்டு மதிப்பெண் பூஜ்ஜியம் வழங்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள அகமதிப்பெண் (INTERNAL MARK) விவரத்தினை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் 30.04.2019 மாலை 4.00 மணிக்குள் ஊள்ளீடு செய்யும்படி  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  (உதாரணத்திற்கு   Absent அல்லது மதிப்பெண் குறிப்பிடப்பட வேண்டும்). 

30.04.2019 - அனைத்துவகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனதிற்கு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - விடைத்தாள் மறுகூட்டல் (RE TOTAL) விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தொகையினை செலுத்துவது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் Attachment 

Monday 29 April 2019

29.04.2019 - 2018-2019ஆம் ஆண்டிற்கான கொடிகளுக்கான  தொகை செலுத்தாத கீழ் காண்  பள்ளிகள்  30.04.2019 (நாளை) மாலை 4.00-மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஆ2 பிரிவில் நேரில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


1.அரசு உயர்நிலைப்பள்ளி, வெங்களாபுரம்
2.அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு 
3.அரசு (ம) மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்
4.அரசு மேல்நிலைப் பள்ளி, வள்ளிப்பட்டு
5. உபைபாஸ் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
6.உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் 

Friday 26 April 2019


26.04.2019 - அனைத்துவகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனதிற்கு – 22.04.2019 அன்று நடைபெற்ற தலைமை ஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான கூட்டம் மற்றும் 24.04.2019 அன்று 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான தேர்ச்சி அறிக்கை மற்றும் EMIS சார்பான கூட்டம் நடைபெற்றது. மேற்கண்ட கூட்டத்தில் கீழ்கண்ட தலைமை ஆசிரியர்கள் மற்று மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வருகை புரியாதது மிகவும் வருந்ததக்க செயலாகும். இதன் காரணமாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பு அறிக்கை அனுப்புவதில் காலதாமதம் எற்பட்டுள்ளது. எனவே இனி வருங்காலங்களில் இது போன்று நிகழ்வுகள் நேராவண்ணம் உயர் அலுவலர்களின் கூட்டங்களில்  கலந்து கொள்ள தெரிவிக்கலாகிறது. 
    22.04.2019 அன்று நடைபெற்ற கூட்டத்திற்கு வருகை புரியாத தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் விவரங்கள்
1. GOVT BHSS ALANGAYAM, 2. GHSS PERAMPATTU, 3. GGHSS MADAVALAM, 4. GHSS POONGULAM, 5. GHSS, VELLAKUTTAI, 6. GHSS, NIMMIYAMPATTU, 7. GHSS KASINAYAKKANPATTI, 8. G(G)HS MITTUR, 9. GHS PERIYAKURUMBATHERU, 10. GHS VENGALAPURAM, 11. GHS MALAIREDIYUR, 12. GHS MADHANACHERI, 13. GHS, KILAKKUPATHANAVADI, 14. GHS JAMMUNAPUDUR POONGULAM, 15. G(G)HS, NIMMIYAMPATTU, 16. GHS NEKKUNTHI, 17. GHS KANAVAIPUDUR, 18. G ADW HS ALANGAYAM, 19. GOVT EKALAYVA MODEL RESI SCHOOL, ATHANAVUR, 20. GHS CHINNAMOOKANUR, 21. GHS PULIYUR, 22. GHS PUTHAGARAM. 23. ST JOSEPHS (G) HSS, JOLARPETTAI, 24. DOMINIC SAVIO HSS, TIRUPATTUR.

     24.04.2019 அன்று நடைபெற்ற தேர்ச்சி அறிக்கை சார்பான கூட்டத்திற்கு வருகை புரியாத தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் விவரங்கள்
1. GHSS MALLAPALLI, 2. GGHSS MADAVALAM, 3. GHS CHINNAKAMMIYAMPATTU, 4. GHS CHINNAMOOKANUR, 5. GOVT EKALAYVA MODEL RESI SCHOOL, ATHANAVUR, 6. CS MATRIC SCHOOL, JAYAPURAM, 7. JAYA VASAVI M HSS, ALANGAYAM, 8. SRI RAMAKRISHNA M HSS, JOLARPETTAI, 9. SFS M HSS, VANIYAMBADI.


26.04.2019 - தேர்வுகள் அவசரம் - தனி கவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் பள்ளி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2019, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
1. தேர்வு முடிவுகள் வெளியிடுதல், Attachment 
2. அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) பதிவிறக்கம் செய்தல்Attachment 
3. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து மாணாக்கர்களுக்கு விநியோகம் செய்தல்Attachment 
4. பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க  02.05.2019 முதல் 04.05.2019 வரையில் தேர்வெழுதிய தேர்வுமையங்கள் வாயிலாக விண்ணபித்தலுக்கான  அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   Attachment 

Thursday 25 April 2019

25.04.2019 – மிக அவசரம் - தனி கவனம் - அனைத்து நிதியுதவிப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்குநாளை 26.04.2019 வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு தங்கள் பள்ளி சார்பான அங்கீகாரம்,   ஆசிரியர்களின் விவரங்கள், மாணாக்கர்களின் விவரங்கள் (GROUP WISE DETAILS), தங்கள் பள்ளியில் கணினி இயக்க தெரிந்த நபர் மற்றும் பள்ளியின் அலுவலக பணியாளருடன் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது.  

Wednesday 24 April 2019


25.04.2019 – அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக்  உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனதிற்கு -  வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரையின் படி 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான தேர்ச்சி அறிக்கையினை மாவட்டக்கல்வி அலுவலரின் ஒப்புதல் பெறாமல் வெளியிடக்கூடாது என அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.

