Wednesday 30 December 2020

 31/12/2020  

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு

நீதிமன்ற வழக்குகள் சார்பானஅறிவுரைகள் இணைப்பில் கண்டவாறு  தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் உரிய நடவடிக்கைக்காக  அனுப்பப்படுகிறது. பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதல் மறுஅஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT

 30/12/2020  

மலைப்பிரதேசத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2021 -2022 ஆம் கல்வியாண்டிற்கு 1 முதல் 8 வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு  கம்பளிச்சட்டை வழங்குவதற்கு உத்தேச தேவைப்பட்டியல் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 04.01.2021 அன்று  ஆ3 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு,  படிவம் 

 30.12.2020

திருப்பத்தூர் கல்வி மாவட்டம், திருப்பத்தூர்  ஒன்றியத்தில் செயல்படும் அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு  வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள விலையில்லா நலத்திட்டங்கள் விநியோகம் செய்ய உள்ளதால் திருப்பத்தூர் ஒன்றியப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை 31.12.2020  காலை 10 முதல் மாலை 2.00 மணி வரை ஸ்ரீமீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ATTACHMENT ATTACHMENT  ATTACHMENT 

குறிப்பு:  இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

30.12.2020  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

பழங்குடியினர் நலம் - இணைப்பில் உள்ள கடிதப்படி 100 பழங்குடியினர் மாணவர்களை கல்வியியல் பட்டயப்படிப்பில் (D.T.Ed)  சேர்த்து பயிற்றுவிப்பதற்கான கட்டணம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு       ( TET)  பயிற்சி அளிப்பதற்கான கட்டணத்தை அரசே ஏற்க இருப்பதால் விருப்பமுள்ள மாணவர்களை தேர்வு செய்து 2019-2020 ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் விண்ணப்பங்களை திட்ட அலுவலருக்கு அனுப்புமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டு கொள்ளப் படுகிறார்கள்.இணைப்பு - 1, இணைப்பு - 2

Tuesday 29 December 2020

 30.12.2020  

அனைத்து அரசு / அரசு நிதியுதவி  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு 

அரசு / அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில்  மாற்று திறனாளிகளுக்கான கழிவறைகள் மற்றும்  சாய்தளம் இல்லாத பள்ளிகளில் கழிவறை மற்றும்  சாய்தளம்  ஏற்படுத்தி 100 சதவீதம் பணியினை முடிக்கப்பட்டு அதன் அறிக்கையினை இவ்வலுவலகத்தில்  08.01.2021 க்குள் நேரில் ஒப்படைக்குமாறு   தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

 30.12.2020     // பதவி உயர்வு கலந்தாய்வு //  

01.12.2019   நிலவரப்படி  தயாரிக்கப்பட்ட  அலுவலக உதவியாளர் /இரவுக்காவலர் /துப்புரவாளர் இணைந்த பதவியிலிருந்து பதிவு எழுத்தர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 31.12.2020 பிற்பகல் 3.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே சாரந்த அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் இரவுக் காவலர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக விடுவித்து அனுப்புமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், 15.03.2019 நிலவரப்படி தயாரிக்கப்பட்ட முன்னுரிமைப் பட்டியலின்படி பதிவு எழுத்தர் பதவியிலிருந்து ஆய்வக உதவியாளர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நிர்வாக காரணங்களினால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.  இணைப்பு -1, இணைப்பு -2

  30.12.2020   - நினைவூட்டல்  கடைசி

 அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின்  SMARD CARD  அனைத்தும் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தயார்நிலையில் உள்ளது.   இதுவரை SMARD CARD பெற்று செல்லாத தலைமை ஆசிரியர்கள் இன்று (30.12.2020)  04.00 மணிக்குள்   நேரில் வந்து பெற்று சென்று அதன் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 4 நகல்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

