Sunday 31 March 2019

01.04.2019- நினைவூட்டல் - 2 - 2018 -2019ஆம் கல்வியாண்டில் 6, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ/மாணவிகளுக்கு மூவகை சான்றுகள் பெற்று வழங்கப்பட்டதற்கான எண்ணிக்கை விவரங்களை ஏற்கனவே 27.03.2019 அன்றைய தினத்திற்குள் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டிருந்தது வேலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தொகுப்பறிகை சமர்ப்பிக்க அனுப்ப இயலாத சூழல் உள்ளது, எனவே இதன் முக்கியத்துவம் கருதி இந்நாள் வரையில் பதிவு செய்யாத பள்ளிகள் இன்று (01.04.2019) பிற்பகல்  02.00க்குள் இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
ONLINE ATTACHMENT  
31.03.2019 - பத்தாம் வகுப்பு மையமதிப்பீட்டு பணி மார்ச் 2019 - திருப்பத்தூர் கல்வி மாவட்டம் மற்றும் வாணியாம்பாடி கல்வி மாவட்ட இணைப்பில் உள்ள உருது மொழி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உருது முன்சி ஆசிரியர்களை விடைத்தாள் மதிப்பீட்டு மையம் திருப்பத்தூர், மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு CE's & SO's 01.04.2019 அன்று காலை 8.30 மணிக்கும் மற்றும் AE's 02.04.2019  அன்று காலை 08.00 மணிக்கும் வருகை புரியும் வகையில் பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment
வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ள 1. ஆணைக்கர் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர், 2. ஹபிபியா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி, ஆம்பூர் மற்றும் 3.  ரமீசா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி, பேராம்பட்டு ஆகிய பள்ளிகள் பணிபுரியும் அராபிக் மொழிப்பாட ஆசிரியர்களை மையமதிப்பீட்டு பணிக்கு CE's & SO's 01.04.2019 அன்று காலை 8.30 மணிக்கும் மற்றும் AE's 02.04.2019  அன்று காலை 08.00 மணிக்கும் வருகை புரியும் வகையில் பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Saturday 30 March 2019

31.03.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு விடைத்தாள் மைய மதிப்பீட்டு முகாமிற்கு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை விடுவித்து  அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளின் படி விடைத்தாள் மதிப்பீட்டு முகாமினை எட்டு தினங்களுக்குள் முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்துவகை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு வந்து ஒத்துழைப்பினை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு பள்ளிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகைபுரியாத பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை  பள்ளிகளிலிருந்து விடுவிக்காத தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் அனைத்தும் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் மற்றும் அரசுத்தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) அவர்களுக்கும் துறை சார்பான நடவடிக்கைக்கு மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.      

Friday 29 March 2019

29.03.2019 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணாக்கர்கள் மற்றூம் தனித்தேர்வர்களுக்கான பெயர் பட்டியல் (Nominal Roll) மற்றும் வருகை பதிவேட்டினை (Attendance) திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் அ3 பிரிவில் 01.04.2019 அன்று காலை 11.00 மணிக்குள் சமர்பிக்க பத்தாம் வகுப்பு  தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் (11.00 மணிக்கு பிறகு மைய மதிப்பீட்டு மையம் திருப்பத்தூர், மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமர்பிக்க தெரிவிக்கலாகிறது). 

Thursday 28 March 2019

29.03.2019 -அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

 தமிழ்நாடு அமைச்சுப்பணி   உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III–2019-2020 ஆண்டிற்கான காலிப்பணியிட  விவரங்களை இணைப்பில் படிவத்தினை பூர்த்தி செய்து 04.04.2019 க்குள் இவ்வலுவலகத்தில்  நேரில் அ1 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 

28.03.2019 –பத்தாம் வகுப்பு மைய மதிப்பீட்டுப்பணி 2019 (மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்) -  இணைப்பில் உள்ள திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை  பத்தாம் வகுப்பு மைய மதிப்பீடுப்பணியில் பணியாற்றும் பொருட்டு விடுவித்து அனுப்பி வைக்குமாறு அனைத்துவகை உயர்நிலை/மேல்நிலை/நிதியுதவிப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(குறிப்பு: இணைப்பில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் விடுபட்டிருப்பின் அவர்களும் 01.04.2019 காலை 08.30 மணிக்கு திருப்பத்தூர், மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாடம்: தமிழ், கணிதம், அறிவியல் & சமூக அறிவியல் – 2006க்கு முன் உள்ள மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் (CE & SO)  மற்றும் ஆங்கில பாடத்திற்கு 2008-க்கு முன் உள்ள மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் (CE & SO)).
             
