Tuesday 24 March 2020

24.03.2020
 அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கவனத்திற்கு
மார்ச் மாத EPAYROLL   சம்பள பட்டியல் மற்றும் IFHRMS  சம்பளம் பட்டியலுடன் ஒப்பீடு செய்து வரும் 05 APR 2020  க்குள் சரி செய்து தருகிறோம் என்று உறுதி அளிக்கிறேன் , என்ற கடிதத்துடன் சமர்ப்பிக்கப்படும் சம்பளம் பட்டியலுக்கு மட்டுமே வில்லை எண் தரப்படும் என்பதை உதவி கருவூல அலுவலர்   தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவர்களும் மேற்கண்ட சான்றுடன்,  மார்ச் 2020 க்கான சம்பளபட்டியல்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கலாகிறது. 

                                                                                           மாவட்டக்கல்வி அலுவலர்,
                                                                                                         திருப்பத்தூர்.

Monday 23 March 2020

24.03.2020    G.O.(Ms). No.152
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

Corona Virus Disease (COVID-19) - Infection Prevention and Control - The Epidemic Diseases ACT, 1897 ( Central Act No.3 of 1897) - Regulations - Notification - Issued  ATTACHMENT 
23.03.2020  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

நபார்டு திட்டம் : கடந்த 3 ஆண்டுகளில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களின் விவரம் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில்  பூர்த்தி செய்து இன்று மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
23.03.2020  // மிக மிக அவசரம் //
 அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களின்  விவரங்கள்  இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று ( 23.03.2020 )  பிற்பகல் 03.00 மணிக்குள்  இவ்வலுவலகத்தில்  தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Sunday 22 March 2020

23.03.2020      //தேர்வுகள் அவசரம்//    இடைநிலைப்பொதுத் தேர்வு //

 அனைத்து  வகை   தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 
 கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் / ஏப்ரல் 2020  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை ஒத்தி வைத்தல் - சார்பான இணைப்பில் கண்ட   அரசுத் தேர்வு இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
23.03.2020       // தேர்வுகள் அவசரம்//
அறைக்கண்காணிப்பாளர்களுக்கான ஆயத்த கூட்டம் - ஒத்திவைத்தல் 

 இடைநிலைப்பொதுத் தேர்வு மார்ச் 2020 
அந்தந்த தேர்வு மையங்களில் இன்று பிற்பகல்  நடைபெறுவதாக இருந்த  அறைக்கண்காணிப்பாளர்களுக்கான ஆயத்த கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. நாள் பின்னர் அறிவிக்கப்படும்    

                                                                     மாவட்டக்கல்வி அலுவலர்,
                                                                                    திருப்பத்தூர்.
23.03.2020  //தேர்வுகள் அவசரம்//
 அனைத்து  தேர்வு மைய  தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 
 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக  இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Friday 20 March 2020

20.03.2020
 அனைத்து  அரசு  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

தங்கள் பள்ளி/ அலுவலகத்தில்  பணிபுரியும் இளநிலை உதவியாளர் மற்றும்  தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் - 15.03.2020 நிலவரப்படி  தகுதிபெற்ற பணியாளர்கள் 31.03.2013  வரை இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக பணி நியமனம் பெற்றவர்கள் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி  செய்து  3 நகல்களில் 26.03.2020 க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT1 ATTACHMENT2
20.03.2020     //தேர்வுகள்//
அனைத்து வகை   தேர்வு மைய  தலைமை  ஆசிரியர் மற்றும் முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 
மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு - வரலாறு பாடத் தேர்வு - தேர்வர்களுக்கு முதன்மை விடைத்தாளுடன் வரைபடம் வழங்குதல் குறித்த இணைப்பில் கண்ட   அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Thursday 19 March 2020

20.03.2020  // தேர்வுகள் //
 அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத்தேர்வு சமூக அறிவியல் பாடத்தேர்வு - தமிழ்மொழி பாடத்தேர்வு - கணித பாடத்தேர்வு - தேர்வுகளுக்கான வரைபடம் மற்றும் வரைக்கட்டத்தாள் பெற்றுச் செல்ல தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பான அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் அறிவுரையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT 

