Tuesday 31 December 2019

31.12.2019   அனைத்து வகை  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  / முதல்வர்கள்,


 அனைவருக்கும்  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


இங்ஙனம்

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அலுவலக பணியாளர்கள்

ATTACHMENT
31.12.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.சி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு -  03.11.2019 அன்று நடைபெற்று முடிந்த தேசிய திறனாய்வுத்தேர்வுகள் - இத்தேர்வினை எழுதியுள்ள மாணாக்கர்களின் விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 06.01.2020 முதல் 10.01.2020 வரை பள்ளிகள் தங்களுடைய Use ID மற்றும் Password-ஐப் பயன்படுத்தி பெயர்/பாலினம்/பிறந்ததேதி/இனத்தில் திருத்தங்கள் இருப்பின் மேற்குறிப்பிட்ட நாட்களில் திருத்தங்களை சரிசெய்து கொள்ளுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
31.12.2019  அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை  ஆசிரியர்கள்  கவனத்திற்கு,

அறிவியல் தமிழ் மாத இதழ் வழங்குதல் தொடர்பாக இணைப்பில் உள்ள செயல்முறை கடிதத்தை பின்பற்றுமாறு அனைத்து அரசு /அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT

Monday 30 December 2019

31.12.2019  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்  கவனத்திற்கு,

அரசியலமைப்பு தினம் கொண்டாடுதல் - தேசிய அளவில் இணைய வழி கட்டுரை போட்டியில் பள்ளி மாணவர்களை  பங்கு பெற செய்ய அறிவுறுத்தும்படி அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ATTACHMENT
30.12.2019
 அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
ஆதிதிராவிடர்நலம் - ப்ரீமெட்ரிக் / போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் - 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயின்று இணைய வழியில் விண்ணப்பித்திருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் விரைந்து இணையவழியில் புதுப்பிக்கவும் , புதுப்பிக்கப்பட்ட மாணாக்கர்களின்  EMIS NUMBER  - ஐ பதிவேற்றம் செய்யவும். அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. ATTACHMENT ATTACHMENT ATTACHMENT 
30.12.21019
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை எண் 43- அறிவிப்புகள்  2019 - 2020,  அறிவிப்பு எண் 5 - மாணவர்களின் வருகை குறித்து பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி (SMS)  அனுப்புதல் பொருட்டு EMIS இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை உறுதி படுத்திக்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
30.12.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/ மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச்/ஏப்ரல் 2020, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியலை (Nominal Roll) ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வுகட்டணம் செலுத்துவதற்கும் மற்றும் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் 04.01.2020-ஆம் தேதி வரையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி திருத்தங்கள் இல்லாத பெயர்ப்பட்டியல் மற்றும் ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த இயலாத பள்ளிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி செயல்படுமாறு அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Friday 27 December 2019

27.12.2019
  அனைத்து  அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவுதலை கண்காணிக்கும் பொருட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 5 நகல்களில் 30.12.2019 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

 1. கணினி உபகரணங்கள் மற்றும் தளவாடச் சாமான்கள் உரியவாறு
      இருப்பு  பதிவேட்டில் பதிவுசெய்த விவரம் நகல்
2 . படிவம்  1 முதல் 11 வரை( Technical Specification Computers and accessories Formats)
3 . தலைமை ஆசிரியர் சான்று
4 . உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் புகைப்படம் 