எண்
ஆசிரியர்கள் விவரங்கள்                                                 
மைய மதிப்பீட்டு மையத்திற்கு வருகை புரிய வேண்டிய நேரம் மற்றும் நாள் 
1.
CE/SO (இணைப்பில் உள்ளவாறு ஆசிரியர்கள் பாடவாரியாக)
01.04.2019 அன்று காலை 08.30 மணிக்கு
2.
01.04.2019 காலை 08.30 மணிக்கு
3.
AE (இணைப்பில் உள்ளவாறு பாடவாரியாக)
02.04.2019 காலை 08.00 மணிக்கு

Wednesday 27 March 2019

28.03.2019 - அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாணவர் அடையாள அட்டை (Smart ID Card) வழங்குதல் சார்பாக கல்வி தகவல் மேலாண்மை மையத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்துள்ள விவரங்களை ஆவணங்களுடன் ஒப்பிட்டு   இணைப்பில் உள்ள  வழிமுறைகளை பின்பற்றி  இன்றே (28.03.2019) உடனடியாக http://emis.tnschools.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்து மென்நகல்  ஒப்புகையினை  வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஓர் நகலும் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஓர் நகலும்  05.04.2019ற்குள் வழங்கிடுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   ATTACHMENT
27.03.2019 - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மைய மதிப்பீட்டு பணி 2019 (இந்து மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர்)  - கீழ்கண்டவாறு திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தை சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களை மைய மதிப்பீட்டு பணியில் கலந்து கொள்ளவும் விடுவித்து அனுப்பிவைக்குமாறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
                
எண்
ஆசிரியர்கள் விவரங்கள்                                                 
மைய மதிப்பீட்டு மையத்திற்கு வருகை புரிய வேண்டி நேரம் மற்றும் நாள் 
1.
MVO & Tabulator (தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் மு.க.ஆசிரியர்கள் மட்டும்)
28.03.2019  அன்று காலை 10.00 மணிக்கு
2.
29.03.2019  அன்று மதியம் 01.00 மணிக்கு
3.
AE (இணைப்பில் உள்ளவாறு பாடவாரியாக)
30.03.2019 காலை 08.00 மணிக்கு
4
Data Entry Operator
30.03.2019 காலை 08.00 மணிக்கு

27.03.2019 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - மார்ச் 2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு - பள்ளி மாணாக்கர்களின் பெயர், முகப்பெழுத்து, பிறந்ததேதி, பயிற்று மொழி, மொழிப்பாடம் மற்றும் பள்ளியின் பெயர் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளாமல் விடுப்பட்டிருப்பின் சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் 01.04.2019-க்குள் மேற்கண்ட திருத்தங்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் தலைமையாசிரியர் கடிதம் மற்றும் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய பெயர் பட்டியலுடன் (NR Correction Page) நேரில் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க அனைத்து வகைப் பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இதுவே கடைசி வாய்பாகும். இதன் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும். 
27.03.2019 - அரசு/அரசு நகரவை/வனத்துறை/அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 
          பள்ளிக்கல்வி-விலையில்லா மடிக்கணினி-ERP ENTRY பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து அதன் விவரத்தினை இணைப்பில் உள்ளப்பள்ளிகளும் இத்துடன் இணைத்துள்ள படிவத்தினை பூர்த்தி செய்து வேலூர் முதன்மைக்கல்வி அலுவலத்தில் நேரில் இன்றே ஈ3  பிரிவில்  ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  FORM  - 
27.03.2019 - அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்த்திற்கு - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி  பள்ளிக்கல்வித்துறையின் அங்கீகாரம் பெற்ற அனைத்து மெட்ரிக்ப்பள்ளிகளில் 25% ஒதுக்கீடு, 2019-2020 ஆம் கல்வி ஆண்டு சேர்க்கைக்கு நுழைவு நிலை வகுப்பில் 25% மாணாக்கர்களின் எண்ணிக்கை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 28.03.2019 அன்று மாலை 05.00 மணிக்குள் திருப்பத்தூர், மாவட்டக்கல்வி அலுவலக அ4 & ஆ4 பிரிவில் தனிநபர் மூலமாக நேரில் சாமர்பிக்க   தெரிவிக்கலாகிறது. Attachment 