குறிப்பு . படிவத்தில் புகைப்படம் அருகில் இருக்கும்  SMARD CARD  எண்ணை ( எ.க) V00 என தொடங்கும் ) 9 இலக்க எண்ணை  பூர்த்தி செய்யவும் 

  30.12.2020   // தன்னார்வலர் ஆசிரியர்கள்// 

பொது விநியோகத்திட்டம் -  நியாயவிலைக்கடைகளில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசு -2021 வழங்கிடவும்  குடும்ப அட்டைதாரர்கள் சமுக விலகலை கடைப்பிடித்து பொருட்களை பெற்று செல்வதை கண்காணிக்கவும்  தன்னார்வலர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இணைப்பில் உள்ள தன்னார்வலர் ஆசிரியர்கள் 04.01.2021 முதல் அந்தந்த நியாயவிலைக்கடைகளில் சென்று  பணியாற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Saturday 26 December 2020

26.12.2020

அரசு/ அரசு உதவிபெறும் /மெட்ரிக்/ சிபிஎஸ்இ/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு:

இன்று மதிப்புமிகு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,

தேசிய இளைஞர் விழா 2020 கொண்டாடும் பொருட்டு 29. 12. 2020 மற்றும் 30.12.2020 அன்று கீழ்காணும் போட்டிகள் நடைபெற உள்ளது.

11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் போட்டியில் கலந்துகொள்ள தகுதியானவர்கள்.

இசை, நடனம் ,உடை அலங்காரம் ,நாடகம் காட்சிகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டுகள் போன்ற போட்டிகளில் இணைப்பில் கண்ட விவரங்களின்படி கலந்துகொள்ளலாம். மாணவர்களை தயார் செய்து  கலந்து கொள்ளும் போட்டி சார்ந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்கள் அந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் காட்சி விவரத்தினை  வீடியோ   செய்து (கொடுக்கப்பட்டுள்ள நேரத்துக்குள்) பென்டிரைவ் அல்லது சிடியில் பதிவு செய்து போட்டி நடைபெறும் நாளன்று  தலைமையாசிரியரின் உறுதிமொழி கடிதத்துடன் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், ஒரு  பொறுப்பாசிரியர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்குமாறு சார்ந்த அனைத்துவகை பள்ளிகளின் தலைமையாசிரியருக்கு  தெரிவிக்கப்படுகிறது.


போட்டிகள் நடைபெறும் இடம்: தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்

நடைபெறும் நாள்: 29.12.2020,30.12.2020

9 மணி முதல் 4 மணி வரை. 

போட்டியில்  கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களின் விவரங்களை

இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி  செய்து சார்ந்த மாவட்ட கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு, வருகின்ற திங்கட்கிழமை 28.12.2020 அன்று பிற்பகல் 3 மணிக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1, ATTACHMENT - 2, ATTACHMENT -3, ATTACHMENT - 4  ATTACHMENT - 5  ATTACHMENT - 6


 26.12.2020                          //NMMS தேர்வுகள்//

அனைத்து அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலை/ உயர்நிலைப்   பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

21.02.2021 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை (NMMS) தேர்விற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் விவரங்களை இணைப்பில் காணும்  அரசு தேர்வு  இயக்குநர் அவர்களின் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு செயல்படுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இணைப்பு - 1 இணைப்பு - 2

 

26.12.2020

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

IIT, JEE – தொழில் நுட்ப கல்வி போட்டி தேர்வுகள் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு M/s Nextgen Vidhya Portal Pvt. Ltd. இணைய தளம் வாயிலாக இந்நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்க உள்ளதால், விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

https://play.google.com/store/apps/details?id=com.vidhyaeduation.android  என்ற இணைய தள முகவரியில் மாணவர்கள் 21.12.2020 முதல் 31.12.2020 வரை பதிவு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி  வகுப்புகள் 04.01.2021 முதல் தொடங்கும். இப்பயிற்சியினை மாணவர்கள் பெறுவதை கண்காணிக்கும் வகையில் தொடர்புடைய பள்ளிகளில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை போதிக்கும் முதுகலை ஆசிரியர் ஒருவரை பொறுப்பாளராக நியமனம் செய்து இணைப்பில் உள்ள  படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து திருப்பத்துார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