24.04.2019 - மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு

மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளிகள் LKG வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வு முடிவுகளின் விவரங்களை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலரின் மேலொப்பம் பெறப்பட்ட பின்னறே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என தெரிவிக்கலாகிறது. 

      
 24.04.2019 - 2019 - 2020ஆம் கல்வியாண்டிற்கு இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 
      குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2019 -2020 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற  தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு  மறுக்கப்பட்ட மற்றும்  நலிவடைந்த  பிரிவினரின்  குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு  வழங்குதல் மற்றும் 100% இலக்கினை எய்திட பள்ளிகளுக்கு அறிவுரைகள். 

வழிமுறைகள் - 2
Banner format 

Tuesday 23 April 2019


23.04.2019 -   தமிழ்நாடு அமைச்சுப்பணி

உதவியாளர், இளநிலை உதவியாளர் 2019-2020ம் ஆண்டிற்கான காலிபணியிட மதிப்பீடு விவரங்களை இதுவரை ஒப்படைக்காத கீழ்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (23.04.2019)  மாலை 5 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது

ஒப்படைக்காத பள்ளிகள்

1.GBHSS, Alangayam, 2.GBHSS, Alangayam 3.GGHSS, Alangayam 4.GGHSS, Gajalnaickenpatti 5.GHSS, Vallipattu 6.GHSS, Natham 7.GHSS, Andiyapanur 8.GHSS, Vadugamuthampatti 9.GHSS, Periyakanalapatti 10.GHSS, Perampattu 11.GHSS, Poongulam 12.GHSS, Jayapuram 13.GHSS, Vishamangalam 14.GHS, Periyakurumpatheru 15.GHS, Vengalapuram 16.GHS, Annandapatti 17.GHS, Chinnakammiyampattu 18.GHS, Kothakottai 19.GHS, Parandapalli 20.GHS, kodumampalli, 21.GHS, Perumapattu




/தமிழ்நாடு அமைச்சுப்பணி//இளநிலை உதவியாளர்//

கருணை அடிப்படை நியமனம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) மூலம் நேரடி நியமனம் மற்றும் பதவிஉயர்வு பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டவர்களின் விவரங்களை இதுவரை ஒப்படைக்காத கீழ்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று(23.04.2019) மாலை 5 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

ஒப்படைக்காத பள்ளிகள்.

1.GBHSS, Alangayam 2.GHSS, Vallipattu 3.GHSS, Natham 4.Andiyapanur 5.GHSS, Perampattu 6.Meenakshi GGHSS, Tirupattur 7.GHSS, Nimmiyampattu 8.GHSS, Girisamudram 9.GHSS, Jayapuram 10.GHS, Thimmanamathur 11.GHS, Periyakurumpatheru 12.GHS, Vengalapuram 13.GHS, Thoranampathy 14.GHS, Malairediyur 15.GHS, Annandapatti 16.GHS, Elavampatti17.GHS, Parandapalli 18.GHS, Puliyur 19.GHS, Kodumampalli 20.GHS, Perumapattu



ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் தற்போது பணிபுரியும் நபர்கள் சார்பான விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இதுவரை ஒப்படைக்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (12.04.2019) மாலை 4 மணிக்குள் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தனிநபர் மூலம் ஒப்புடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒப்படைக்காத பள்ளிகள்

1.GHSS, Vellakuttai 2.GHSS, Vadugamuthampatti 3.GHS, Vengalapuram 4.GHS, Annandapatti5.GHS, Parandapalli 6.GHS, Jamunapudurpoongulam 7.GHSS, Nimmiyampattu

23.04.2019 - அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

     தங்கள் பள்ளியின் அளவுகோல் பதிவேடு ( Scale Register) அசல் மற்றும் நகல் 24.04.2019 காலை 10.00 க்கு அவசியம் உடன் எடுத்து வர வேண்டும். மேலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அனைத்து விவரங்களுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.                      மேலும் இணைப்பில் உள்ள படிவம் -1 மற்றும் 2 பூர்த்தி செய்து சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.  ATTACHMENT 

23.04.2019 - அவசரம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர் நிலை/மேல்நிலை /மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு 


2018-2019 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்  6ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வு முடிவுகள் 24.04.2019 அன்று காலை 9.00 மணிக்கு திருப்பத்தூர் அரசு (ஆ) மேல்நிலைப் பள்ளியில் மேலொப்பம் பெற்று தங்கள் பள்ளியில் 26.04.2019 அன்று தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும் தேர்ச்சி அறிக்கை 2 நகல்களில் ஒப்படைக்க வேண்டும்.

     1.கொடிகள் பணம், 2.பெற்றோர் ஆசிரியர் கழக நிதி 5% தொகை, 3.மருத்துவ நல நிதி தொகை, 4.சாரண சாரணியர் நிதி, 5.இந்திய செஞ்சிலுவை கட்டண நிதி உடன் செலுத்தப்பட வேண்டும், மேலும் அதற்கான இரசீதுகளை தேர்ச்சி பதிவேட்டில் ஒப்பம் பெறும் போது அதன் நகலை ஒப்படைக்கப்படவேண்டும் என தெரிவிக்கலாகிறது.

(குறிப்பு:- 1. உடற்கல்வி மற்றும் சூற்றுச் சூழல் பாடங்களுக்கு  தனித்தனியே மதிப்பெண்கள் மற்றும் தர நிலை பதிவு செய்து எடுத்துவரவும்.

     2. அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் 24.04.2019 அன்றே  தேர்ச்சி அறிக்கையில் ஒப்புதல் பெற வேண்டும், பிற நாட்களில் வருவதை தவிர்க்கவும் 

            3.மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளிகள் LKG வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வு முடிவுகளில் மேலொப்பம் பெற மேற்காண் மையத்திலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்)