Tuesday 26 March 2019

27.03.2019 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - இடைநிலை பொதுத்தேர்வு உழைப்பூதியம் மற்றும் சில்லரை செலவினங்களை 27.03.2019 பிற்பகல் முதல் வேலூர், கல்புதூர், அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தனிநபர் மூலமாக ஆளரிச்சான்றிதழ் வழங்கி காசோலையினை பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    1. Attachment.                     2.Remuneration G.O 
27.03.2019  -  நினைவூட்டல் - 1 - 2018 /2019ஆம் கல்வியாண்டில் 6, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ/மாணவிகளுக்கு மூவகை சான்றுகள் பெற்று வழங்கப்பட்டதற்கான எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Monday 25 March 2019

26.03.2019 - VPRC - மூலம்  நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஜனவரி 19 முதல் பிப்ரவரி 19 வரை ஊதியம் வழங்கிய  விவரங்களை  அனுப்ப சார்ந்த பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க  நகல்   மற்றும்  DEBIT & CREDIT  பக்க நகல்  இவ்வலுவலகத்தில் 27.03.2019ம் தேதிக்குள் நேரில்  வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இப்பொருள் தொடர்பான  மாதாந்திர அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட உள்ளதால் கால தாமதத்தை தவிர்க்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை  வழங்ககேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT   

25.03.2019 -  
  
     வாழ்த்துகளும்நன்றியும்...

விழித்திருக்கும் கனமெல்லாம்...
மாணவர் நலமே உயிர்மூச்சாகக் கொண்டு
வாழும்...
தலைமை ஆசிரியப் பெருமக்கள்,  முதன்மைக் கண்காணிப்பாளர்கள் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள்நிலையான படையினர்வழித்தட   அலுவலர்கள்,
ஆசிரியர் பெருமக்கள், அறை கண்காணிப்பாளர்கள், .
அமைச்சுப் பணியாளர்கள்...
அனைவருக்கும் தமிழமிழ்தச்சொல்லெடுத்து
வணக்கங்கள்,,, 
நடைபெற்ற மார்ச் 2019 
மேனிலை முதலாமாண்டுஇரண்டாமாண்டு
பொதுத் தேர்வினை சிறப்பாக்கி  நம் மாவட்டத்தை
சிகரம் சேர்த்த நல் இதயங்களுக்கு...
திருப்பத்தூர்  மாவட்டக் கல்வி அலுவலர்சார்பில் வாழ்த்துகளும்நன்றியும் .


25.03.2019 அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

    இலவச பயண அடையாள அட்டைகள் (ஸ்மார்ட் கார்டுகள்)  2019-2020 அடுத்தகல்வி ஆண்டிற்க்கு இலவச பயண அடையாள அட்டை வழங்கும் வரை இந்த  வருடம் (2018-2019) வழங்கிய அடையாள அட்டையை வைத்து மாணவ/மாணவியர் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்க ஏதுவாக இருக்கும். மேலும் 2017-2018ல் வழங்கிய அடையாள அட்டையை வைத்து 2019-2020ஆம் கல்வியாண்டிற்கு இலவச பயண அனுமதி அட்டை பெறாத மாணவ மாணவிய இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள், எனவே பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச பயண அடையாள அட்டை  வேண்டுபவர்கள் விண்ணப்ப படிவங்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தருமபுரி மண்டலம் மற்றும் விழுப்புரம் மண்டல அலுவலகத்தில்   மாணாக்கர்களின் பெயர்பட்டியலை CD (குறுந்தகடு)  இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அடையாள அட்டை தேவையில்லை  எனில் பள்ளிகளிலிருந்து இன்மை அறிக்கை (Nil Report) சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
 25.03.2019   - அனைத்து வகை  அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு BIOMETRIC ATTENDANCE SYSTEM சார்பான  கூட்டம்