 

26.12.2020  அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,


தமிழ்நாடு அமைச்சுப்பணி திருப்பத்தூர் வருவாய்  மாவட்டத்திலுள்ள அரசு/அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில்  பணிபுரியும்உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பதிவறை எழுத்தர்களுக்கு  அலுவலகப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இரண்டு நாட்கள் அலுவலக நடைமுறை சார்பான பயிற்சி  நடைபெறுதல் தகவல் தெரிவித்தல்  ATTACHMENT 


Thursday 24 December 2020

 24.12.2020     // NTSE தேர்வுகள்//

  NTSE தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு 

27.12.2020  அன்று நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத்தேர்விற்கு தேர்வு மையத்தில் கடைபிடிக்கவேண்டிய  நெறிமுறைகள் மற்றும் OMR SHEET  களை கட்டுக்காளாக கட்டி அனுப்பவேண்டிய முறைகளை இணைப்பில் காணும் அரசு தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1  ATTACHMENT2   ATTACHMENT3 

Wednesday 23 December 2020

 23.12.2020     // NTSE தேர்வுகள்//

  NTSE தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு 

27.12.2020  அன்று நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத்தேர்விற்கு தேர்வு மையத்தில் கடைபிடிக்கவேண்டி நெறிமுறைகள் மற்றும் OMR SHEET  களை கட்டுக்காளாக கட்டி அனுப்பவேண்டிய முறைகளை இணைப்பில் காணும் அரசு தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Tuesday 22 December 2020

  23.12.2020

 அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின்  SMARD CARD  அனைத்தும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தயார்நிலையில் உள்ளது. இன்று (23.12.2020)  முதல் தலைமை ஆசிரியர்கள்   நேரில் வந்து பெற்று சென்று அதன் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 4 நகல்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

 22.12.2020     

திருப்பத்தூர் கல்வி மாவட்டம், ஆலங்காயம் மற்றும் ஜோலார்பேட்டை  ஒன்றியத்தில் செயல்படும் அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு  வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள விலையில்லா நலத்திட்டங்கள் விநியோகம் செய்ய உள்ளதால் ஆலங்காயம் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றியப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை காலை 10 முதல் மாலை 2.00 மணி வரை ஸ்ரீமீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ATTACHMENT ATTACHMENT  ATTACHMENT 

குறிப்பு:  இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  22.12.2020      (திருத்தியது)  // மிக அவசரம் //

ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலம் –பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2020 – 2021 ஆம் கல்வியாண்டு  -   ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து  3 நகல்களில்  சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று 23.12.2020 அன்று  மாலை  05.00 மணிக்குள்   இவ்வலுவலக அ5 பிரிவில்  ஒப்படைக்குமாறு அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதி வாய்ந்த மாணவியர் இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.  ATTACHMENT - 1ATTACHMENT - 2,  ATTACHMENT - 3

குறிப்பு : -  1.மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல்  தயார் நிலையில் வைத்துக்ககொள்ளவும்.
                        

Monday 21 December 2020

 22.12.2020    கடைசி நினைவூட்டல் - 3

 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி/ மெட்ரிக் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளில் உள்ள தேசிய மாணவர் படை (NCC) எந்தந்த பள்ளிகளில் உள்ளது என்பதையும் அது எந்த அணியை சார்ந்தது என்பதையும் இணைக்கப்பட்டுள்ள ஆன் லைன் படிவத்தில்  21.12.2020 காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது ஆனால்  இன்னும் சில பள்ளிகள் உள்ளீடு செய்யவில்லை  உள்ளீடு செய்யாத மீதம் உள்ள பள்ளிகள் இன்று மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தேசிய மாணவர் படை இல்லை எனில் இன்மை அறிக்கையை   உள்ளீடு  செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ONLINE SHEET 

