Monday 27 April 2020

27.04.2020
 அனைத்து   வகை நர்சரி மற்றும் மெட்ரிக்  / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின் முதல்வர்கள் / தாளாளர்களின் கவனத்திற்கு 
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி சென்ற கல்வி ஆண்டு மாணவர்களின் பெற்றோர்களால் செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ள கல்விக்கட்டணம் மற்றும் வரும் கல்வி ஆண்டிற்கான கல்விக்கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வNலிக்க நிர்பந்திப்பதாக புகார் பெறப்பட்டுள்ளதின் அடிப்படையில் தற்போதைய அசாதாரன Nல்நிலைவயில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்விக்கட்டணம் நிலுவை மற்றும் வரும் கல்வி ஆண்டிற்கான கல்விக்கட்டணங்கள் வNலிப்பது நிறுத்திவைக்க எற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தும் ஒருசில தனியார் பள்ளி நிர்வாகிகள் கல்விக்கட்டணம் செலுத்த பெற்றோர்களை நிர்பந்திப்பதாக புகார் மூலம் தெரியவருகிறது. எனவே திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசிடமிருந்து மறு’உத்திரவு வரும் வரை நிலுவை கல்வி கட்டணம் மற்றும் வரும் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணம் வNலிக்கக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது மேலும் அவ்வாறு எவரேனும் வNலிப்பது சார்பாக புகார் பெறப்படின் தங்கள்  பள்ளிக்கான அங்கீகாரத்தினை இரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. .மேலும் செயல்முறை கடிதம்  பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதலை இவ்வலுவலகத்திற்கு பணிந்தனுப்பிவைக்க தாளாளர்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

Friday 17 April 2020

17.04.2020 - அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கவனத்திற்கு - ஏப்ரல் 2020 மாத சம்பள பட்டியல் epayroll மற்றும் IFHRMS  சம்பளம் பட்டியலுக்கு இணையான சம்பள பட்டியலுக்கு மட்டுமே வில்லை எண் வழங்கப்படும். அதோடு மார்ச் மாத IFHRMS சம்பளம் பட்டியல் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதிக்குள் சமர்பிக்கபடுவதாக கடிதம் கொடுந்திருந்தும் நாளது தேதி வரை IFHRMS சம்பள பட்டியல் சமர்பிக்கபடவில்லை. எனவே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்திற்கு ஏற்ப மார்ச் மாத IFHRMS சம்பளம் பட்டியல் தயார் செய்து வில்லை எண்ணோடு சமர்பிக்கப்படும் ஏப்ரல் மாத சம்பளம் பட்டியலுக்கு மட்டுமே வில்லை எண் வழங்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். Attachment

இப்படிக்கு
சார்நிலைக் கருவூல அலுவலர்
திருப்பத்தூர்   

Wednesday 8 April 2020

09.04.2020     //மிக மிக அவசரம்//
அனைத்து அரசு / நிதியுதவி  பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி   தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு 
COVID 19 -  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நிவாரண நிதிக்காக தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்க விருப்பமுள்ளவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு  அரசாணை 41 - ஐ பின்பற்றி  இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி  செய்து 2020 ஏப்ரல் மாத ஊதியப் பட்டியல் தயார் செய்த பின்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
09.04.2020     //மிக மிக அவசரம்//
அனைத்து அரசு / நிதியுதவி  பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி   தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு 
COVID 19 -  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நிவாரன நிதிக்காக தங்களின் ஒரு நாள் ஊதியத்தை  வழங்க விருப்பமுள்ளவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு  அரசாணை 41 - ஐ பின்பற்றி  இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி  செய்து இன்று (  09.04.2020 ) மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலக  மின்னஞ்சல் முகவரிக்கும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக EDWISE VELLORE இணையதளத்தில் உள்ள படிவத்தினையும் (ONLINE SHEET) ல் பதிவிடவும்   ATTACHMENT G.O    ATTACHMENT