இடம் : - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
    நாள் :-     27/03/2019        நேரம் :- மாலை 4.00 மணிக்கு

   இக்கூட்டத்தில்   தலைமை ஆசிரியர் மற்றும் கணினி இயக்கத் தெரிந்த நபர் ஒருவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும்.  மேலும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து  கூட்டத்தில் சமர்ப்பிக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

  
        

Friday 22 March 2019

22.03.2019 - இடைநிலை கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2019  - தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
10ம் வகுப்பு இதர பாடங்களான உருது, தெலுங்கு, இந்தி, கன்னடம், பிரென்ச், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களை 14-03-2019 மற்றும் 15-03-2019 ஆகிய நாட்களில் மொழித் தேர்வு எழுதிய மாணவர்கள் 23-03-2019 அன்று நடைபெறவுள்ள விருப்ப மொழி பாடங்களுக்கான தேர்வினை எழுத அனுமதி இல்லை  எனவே சார்ந்த தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இது சார்பான விவரத்தினை மாணவர்களுக்கு தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday 20 March 2019

20.03.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து வகை அரசு /நிதியுதவி மேல்நிலை/உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - நாளை (21.03.2019) திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் மாலை 04.00 மணிக்கு நடைபெறவுள்ளது.   அனைத்துவகை அரசு/நிதியுதவி மேல்நிலை/உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மட்டும் தவறமால் கலந்துக்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது. மேலும் தேர்வு பணிக்கு, ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தேர்வுபணி ஆணை வழங்கப்படாத ஆசிரியர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவரும் இல்லை எனில் “இன்மை அறிக்கை” சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது.  
20.03.2019 - மார்ச் 2019 - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு - மார்ச் 2019 நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு  தேர்வு மையங்களில் பயன்படுத்தப்பட்ட இதர ஆவணங்கள் மாணவர்களின் பெயர் பட்டியல், மாணவர்களின் வருகைப் பதிவேடுகள்  உட்பட தேர்வுகள் முடிவுற்ற மறுநாள் வேலுர் கல்புதூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என அனைத்து மேல்நிலை  பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கலாகிறது.  

Tuesday 19 March 2019

20.03.2019 - தேர்வுகள் அவசரம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச் 2019 - தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான உழைப்பூதியம் மற்றும் சில்லரை செலவினம் ஆகியவற்றிற்கான முன்பணத்தினை இணைப்பில் உள்ளவாறு வேலூர்-7, அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளை 21.03.2019 (வியாழக்கிழமை) தனிநபர் மூலமாக ஆளாறிச்சான்றிதழ் வழங்கி காசோலையினை பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள்  கேட்டுக்  கொள்ளப்படுகிறார்கள். Attachment 
19.03.2019 - தமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் - சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III-லிருந்து உதவியாளராக பணிமாறுதல் - 15.03.2019 நாளிட்டவாறு பெயர் பட்டியல் தயார் செய்ய கருத்துருக்கள் - கோருதல் - சார்பு      ATTACHMENT
19.03.2019 – தேர்வுகள் அவசரம்நடைபெற்று கொண்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019தேர்வு பணிக்கு ஆணை வழங்கப்பட்ட இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலரிடம் நேரில் தேர்வு பணியிலிருந்து விடுவிப்பு ஆணை பெற்ற பிறகே சார்ந்த பள்ளியில் வருகை பதிவேட்டில் கையொப்பம் இட அனுமதிக்க வேண்டும் என்பதனை இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. ATTACHMENT   

Monday 18 March 2019

19.03.2019 -  அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

     உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்குதல் - 15.03.2019 நாளிட்டவாறு பெயர்பட்டியல் தயார் செய்ய கருத்துருக்கள் 22.03.2019 -க்குள் அனுப்பக்கோருதல். ATTACHMENT 
19.03.2019 - தேர்தல் - நாடாளுமன்ற தேர்தல் 2019 - அனைத்து வகை பள்ளிகள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - தேர்தல் நடத்தை விதிகள் சார்ந்த சுற்றறிக்கை  தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைகாகவும் அனுப்பப்படுகிறது.   ATTACHMENT 
19.03.2019 -  அனைத்து அரசு உயர்நிலை /மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

     தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வருகை பதிவேட்டினை  (2012 முதல் இந்நாள் வரை) திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ1 பிரிவு எழுத்தரிடம் நேரில் 22.03.2019-க்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
18.03.2019 - வரவு செலவு திட்டம் -2018-2019 - திருப்பத்தூர் கல்வி மாவட்டம் - அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2018-2019-ம் நிதியாண்டிற்கான பயணப் படி நிதி ஒதுக்கீடு இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு  பகிர்ந்தளிக்கப்படுகிறது.  Attachment 
18.03.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - தேர்வுபணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் இன்று மாலை (18.03.2019) 05.30 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவகலத்தில் மாவட்டக்கல்வி அலுவரை நேரில் சந்தித்து தேர்வுக்காண ஆணைகளை பெற்றுகொள்ள இணைப்பில் உள்ள ஆசிரியர்களை விடுவித்து இவ்வலுவகத்திற்கு அனுப்பி வகைக்குமாறு இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  Attachment 

Friday 15 March 2019

15.03.2019 - தேர்வுகள் அவசரம் - நடைப்பெற்று கொண்டுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச 2019 - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அகமதிப்பீட்டு பட்டியல்களை (Internal Mark Mark sheets) 18.03.2019 அன்று மாலை 04.00 மணிக்குள் தலைமையாசிரியர்/முதல்வர்கள் கீழ்கண்ட சான்றிதழுடன்  ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

                                                                                    சான்றிதழ்
மார்ச் 2019 - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான பெயர்பட்டியல்களில் இடம் பெற்றுள்ள எங்களது பள்ளி மாணவர்கள் அனைவரது அகமதிப்பீட்டு மதிப்பெண்களையும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவடைந்தது எனச் சான்றளிக்கிறேன்

இடம்:                                                                     தலைமையாசிரியர் கையொப்பம்
நாள்:                                                                                   பள்ளி முத்திரையுடன்

Thursday 14 March 2019

14.03.2019 - அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

         திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலரால்  தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டு பணியில் சேராத  ஆசிரியர்களின் பெயர் பட்டியல் மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலிருந்து தேர்வுப் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களின் பட்டியல் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும்  வழிதட அலுவலர் மூலமாகவும் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

Wednesday 13 March 2019

13.03.2019 - அரசுத் தேர்வுகள்  மார்ச் / ஏப்ரல் 2019 இடைநிலை பொதுத்  தேர்வு இணைப்பில் உள்ள   மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களால் சலுகைகள் வழங்குதல் சார்பாக  ATTACHMENT   மாணாக்கர்களின் பெயர்பட்டியல் 
13.03.2019 - 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு  மையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட முகப்புதாளில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் இணைப்பில் குறிப்பிட்டுள்ள  வழிமுறைகளை பின்பற்றி செயல்பட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 
13.03.2019 - 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2019 - தேர்வு பணிக்காக இணைப்பில் உள்ள எழுத்தர்/அலுவலக உதவியாளர்களை விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ATTACHMENT 
13.03.2019 - சென்னை -06  அரசு தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தியவாறு, நடைபெற்று வரும் மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை செய்முறைத் தேர்வுகளுக்கான உள்ளபடியான உழைப்பூதிய செலவினத் தொகை  ECS  மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது  எனவே இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து  15.03.2019-க்குள் addge.velre@gmail.com என்ற மின்னஞ்சல முகவரிக்கு இணைப்பில் கோரியவாறு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment     FORM