 21.12.2020      (திருத்தியது)  // மிக அவசரம் //

ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலம் –பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2020 – 2021 ஆம் கல்வியாண்டு  -   ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்தும், சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்றும் 23.12.2020 அன்று  மாலைக்குள் இவ்வலுவலகத்தில்  ஒப்படைக்குமாறு சார்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்  உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT - 1, ATTACHMENT - 2ATTACHMENT - 3

(குறிப்பு : -  1.மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல்
                       2. படிவம்  3 நகல்கள்  

 21.12.2020    // பதவி உயர்வு கலந்தாய்வு //  

31.12.2019   நிலவரப்படி  தயாரிக்கப்பட்ட  அலுவலக உதவியாளர் /இரவுக்காவலர் /துப்புரவாளர் இணைந்த பதவியிலிருந்து பதிவு எழுத்தர் மற்றும் பதிவு எழுத்தர் பதவியிலிருந்து ஆய்வக உதவியாளர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு 31.12.2020 காலை 11.00 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. எனவே பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த இணைப்பு பட்டியலில் உள்ள பணியாளர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்துக் கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்ப சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1, இணைப்பு -2

21.12.2020     

திருப்பத்தூர் கல்வி மாவட்டம், கந்திலி ஒன்றியத்தில் செயல்படும் அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி / மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு  வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள விலையில்லா நலத்திட்டங்கள் விநியோகம் செய்ய உள்ளதால் கந்திலி ஒன்றியப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை காலை 10 முதல் மாலை 12.00 மணி வரை ஸ்ரீமீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ATTACHMENT ATTACHMENT  ATTACHMENT 

குறிப்பு:  இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Friday 18 December 2020

 19.12.2020

 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி/ மெட்ரிக் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளில் உள்ள தேசிய மாணவர் படை (NCC) எந்தந்த பள்ளிகளில் உள்ளது என்பதையும் அது எந்த அணியை சார்ந்தது என்பதையும் இணைக்கப்பட்டுள்ள ஆன் லைன் படிவத்தில்  21.12.2020 காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் தேசிய மாணவர் படை இல்லை எனில் இன்மை அறிக்கையை   உள்ளீடு  செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ONLINE SHEET 

 18/12/2020   // NTSE தேர்வுகள் //

அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக்  / சி.பி.எஸ்.சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

27.12.2020 அன்று நடைபெறவிருக்கும் தேசிய திறனாய்வுத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுக்களை  21.12.2020 முதல் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்  www.dge.tn.gov.in   என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

குறிப்பு   : தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளில் பெயர் / புகைப்படம் / பிறந்த தேதி ஆகியவற்றின் திருத்தம் ஏதேனும் இருப்பின் இணைப்பில் காணும்  அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின் படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

 18.12.2020   // அவசரம் // 

அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

இணைப்பில் காணும் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இன் கீழ் தகவல்  கோரும் மனுதாரர்க்கு  தகவல் அனுப்பிவிட்டு  அதன் நகலினை திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கும் மற்றும் இவ்வலுவலகத்திற்கும் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இப்பொருளில் காலதாமதம் ஏற்படின் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு ஏற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது- ATTACHMENT ATTACHMENT

Wednesday 16 December 2020

 16/12/2020    

அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான இலவச விலையில்லா பாடநூல்கள் 11 மற்றும் 12 வகுப்பு மாணாக்கர்களுக்கு  இதுவரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள புத்தகம் மற்றும் இரண்டாம்  தொகுதி பாடநூல்கள் தேவைப்பட்டியல் மற்றும் இலவச சீருடை , காலணி , நோட்டு புத்தகம், புத்தகப்பை , நிலவரைப்படம் , கணித உபகரணப்பெட்டி  இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 17.12.2020 (நாளை ) மாலை 4.00 மணிக்குள் 2 நகல்களில் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT ATTACHMENT  ATTACHMENT 