ATTACHMENT   ATTACHMENT  ATTACHMENT 

Thursday 26 December 2019

27.12.2019
 அனைத்து அரசு /அரசு உதவிபெறும் நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத  பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி மூலம் வருகைப்பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System ) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 சென்னை 90, தேசிய தகவலியல் மைய கடிதத்தில் UDAI Certificate used to encrypt PID block in Authentication request is going to expire by 30th December 2019  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே சென்னை 6, சிந்தாதிரிப்பேட்டை, ஐ போக்கஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (Startek FM 220 Model )   மற்றும் அகமதாபாத், மந்த்ரா சாப்ட் டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களிடமிருந்து ( Iris Scanner MFS 100 Fingerprint Device ) கொள்முதல் செய்யப்பட்ட ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவிகள் மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் கருவிகள் மூலம் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருகை பதிவு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 
30.12.2019 அன்றுடன் மேற்கண்ட கருவிகளுக்கான UIDAI  நிறுவனத்தாரால் வழங்கப்பட்டுள்ள RD Service  காலாவதியாவதால் 31.12.2019 முதல் தொட்டுணர் கருவிகள் மூலம் வருகைப்பதிவு பதிவு  செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதால் 

30.12.2019 திங்கள் அன்று திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணியளவில் நடைபெறும் கூட்டத்திற்கு கணினி (Biometric Attendance System ) இயக்க தெரிந்த ஆசிரியர் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

27.12.2019 - நினைவூட்டல் -1 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 -   தலைமையாசிரியர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்திய விவரங்களை  வேலூர்அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உடன் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வுக் கட்டண விவரங்களை ஒப்படைக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளதுஇவ்வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment , Forms , Annexure-1 

Wednesday 25 December 2019

26.12.2019    நினைவூட்டு -1
அனைத்து அரசு /அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளி/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு பள்ளிக்கல்வி- தொடக்கப்பள்ளிகள்- சமூக நலத்துறை மற்றும் மதிய உணவு திட்டம் - SMS BASED MONITORING SYSTEM -  பள்ளி தலைமை ஆசிரியர்கள் தினசரி உணவு உண்ணும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரத்தை  155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி  அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ATTACHMEN T.

Monday 23 December 2019

23/12/2019
  அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 2019 -2020 ஆம் கல்வியாண்டு நடைபெற்ற அரையாண்டு தேர்வுகள் 23.12.2019 அன்று முடிவு பெறுகின்றது. அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறைக்கு பின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 03.01.2020 அன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT/

Sunday 22 December 2019

23.12.2019
 அனைத்து  அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 23.12.2019 பிற்பகல் 12.00 மணியளவில் காட்பாடி காந்தி நகர் அனைவருக்கும் கல்வி  இயக்க கூட்ட அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் அனைத்து   நிதியுதவி  உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் எனவும், கூட்டத்திற்கு வரும் போது தாங்கள் பள்ளியில் இறுதியாக பெற்ற அங்கீகாரஆணை நகலையும் நிரந்தர அங்கீகாரமாயின் நிரந்தரஅங்கீகார  ஆணை  நகலையும் கொண்டுவருமாறு தெரிவிக்கப்படுகிறது. 

Thursday 19 December 2019


20.12.2019   நினைவூட்டல்  - 1 அனைத்து  அரசு / நிதியுதவி பெறும்  உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி - இடைநிலைக் கல்வி - அரசு / நிதியுதவி பெறும் பள்ளிகள் - ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரம் கோருதல் - சார்பு. இணைப்பிலுள்ள இயக்குநரின் செயல்முறைகளிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இதுவரை வழங்காத பள்ளிகள் 20.12.2019 இன்று பிற்பகல் 1.00 மணிக்குள் மின்னஞ்சலில் (deottr@nic.in) அனுப்பிவிட்டு அதன் நகலினை  இன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் எவருமில்லை எனில் இன்மை அறிக்கை அதே படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு  தெரிவிக்கலாகிறதுATTACHMENT - 1 ATTACHMENT - 2