Wednesday 18 March 2020

19.03.2020
 அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வு மார்ச் 2020 - தேர்வு  அறை  கண்காணிப்பாளர்களுக்கான ஆணையினை இன்று (19.03.2020 )  03.00 முதல் 04.00 மணிக்குள் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
18.03.2020  // தேர்வுகள் //
 அனைத்து வகை மேல்நிலை  தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு 
மார்ச் 2020 - மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வில் புதிய பாடத்திட்டத்தில்  வரலாறு பாட தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு வழங்கும் முதன்மை விடைத்தாட்களுடன் ஓர் இந்திய வரைபடத்தினையும் ஓர் உலக வரைபடத்தினையும் வைத்து 
  தைக்கப்பட்டுள்ளதா என்பதை மீளவும் உறுதி செய்து கொள்ளவும்   இணைப்பில் உள்ள அரசுத் தேர்வு இயக்குநர் அவர்களின்   அறிவுரையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .ATTACHMENT 
18.03.2020    // தேர்வுகள் // 

  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2020   முதன்மைக்கண்காணிப்பாளர் , துறை அலுவலர், வழித்தட அலுவலர் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களுக்கான கூட்டம்   திருப்பத்தூர் டோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் 19.03.2020 அன்று பிற்பகல் 03.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெறும் கூட்டத்தில்  மேற்காணும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
18.03.2020
 அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு

 பத்தாம் வகுப்பு (இடைநிலை) பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2020 க்கான இணைப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு அறைக்கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி  திருப்பத்தூர் டோமினிக் சாவியோ  மேல்நிலைப்பள்ளியில் 19.03.2020 வியாழன் அன்று பிற்பகல் 02.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும் . எனவே, இணைப்பில் உள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
18.03.2020
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
தற்போது 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வு நடைபெறும் நாளன்று நகராட்சி / மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தேர்வு அறைகளில் தேர்வு துவங்குவதற்கு முன்பாக கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும் . மேலும் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக மாணவர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் /  Hand Sanitizers  மூலம் சுத்தம்  செய்துகொள்ளவும் தேர்வு மைய பள்ளியின் தலைமை ஆசிரியர் / தேர்வு மைய முதன்மை தேர்வு கண்காணிப்பாளர்/ துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் பள்ளியின் தலைமை ஆசிரியர்/ முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Tuesday 17 March 2020

17.03.2020   /// மிக மிக அவசரம்//
 அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்களின் கவனத்திற்கு 
 பள்ளிக்கல்வி வழக்குகள் - இடைநிலைக்கல்வி - அரசு உதவி பெறும் பள்ளிகள் - சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றி நியமனம் செய்யப்பட்டவர்களில் ஒப்புதல் வழங்க கோரியும் மற்றும் தொடர் ஊதிய உயர்வு இதர பணப்பலன்கள் கோரியவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 2 நகல்களில்  இன்று பிற்பகல் 04,00 மணிக்குள்  இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 
17.03.2020   // தேர்வுகள் அவசரம்//
 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

பத்தாம் வகுப்பு மார்ச் / ஏப்ரல் 2020 பொதுத் தேர்வு - பள்ளி மாணாக்கரின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு -PART -1  மொழிப்பாடம் மற்றும் விருப்ப மொழிப்பாடம்  PART - IV  போன்றவற்றில் தேர்வு கூட நுழைவுச்சீட்டில் சரியாக பதியப்பட்டுள்ளதா என்பதனை தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Monday 16 March 2020

17.03.2020   // பள்ளிகளுக்கு விடுமுறை //
அனைத்து வகை  அரசு/ நிதியுதவி/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை / பிரைமரி / மெட்ரிக் / சி.பி.எஸ்.சி. பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்களின் கவனத்திற்கு
பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்டங்கள்- அனைத்து வகைப்பள்ளிகள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மாநகராட்சி / தனியார் பள்ளிகள்  மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 17.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க  இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT  ATTACHMENT
16.03.2020  // கொரோனா விழிப்புணர்வு //
 அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
மாணவர்களின் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்திட மாணவர்கள் சோப்பினால் கை கழுவுதல் சார்பான வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ATTACHMENT 

Friday 13 March 2020

13.03.2020  // தேர்வுகள் அவசரம் //

 அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும்  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
நடைபெற இருக்கும் பத்தாம் வகுப்பு மார்ச்/ ஏப்ரல் 2020  பொதுத் தேர்விற்கான முன்மைக்கண்காணிப்பாளர் , துறை அலுவலர், வழித்தட அலுவலர் மற்றும் வினாத்தாட்கள்  காப்பாளர்க்கான ஆணையினை 16.03.2020 அன்று திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்   நேரில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் 17.03.2020 அன்று காலை 10.00 மணிக்கு  வேலூர்அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில்  வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் நடத்தப்படும் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
13.03.2020  // மிக மிக அவசரம்//
 அனைத்து வகை அரசு / நிதியுதவி   பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு 
IFHRMS - ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊதியப்பட்டியல்கள் - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின்   Dues  & Deduction ( Empliyee data's completed in IFHRMS)  உள்ளீடு  செய்யப்பட்ட எண்ணிக்கையினை  EMIS  இணையதளத்தில் 16.03.2020 க்குள் உள்ளீடு  செய்து அதன் நகலினை இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
   For  High and Higher Secondary Schools 