 16.12.2020     கடைசி  நினைவூட்டல்  


இணைப்பில் உள்ள அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

VPRC மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஆகஸ்ட் - 2019 முதல் மார்ச் - 2020 வரையுள்ள மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிய விவரம் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களுடன் வங்கி கணக்கு  புத்தக முதல் பக்க நகல் மற்றும் CREDIT  & DEBIT பக்க நகல் இவ்வலுவலக அ5 பிரிவில் 17.12.2020 அன்று மதியம் 01.00 மணிக்குள்  சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையும் இரு நகல்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பராமரிப்பு செலவு மட்டும் பெறும் பள்ளிகளும் அறிக்கை இரு நகல்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் சுகாதார பணியாளர்கள் நியமன விவரம் மற்றும் ஜீன் - 2019 முதல் மார்ச் - 2020 வரை அவர்கள் ஊதியம் பெற்றமைக்கான சான்று ஆகியவற்றை இரு நகல்களிலும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

1. VPRC - ஊதியம் வழங்கப்பட்ட விவர அறிக்கை வழங்க வேண்டிய பள்ளிகள்.

1. அ.உ.நி.பள்ளி, வெங்களாபுரம்.
.2. அ.மே.நி.பள்ளி, நத்தம்.
3. அ.மே.நி.பள்ளி  குரும்பேரி,
4. அ.மே.நி.பள்ளி கொரட்டி,
5. அ.மே.நி. பள்ளி குனிச்சி,
6.  அரசு ஆதிந.பள்ளி, ஆலங்காயம்,
7.  அ.உ.நி.பள்ளி, பாரண்டப்பள்ளி,
8. அ.பெ.மே.நி.பள்ளி, புதுப்பேட்டை,
9. அ.மே.நி.பள்ளி, கேத்தாண்டப்பட்டி,

2.  இன்மை அறிக்கை வழங்க வேண்டிய பள்ளிகள்

1. அ.உ.நி.பள்ளி, பெரியகரம்,
2. அ.ம.மே.நி.பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி,
3. அ.ம.உ.நி.பள்ளி, மிட்டூர்,
4. அ.ஆ.மே.நி.பள்ளி, திருப்பத்தூர்,
5. அ.மீனாட்சி மகளிர் மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.
6. வனத்துறை அ.உ.பள்ளி , நெல்லி வாசல்,
7. அ.உ.பள்ளி, பி.நாயக்கனூர்,
8. அ.ஆ.மே.நி.பள்ளி, ஆலங்காயம்,
9. வனத்துறை அ.மே.நி.பள்ளி புதூர் நாடு ,
10. அ.உ.நி.பள்ளி, குன்னத்தூர்,
11.அ.உ.நி.பள்ளி, கோனப்பட்டு,
12. அ.ஆ.மே.நி.பள்ளி, புதுப்பேட்டை,


Tuesday 15 December 2020

15.12.2020              நினைவூட்டல் - 1   (மிக அவசரம்)

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளில் உள்ள தேசிய மாணவர் படை (NCC) எந்தந்த பள்ளிகளில் உள்ளது என்பதையும் அது எந்த அணியை சார்ந்தது என்பதையும் இணைக்கப்பட்ட படிவத்தில் (Vanavil Avvaiyar Font) இல் தட்டச்சு செய்து  நாளை (16.12.2020 )  காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 15/12/2020     நினைவூட்டல் - 2        //  மிக அவசரம்// 

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 பள்ளி மற்றும் அலுவலகங்களில் அடிப்படை பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட விவரம் அலுவலக உதவியாளர் பணியிடம் தொடங்கி அதற்கு கீழ் அமைந்த அனைத்து பணியிடங்களுக்கும் அளவைப் பதிவேட்டை ஆய்வு செய்து எவ்வித பணியிடமும் விடுபடாமல் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 16.12.2020 காலை 10.30 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்க (இதுவரை ஒப்படைக்காத பள்ளிகள்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ATTACHMENT  ATTACHMENT 