13.03.2019 இடைநிலைபொதுத்தேர்வு  - 

பத்தாம் வகுப்புமார்ச்  2019 தேர்வுமைய பணிக்கு முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள்/பெருக்குபவர்/துப்புரவாளர்/நீர்கொணர்பவர் மற்றும் இரவுக்காவலர்கள் ஆகியோர்களில் எவரேனும் ஒருவரை தேர்வு மையப்பணிக்கு அலுவலக உதவியாளராக அழைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது. மேலும் அலுவலகப்பணிக்கு பணியாளர்களை தேர்வு நாளன்று பள்ளிப்பணியிலிருந்து விடுவித்து அனுப்பும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

Tuesday 12 March 2019

12.03.2019 - தேர்வுகள் அவசரம் - தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

       10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 3.00 மணிக்குள் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களிடம் (Question Paper Sufficient) வினாத்தாட்கள்  போதுமானதாக உள்ளதா என சரிபார்த்து, அதன் விவரத்தினை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்  தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Monday 11 March 2019


11.03.2019 – தேர்வுகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019தேர்வுகளுக்கான கூட்டம் நாளை (12.03.2019) கீழ்கண்டவாறு திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. அதன்படி இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலை/உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்கள் தவறாமல் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் மட்டும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)

வ. எண்
கலந்து கொள்ள வேண்டிய ஆசிரியர்கள்/தலைமையாசிரியர்கள் விவரங்கள்
நேரம் மற்றும் நாள்
1
நிலையான படையினர்கள் (இணைப்பில் உள்ளவாறு)
பிற்பகல் 02.00 மணி முதல் 02.30 மணி வரை
2
அறைக்கண்காணிப்பாளர்கள் (கந்திலி மற்றும் ஆலங்காயம் ஒன்றியங்கள்)
கூட்ட நேரம் - பிற்பகல் 02.30 மணி முதல் 03.00 மணி வரை

(பதிவு 02.00 மணி முதல் 02.30 வரை)
3
அறைக்கண்காணிப்பாளர்கள் (திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றியங்கள்)
கூட்ட நேரம் - பிற்பகல் 03.00 மணி முதல் 03.30 மணி வரை
(பதிவு 02.30 மணி முதல் 03.00 வரை)
4
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் / வழித்தட அலுவலர்கள் (முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள்)
(ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டியல் படி)
கூட்ட நேரம் - பிற்பகல் 04.00 மணி முதல் 04.30 மணி வரை
(பதிவு 03.30 மணி முதல் 04.00 வரை)

11.03.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

       சுற்றுச் சூழலைப் பாதுகாத்திடும் பொருட்டும், பழைய புத்தகங்களை புதிதாக தேர்ச்சி  பெற்று வரும் மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் புத்தக வங்கிகள் (Book Bank) துவங்கி பழைய புத்தகங்களை மாணவர்களிடமிருந்து சேகரித்து புதிதாக வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வழங்கிட அனைத்து பள்ளிகளிலும் புத்தக வங்கி துவங்கிய விவரத்தினை உடனடியாக இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  



11.03.2019 - தேர்வுகள் அசவரம் - தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் தங்கள் மையத்தில் தேர்வெழுதும் அனைத்துத் தேர்வர்களுக்கும் தேர்வெழுதும் அனைத்துப் பாடங்களுக்கான முகப்புத்தாட்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதனை  உறுதி செய்து முகப்புத்தாட்கள் பெறாத/சேதமடைந்திருந்த / பார்கோடு விடுபட்ட  (Without Barcode) முகப்புத்தாட்கள் ஆகியவற்றின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு 04.03.2019க்குள் தெரிவித்திட அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் கூடுதலாக முகப்புத் தாட்கள் தேவை ஏற்படுவதாயின்  அதன் தகவலை இன்றே சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரிடம் எழுத்து மூலமாக விண்ணப்பிக்குமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு



Friday 8 March 2019

09.03.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - முதன்மைக்கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இன்று (09.03.2019) பத்தாம் வகுப்பு தேர்வுமையத்தில் பொறுப்பு (charge) எடுத்துகொள்ளுமாறு  முதன்மைக்கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    
08.03.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - தேர்வுமையத்தில் துறை அலுவலர்கள் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் நியமன ஆணையினை நாளை (09.03.2019) காலை 11.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள அறிவுருத்துமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 