  EMIS - Staff Menu  - IFHRMS  AT http://emis.tnschools.gov.in/

13.03.2020   // தேர்வுகள் அவசரம் //
அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 
மார்ச் / ஏப்ரல்  2020 இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ்  பொதுத் தேர்வு - முதன்மை விடைத்தாள் - முகப்புத்தாள் தைத்தல்  சார்பான  இணைப்பில் உள்ள அரசுத் தேர்வு இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
ATTACHMENT   ATTACHMENT
13.03.2020 // கொரோனா விழிப்புணர்வு //

 அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 மாணவர்களின் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்திட மாணவர்கள் சோப்பினால் கை கழுவுதல்  சார்பான  இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT 

Thursday 12 March 2020

13.03.2020    // தேர்வுகள் அவசரம்//
 அனைத்து   தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 
இடைநிலைக்கல்வி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2020 முகப்புத்தாட்கள் - பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் தனித்தேர்வர்களின் விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்களை மஞ்சள் நிறத் தாளில் மறு அச்சழுத்தம் செய்தல் சார்பாக  இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
12.03.2020  நினைவூட்டல் - 02 // மிக மிக அவசரம் // தனிகவனம்//

அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின்  PREMATRIC  மற்றும்  POSTMATRIC  புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத பள்ளிகள் இன்று மாலைக்குள் சமர்ப்பித்து அதன் நகலினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT- 1, ATTACHMENT - 2.

Wednesday 11 March 2020

12.03.2020    // தேர்வுகள் அவசரம்//
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலை தேர்வு மைய தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
இடைநிலைக் கல்வி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2020 முகப்புத்தாட்கள் - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள்  - பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக இணைப்பில் கண்டுள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT 
11.03.2020  // தேர்வுகள் அவசரம்//
அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி  தேர்வு மைய தலைமை  ஆசிரியர்கள் மற்றும்   முதன்மைக் கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 
புள்ளியியல் (STATISTICS ) பாடம் தேர்வு சார்பான இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
11.03.2020  அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நல அலுவலகத்தின் செய்தியின் பொருட்டு 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை  பயிலும் SC / ST  மாணவிகளின் விவரங்கள் இன்று மாலை 05.00 மணிக்குள் தனித் தனியே  ONLINE SHEET - இல் உள்ளபடி உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  ONLINE SHEET - 1  ONLINE SHEET - 2

Tuesday 10 March 2020

11.03.2020        // மிக மிக அவசரம் // தனிகவனம் //

 அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


ஆதிதிராவிடர் நல ஆணையரின் கடிதத்தின்படி 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 6  ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் மாணவிகளின் வங்கி கணக்குகள் அல்லது அவரது தாயார் பெயரில் தொடங்கப்பட்ட அஞ்சலக சேமிப்பு கணக்கு விவரங்களை கொடுக்கப்பட்ட படிவத்தில் தனித் தனியாக பூர்த்தி செய்து மென் நகலில் (CD)  (Soft Copy) ஒன்றும் மற்றும் 3 வன் நகலிலும் (Hard Copy) இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி ஏற்கனவே 21.02.2020 அன்று கோரப்பட்டது. ஆனால் இணைப்பில் கண்ட பள்ளிகள் இதுவரை ஒப்படைக்கவில்லை இதனால் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே மறு நினைவூட்டலுக்கு இடமின்றி நாளை 12.03.2020 பிற்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க வேண்டிய நிலை உள்ளது என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. ATTACHMENT-1,   ATTACHMENT - 2

குறிப்பு: 1. படிவத்தில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது.
                  2. SC மற்றும் ST விவரங்கள் தனித் தனியாகவும்.
                 3. Bank மற்றும் Post Office Account விவரங்கள் தனித் தனியாகவும்  (SHEET 1 &                                SHEET 2)  வழங்கவேண்டும்.