 

Monday 14 December 2020

 15.12.2020    நினைவூட்டல் - 1   ( மிக அவசரம்) 

இணைப்பில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த கழிவறை அமைக்க தேவையான விவரங்களை ONLINE SHEET  இல்  இன்று  மதியம் 01.00 மணிக்குள் பூர்த்தி  செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ONLINE SHEET

 15.12.2020  நினைவூட்டு  - 1 

அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு 

01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பாக தகுதிவாய்ந்தவர்கள் இல்லை எனில் இன்மை அறிக்கை அளிக்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 04.00 மணிக்குள் தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Sunday 13 December 2020

 14.12.2020  அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளில் உள்ள தேசிய மாணவர் படை (NCC) எந்தந்த பள்ளிகளில் உள்ளது என்பதையும் அது எந்த அணியை சார்ந்தது என்பதையும் இணைக்கப்பட்ட படிவத்தில் (Vanavil Avvaiyar Font) இல் தட்டச்சு செய்து  இன்று (14.12.2020 )  மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

14/12/2020  //  மிக அவசரம்// 

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 பள்ளி மற்றும் அலுவலகங்களில் அடிப்படை பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட விவரம் அலுவலக உதவியாளர் பணியிடம் தொடங்கி அதற்கு கீழ் அமைந்த அனைத்து பணியிடங்களுக்கும் அளவைப்பதிவேட்டை ஆய்வு செய்து எவ்வித பணியிடமும் விடுபடாமல் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து இன்று 14.12.2020 பிற்பகல்1.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT  ATTACHMENT 

 14.12.2020   ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு  (Trust Exam) ஜனவரி 2021இல் நடைபெறவுள்ளது. அத்தேர்வு எழுத விருப்பம் உள்ள 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் பெற்று அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) உள்ளீடு செய்வது தொடர்பான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டி விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. ஊரகப் பகுதிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர், அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Friday 11 December 2020

 11.12.2020    

இணைப்பில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த கழிவறை அமைக்க தேவையான விவரங்களை ONLINE SHEET  இல்  வரும் திங்கட்கிழமை  (14.12.2020) க்குள் பூர்த்தி  செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE SHEET

 

Thursday 10 December 2020

 10.12.2020 

 அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 2021 -2022  ஆண்டிற்கான விலையில்லா கால் ஏந்திகள். மற்றும் காலுறைகள் வழங்குவதற்காக  6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களின் விவரம் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில்   11.12.2020 பிற்பகல் 2.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ONLINE SHEET 

 10.12.2020 

 அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 SCHOOL EDUCATION - 2000 FREE REGISTRATION FOR INTERNATIONAL ASTRONOMY CONTEST 2021 FOR GOVERNMENT HIGH AND HIGHER SECONDARY SCHOOL STUDENTS OF CLASSES 9, 10 AND 11   TO PARTICIPATE IN THE INTERNATIONAL ASTRONOMY CONTEST 2021. ATTACHMENT ATTACHMENT

Wednesday 9 December 2020

 09/12/2020  // அவசரம்// 

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 பள்ளி மற்றும் அலுவலகங்களில் அடிப்படை பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட விவரம் அலுவலக உதவியாளர் பணியிடம் தொடங்கி அதற்கு கீழ் அமைந்த அனைத்து பணியிடங்களுக்கும் அளவைப்பதிவேட்டை ஆய்வு செய்து எவ்வித பணியிடமும் விடுபடாமல் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 14.12.2020 க்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT  ATTACHMENT 

 09.12.2020  அனைத்து வகை  அரசு/அரசு நிதியுதவி  / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளித்  தலைமை  ஆசிரியர்கள் /  முதல்வர்கள் கவனத்திற்கு,