Thursday 7 March 2019

07.03.2019 - தேர்வுகள் அவசரம்தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் கவனத்திற்கு நடைபெற்றுகொண்டுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் தேர்வு மையத்தில் பணியாற்றும் தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் நாளை (08.03.2019) மாலை 04.30 மணிக்கு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள். 
07.03.2019 - தேர்வுகள் அவசரம் - மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - இந்நாள் வரை தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் விவரங்களை ஒப்படைக்காத கீழ்கண்ட மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நாளை மாலை 03.00 மணிக்குள் இணைப்பில் உள்ள EBS படிவத்தில் பூர்த்தி செய்து முதல்வர் கையொப்பத்துடன் குறுந்தகட்டில் (CD) பதிவு செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 
1.TPTR0098 GOODWILL MHSS, TIRUPATTUR, 2.TPTR0101 SRI RAMAKRISHNA VID MHSS, JOLARPETTAI, 3. TPTR0124 DAYANANDA MHSS, KURUSILAPATTU, 4. TPTR0126 SWAMI VIVEKANANDA M HSS, THIMMANAMUTHUR, 5. TPTR0130 VEDHA M HSS, T VERAPALLI 6. TPTR0114 BRITE M S, VANIYAMBADI & 7. TPTR0128 SRI VIVEKANANDA MS, VELLAKUTTAI 
07.03.2019 - தேர்வுகள் அவசரம் - அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு பாடம் போதிக்கும் முதுகலை ஆசிரியர்கள் விவரங்கள் மற்றும் வருகை பதிவேட்டின் நகல்களுடன் நாளை (08.03.2019) மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் அ3 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   

Wednesday 6 March 2019


07.03.2019 – தேர்வுகள் அவசரம்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்களுக்கான கூட்டம் கீழ்கண்டவாறு இன்று (07.03.2019) திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment

1. வழித்தட அலுவலர்களுக்கான கூட்டம்  
                                        -  மாலை 03.00 மணி நாள்: 07.03.2019
2. முதன்மைக்கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்களுக்கான கூட்டம்                             -    மாலை 03.30 மணி நாள்: 07.03.2019

06.03.2019 - மிக அவசரம் - நிதி மற்றும் ஊதியம் சார்பான தகவல்கள் கோருதல் - அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - நிதி ஒதுக்கீடு  சார்பாக இணைப்பில் உள்ள தகவல்கள் அவசரமாக தேவைப்படுவதால்  இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து நாளை (07.03.2019) மதியம் 12.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் தனிநபர் மூலமாக ஒப்படைக்குமாறு அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவி பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் Attachment 
06.03.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெறவுள்ள மார்ச் 2019 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி மாணாக்கர்களின் தேர்வுகூட நுழைவுச்சீட்டினை (Hall Ticket) 07.03.2019 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது User ID  மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 மேலும், மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப் பட்டியலில் பள்ளி மாணவ/ மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின், பத்தாம் வகுப்பு தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களை அனுகி தேர்வு மையத்திற்கான பெயர்ப்பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
06.03.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுமைய தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான 1. தேர்வுமைய வாரியான (Center wise Nominal Roll) பெயர்பட்டியல்  2. Seating Plan மற்றும் 3. CSD Forms (Coverwise Script Details Forms) ஆகியவற்றை 06.03.2019 பிற்பகல் முதல் தேர்வுமையங்களாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் தங்கள் User ID & Password-ஐ பயன்படுத்தி www.dge.tn.giv.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு பத்தாம் வகுப்பு தேர்வுமைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


Monday 4 March 2019

05.03.2019 - தேர்வுகள்  அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - வினாத்தாள் கட்டுகாப்பாளர்களுக்கான கூட்டம் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களின் முன்னிலையில் இன்று (05.03.2019) மாலை 03.00 மணிக்கு நடைப்பெறுவதால் கீழ்கண்ட பள்ளித்தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
1. தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, பெருமாப்பட்டு.
2. தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கிழக்குபதனவாடி.
3.தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கொடுமாம்பள்ளி.
4. தலைமை ஆசிரியர், அரசு ஆதிந உயர்நிலைப்பள்ளி, ஜடையனூர்.
5.தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, மலைரெட்டியூர்.
6. தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கொத்தக்கோட்டை.