11.03.2020   // தகவல் அறியும் உரிமைச்சட்டம்//
 அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு                


 அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு 16.03.2020 க்குள்  அனுப்பி விட்டு அதன் நகலினை  தனி நபர் மூலம் அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Monday 9 March 2020

10.03.2020   //  உதவி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் //
அனைத்து வகை அரசு / நிதியுதவி / சுயநிதி / உயர்நிலை/ மேல்நிலை / மெட்ரிக் பள்ளி   தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்  கவனத்திற்கு
 வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரால் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில்  தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற உள்ளதால்  இன்று  (10.03.2020 ) திருப்பத்தூர் டோமினிக்சாவியோ மேல்நிலைப்பள்ளியில் பிற்பகல் 02.00 மணியளவில்  உதவி  தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்    ,  மார்ச்/ஏப்ரல்  2020 ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறைக்கண்காணிப்பாளர் நியமனத்திற்கு (LOT SYSTEM)  குலுக்கல் முறையில் நியமனம் செய்தல் பணி  மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பயிற்சியும் நடைபெற உள்ளதால் சார்ந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   

 09.03.2020     //மிக அவசரம் //

அனைத்து அரசு /அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

 மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை - திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி வட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வயது வரம்பு தளர்த்தி உதவித் தொகை வழங்க 10.03.2020 அன்று காலை 10.30 மணியளவில் ஆம்பூர் MC ரோடு IELC காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெறுவது சார்பாக மாற்றுத் திறனாளி மாணவர்களை இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து அரசு /அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT
09.03.2020     நினைவூட்டல் - 01  //மிக அவசரம் //

அனைத்து அரசு /அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,


PREMATRIC / POSTMATRIC  - 2019 - 2020 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் / மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவ  மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய 09.03.2020 இன்று இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இணைப்பில் உள்ள நிலுவைப் பட்டியலில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக பதிவேற்றம் செய்து மாணாக்கர்கள் கல்வி உதவித் தொகை பெற ஏதுவாக விரைந்து செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT-1 ATTACHMENT-2

Sunday 8 March 2020

09.03.2020
 அனைத்து வகை அரசு / நிதியுதவி / சுயநிதி / உயர்நிலை/ மேல்நிலை / மெட்ரிக் பள்ளி   தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்  கவனத்திற்கு
 நாளை (10.03.2020 ) திருப்பத்தூர் டோமினிக்சாவியோ மேல்நிலைப்பள்ளியில் பிற்பகல் 02.00 மணியளவில்  தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டமும் ,  மார்ச்/ஏப்ரல்  2020 ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறைக்கண்காணிப்பாளர் நியமனத்திற்கு (LOT SYSTEM)  குலுக்கல் முறையில் நியமனம் செய்தல் பணி  மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பயிற்சியும் நடைபெற உள்ளதால் சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   

Friday 6 March 2020

06.03.2020  அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேலூர் பிரிவின் மூலம் வேலூர் மாவட்டத்தில் சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் (World Beaters Talent Spotting Scheme)  6 வது, 7 வது மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கான கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் 100மீ, 200மீ, 400மீ. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மற்றும் குண்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் பழைய முறையிலேயே வேலூர் கல்வி மாவட்டத்தில் உள்ளடக்கிய பள்ளிகளுக்கு வேலூர் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் 11.03.2020 அன்று நேதாஜி விளையாட்டரங்கில் காலை 8.00 மணி முதல் நடத்தப்பட உள்ளது. இணைப்பில் உள்ள நிபந்தனைகளை பின்பற்றுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. ATTACHMENT

Thursday 5 March 2020

06.03.2020
 அனைத்து வகையான பத்தாம் வகுப்பு தேர்வு மைய தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான  1.CENTRE WISE NOMINAL ROLL 2. SEATING PLAN 3. CSD FORMS  ஆகியவற்றை  இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் 
ATTACHMENT 

06.03.2020
 அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றும் பெயர்பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது.இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநரின் அறிவுரையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .  ATTACHMENT. 
06.03.2020
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர்நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி / மெட்ரிக் தொடக்க / நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களின் கவனத்திற்கு 
நாளை (07.03.2020) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் செவ்வாய் கிழமை கால அட்டவணையினை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
05.03.2020  // தேர்வுகள் அவசரம்//
  அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 - பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் (INTERNAL MARKS) செய்முறைத் தேர்விற்கான ( PRACTICAL MARKS) மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்  வழங்குதல்  ATTACHMENT

Wednesday 4 March 2020

05.03.2020  // தேர்வுகள் அவசரம் // 
 அனைத்து  தேர்வு மைய தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு  இடைநிலைக்கல்வி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2020 முகப்புத்தாட்கள்  - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத்தாட்கள்  -  இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
04.03.2020 அனைத்து வகை தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு,

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர்.விக்ரம் ஏ.சராபாய் அவர்களின் நூற்றாண்டு நிகழ்வினை கொண்டாடும் விதத்தில் விண்வெளி சார்ந்த படைப்புகள் மற்றும் செயல்பாடுகள் உள்ளடக்கிய SPACE ON WHEELS என்ற நடமாடும் ஊர்தி ( MOBILE VAN ) மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் கண்காட்சியினை கண்டு பயன்பெறும் விதத்தில் திருப்பத்தூர் கல்வி மாவட்டம் முழுவதும் 06.03.2020 முதல் 28.03.2020 முடிய இணைப்பில் காணும் மையப் பள்ளிகளில் இவ்வூர்தி நிற்கும் என தெரிவிக்கப்பட்டது. இவ்வூர்தி மைய பள்ளிகளில் நிற்கும் நாட்களில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கண்காட்சியை கண்டு பயன் பெறும் வகையில் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT - 1, ATTACHMENT - 2, ATTACHMENT - 3.