இணைப்பிலுள்ள செயல்முறை கடிதத்தின் படி பள்ளி மாணவ / மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான முதலுதவி தொடர்பான MOBILE APP  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இணைப்பிலுள்ள LINK ஐ கிளிக் செய்து பயன்பெறுமாறு அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி  / மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளித்  தலைமை  ஆசிரியர்கள் /  முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

 09.12.2020  அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

சிறுபான்மையினர் நலம் - சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக சென்னை, சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட காணொலி ஆய்வு கூட்டத்தில் இணைப்பில் கண்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Tuesday 8 December 2020

 09/12/2020  

15/03/2019 நிலவரப்படி பதிவு எழுத்தர் பதிவியில் இருந்து ஆய்வக உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து  அனுப்பப்படுகிறது. சார்ந்த பணியாளர்கள் தங்களின் பணிப்பதிவேடு மற்றும் கல்விச் சான்றிதழ்களை  14.12.2020 க்குள் இவ்வலுவலகத்திற்கு கொண்டுவந்து சரிபார்த்து முன்னுரிமைப்பட்டியலில் கையொப்பம் இடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT 

  08/12/2020      நினைவூட்டல்  - 2     // தேர்தல் 2021 அவசரம் //

 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தின் படி திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 இல் பணியாற்றிட அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவி  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரம் இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து இரு நகல்களில் 04.12.2020 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது , ஆனால் இதுநாள்வரை கீழ்காணும் பள்ளிகள் ஒப்படைக்கப்படவில்லை. ஒப்படைக்காத பள்ளிகள் நாளை (09.12.2020)  காலை  11.00 மணிக்குள் ஒப்படைக்கவேண்டும் 

குறிப்பு . www.nvsp.in  என்ற இணையதளத்தில் Search in Electoral roll  கிளிக் செய்து  தங்களின் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். 

அளவுகோல் பதிவேடு மற்றும் வருகை பதிவேடு  நகல் சமர்பிக்கவும்  

ATTACHMENT1.  FORM . NOC 

பள்ளிகளின் விவரம்

1 . அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்குட்டை.

2 . அரசு மேல்நிலைப்பள்ளி, பேரம்பட்டு

3 . அரசு உயர்நிலைப்பள்ளி ஜெடையனூர்

4 . அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, ஆலங்காயம்

5 . வனத்துறை பள்ளி, புதூர்நாடு, 

6 .  வனத்துறை பள்ளி, நெல்லிவாசல்

7 . தோன்மினிக்சாவியோ மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்

8 . மேரி இமாக்குலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்

9 . உபைபாஸ் மேல்நிலைப்பள்ளி , திருப்பத்தூர்

10 . சென்ட் சார்லஸ் அத்தணாவூர்



 08.12.2020        நினைவூட்டல் - 2      // தேர்வுகள் //  மிக மிக அவசரம் //

அனைத்து அரசு மற்றும் நிதியுதவி  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

நடைபெற்று முடிந்த மார்ச் 2020 இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொது தேர்வு எழுதிய  பள்ளி மாணாக்கர்களில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழி பயிலும் ( INCLUDING ENGLISH MEDIUM)   SC/ ST/SS/ MBC/DNC/BC/OB இனத்தை சார்ந்த (BC/OB  இனத்தை சார்ந்த மாணாக்கர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் ) மாணாக்கர்களின் இன வரியான எண்ணிக்கையினை இத்துடன் இணைத்துள்ள ஆன் லைன் படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு  அனைத்து  தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE SHEET

குறிப்பு . 

1). தமிழ் வழி பயிற்று மொழி மட்டும் கொண்ட பள்ளிகள் தங்கள் பள்ளிக்கு எதிரே உள்ள கலங்களில் "0" என்று உள்ளீடு செய்யவும்.


2.) பெரும்பாலான பள்ளிகள் 10 ஆம் வகுப்பு  மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்யமாமல் உள்ளனர். சார்ந்த தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி உள்ளீடுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.