04.03.2020
 அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு 
இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 10.03.2020 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
04.03.2020  // தேர்வுகள் அவசரம் //
 அனைத்து அரசு / அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுக்கு தங்கள் பள்ளியில் பணியாற்றிவரும் முதுகலை ஆசிரியர்களில் தேர்வு பணிக்கு செல்லாத  மற்றும் தேர்வு பணிக்கு  நியமனம் செய்யப்படாத முதுகலை மற்றும் தொழில்கல்வி ஆசிரியர்களின் பெயர்பட்டியலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் (04.03.2020) இன்றே ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

                                                                 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்,
                                                                                       திருப்பத்தூர்.
04.03.2020  நினைவூட்டல் - 01 // மிக மிக அவசரம் // தனிகவனம்//

அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின்  PREMATRIC  மற்றும்  POSTMATRIC  புதுப்பித்தல் விண்ணப்பங்களை 05.03.2020 மாலை 05.00 மணிக்குள்  சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT - 1, ATTACHMENT - 2


Tuesday 3 March 2020

03.03.2020

 கோவை மண்டல துறை தணிக்கை:  இணைப்பில் உள்ள உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, மார்ச்  - 2020 மாதம் நடைபெறுகின்ற பள்ளி தணிக்கையின்  போதே நிலுவையில் உள்ள தணிக்கைத்தடைகள் நிவர்த்தி செய்யப்பட உள்ளதால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி தணிக்கை தடை நிலுவைகளை  சம்பந்தப்பட்ட  தணிக்கை கண்காணிப்பாளர்களை தொடர்பு கொண்டு நீக்கம் செய்து கொள்ள தெரிவிக்கலாகிறது, ATTACHMENT
03.03.2020  // தேர்வுகள் அவசரம்//
அனைத்து  மேல்நிலை  தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 
 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு மையத்திற்கான ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமன ஆணை  இணைப்பில்  இணைக்கப்பட்டுள்ளது.  சார்ந்த பணியாளர்களை உடன் விடுவித்து தேர்வு மையத்தில் பணியேற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Monday 2 March 2020

03.03.2020     நினைவூட்டல் -1
அனைத்து அரசு  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2019-2020 ஆம் நிதியாண்டிற்கான பயணப்படி, சில்லரை செலவினம் , அஞ்சல் வில்லை நிதி ஒதுக்கீடு  பகிர்ந்தளிக்கப்பட்டு செலவினம் மேற்கொள்ள ஆணை வழங்கப்படுகிறது.  இச்செலவினம்  31.03.2020 க்குள்  மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT 
02.03.2020
 அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
  Smart card  மாணவர்களுக்கு பெற்று வழங்கியது சார்பான  இணைப்பில் உள்ள  3 படிவத்தினை பூர்த்தி செய்து  03.03.2020 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deottr@nic.in)  அனுப்பிவிட்டு அதன் நகலினை  நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMENT

Sunday 1 March 2020

02.03.2020  //தேர்வுகள் அவசரம்//
 அனைத்து  வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மேல்நிலை  முதலாமாண்டு / இரண்டாமாண்டுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் பட்டியலை (INTERNAL MARKS)  சீல் செய்யப்பட்ட கவரில்  03.03.2020 அன்று மாலைக்குள் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
02.03.2020   // தேர்வுகள் அவசரம்//
அனைத்து மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்களின் கவனத்திற்கு
 இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  HOT COPY  மற்றும் CD  யில் பதிவு செய்து  03.03.2020 அன்று மாலைக்குள்  மாவட்ட கல்வி அலுவலகத்தில்  தனி நபர் மூலம் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வரும் போது தங்கள் பள்ளியின் ஆசிரியர் வருகை பதிவேடு கொண்டுவரவும்  ATTACHMENT 
   
02.03.2020 அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மார்ச் - 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு முகப்புத் தாட்கள் (TOP SHEET)  03.03.2020 அன்று அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் காட்பாடியில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ATTACHMENT