Wednesday 18 December 2019

19.12.2019  அனைத்து  அரசு / நிதியுதவி பெறும்  உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி - இடைநிலைக் கல்வி - அரசு / நிதியுதவி பெறும் பள்ளிகள் - ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரம் கோருதல் - சார்பு. இணைப்பிலுள்ள இயக்குநரின் செயல்முறைகளிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 19.12.2019 இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் மின்னஞ்சலில் (deottr@nic.in) அனுப்பிவிட்டு அதன் நகலினை  இன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் எவருமில்லை எனில் இன்மை அறிக்கை அதே படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு  தெரிவிக்கலாகிறது. ATTACHMENT - 1 ATTACHMENT - 2
18.12.2019
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
தங்கள் பள்ளியில் பழுதடைந்த  கட்டிடங்கள்  இருப்பின் அதன் விவரத்தினை பொதுப்பணி அலுவலகத்திற்கு தெரிவித்துவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகம் அனுப்ப தெரிவிக்கலாகிறது. ATTACHMENT  

Sunday 15 December 2019

16.12.2019
 அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு .
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு 2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்க இணைப்பில் உள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து  உடன் 20.12.2019 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (வி) லிட் , வேலூர் மண்டலம், ரங்காபுரம், வேலூரிலுள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

15.12.2019 - மிக மிக அவசரம் - வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அனைத்து வகை நிதியுதவி/நர்சரி மற்றும் பிரைமரி/மெட்ரிக்  பள்ளி  தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்  கவனத்திற்கு - 16.12.2019 அன்று காலை 11.30 மணிக்கு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் மேற்காண் திருப்பத்தூர் கல்வி மாவட்டதிற்கு உட்பட்ட வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அனைத்து வகை நிதியுதவி/நர்சரி மற்றும் பிரைமரி/மெட்ரிக்  பள்ளி  தலைமையாசிரியர்/முதல்வர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கலாகிறது. மேலும் இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இருநகல்கள் கூட்டத்தில் சமர்பிக்க தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  Forms

Saturday 14 December 2019

15.12.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு -  திருப்பத்தூர் மாவட்டம், மற்றும் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்காயம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும், கந்திலி ஒன்றியங்களில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் மதிப்புமிகு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 16.12.2019 மாலை 4.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெறுவதால் அனைத்து அரசு/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு:- கூட்டத்திற்கு வரும்பொழுது 2018-19ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு தேர்ச்சி அறிக்கை மற்றும் 2019-20ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு தேர்ச்சி அறிக்கையினையும் உடன் அவசியம் கொண்டுவருமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Friday 13 December 2019

13.12.2019
 அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - பள்ளித்தலைமை ஆசிரியர்கள் தினசரி உணவு உண்ணும் மாணாக்கர்களின் எண்ணிக்கை விவரத்தை குறுஞ்செய்தி மூலம் (SMS) அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 
13.12.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 -  பள்ளி மாணாக்கர்களின் பெயர்ப்பட்டியலை (Nominal Roll)  EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல், மாணாக்கர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. Attachment, 2. Diff Abled

13.12.2019
  அனைத்து  அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
  6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  பயிலும் மாணவர்களின் விவரங்கள் , பெற்றோரது விவரங்கள் மற்றும் பெற்றோரின் கைப்பேசி எண் (Mobile No. ) ஆகிய விவரங்களை ஏற்கனவே  EMIS  இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டதை மீள சரிபார்த்து உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

Thursday 12 December 2019

13.12.2019 நினைவூட்டல் -EMIS-கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு (PAN CARD) விவரங்கள் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்படும்படி அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு
13.12.2019   //மிக மிக அவசரம்//  அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம் - 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மற்றும் 9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்கள் கல்வி தரத்தை மேம்படுத்த மாணவியர்களை அதிக அளவில் சேர்த்து தொடர்ந்து கல்வி பயிலச் செய்யும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை கல்வி மாவட்டம் வாரியாக வழங்குதல் - 2019 - 20 ஆம் கல்வியாண்டிற்கு வெகுமதித் தொகை பெற தகுதியுள்ளோர் விபரம்  ONLINE SHEET - ல் இன்று மாலை 03.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT- 1 ATTACHMENT - 2    ONLINE SHEET
13.12.2019 SSA  சார்பான தணிக்கை கூட்டமர்வில்  இணைப்பிலுள்ள பள்ளிகள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட தேதிகளில் கலந்துக்கொண்டு தணிக்கை நிவர்த்திசெய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT

Wednesday 11 December 2019

12.12.2019    //மிக மிக அவசரம்//
அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

               2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல்கள்  6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மொழி வாரியாகவும், பாட வாரியகவும் EMIS இன் எண்ணிக்கைக்கு ஏற்ப உத்தேசப் பட்டியலினை 10.12.2019  மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரடியாக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது . ஆனால் , இது வரை கீழ்கண்ட பள்ளிகள் மட்டுமே ஒப்படைத்துள்ளனர், இது வரை ஒப்படைக்காத பள்ளிகள் இன்று மாலை 04.00 மணிக்குள்  2 நகல்களில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT

ஒப்படைத்துள்ள பள்ளிகள் 

1 . மீனாட்சி பெண்கள் திருப்பத்தூர்
2 . கொடுமாம்பள்ளி
3 . கொரட்டி
4 . டி.எம்.எஸ். திருப்பத்தூர்
5 . திம்மணாமுத்தூர்
6 . ராமகிருஷ்ணா திருப்பத்தூர்
7 . மல்லப்பள்ளி
8 . ஆண்டியப்பனூர்
9 . வள்ளிப்பட்டு
10 . திரியாலம்
11. மண்டலநாயனகுண்டா
12 . தாமலேரிமுத்தூர்
13. புதூர் நாடு
14 . அத்தனாவூர்
15 . பெரியகண்ணாலப்பட்டி
நகல்
வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு  தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது. 
11.12.2019 - தேர்வுகள் - அவசரம் - NMMS தேர்வுகள் 2019, தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு - 15.12.2019 (ஞாயிற்றுகிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி படிப்புதவித்தொகை திட்டத்தேர்வு 2019 (NMMS EXAM 2019) தேர்விற்கு தேர்வு மையங்களை தயார்படுத்தி கொள்ள முதன்மைக்கண்காணிப்பாளர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் அறைக்கண்காணிப்பாளர்களுக்கான கூட்டம் 13.12.2019 (வெள்ளிக்கிழமை) மாலை 03.00 மணிக்கு நடத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
மேலும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான ஆணை பெறப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 13.12.2019 வெள்ளிக்கிழமை மாலை 03.00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளித் தலையாசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். HALL SUPERVISOR DUTY LIST
11.12.2019  அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகளுக்கிணங்க தங்கள் பள்ளியின் முகப்பு பலகையில் வேலூர் மாவட்டம் என்பதை திருப்பத்தூர் மாவட்டம், என திருத்தம் செய்து அதன் அறிக்கையை இவ்வலுவலகத்திற்கு பணிந்தனுப்பி வைக்க அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
11.12.2019 - நினைவூட்டல் -1 - தேர்வுகள் - தனிகவனம் - அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (EBS ஒப்படைக்காத பள்ளிகள்) கவனத்திற்கு - EBS படிவம் ஒப்படைக்காத இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை 12.12.2019 காலை 11.00 மணிக்குள் (EBS) இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். 1. Attachment 2. EBS Forms  

Tuesday 10 December 2019

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு (PAN CARD) விவரங்கள் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Monday 9 December 2019

10.12.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் - பள்ளி மாணாக்கர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதல் கால அவகாசம் 12.12.2019 மற்றும் 13.12.2019 ஆகிய நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணவரது பாடத்தொகுப்பு, மொழிப்பாடம், ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், மாணவர் பெயர்கள் விடுபடாமல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
10.12.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித்தொகை திட்டத் தேர்வு (NMMS EXAM) 2019 - 01.12.2019 அன்று நடைபெறவிருந்த தொடர் கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வருகின்ற 15.12.2019 (ஞாயிற்றுகிழமை) அன்று நடைபெறும் என்பதனை தெரிவிக்கலாகிறது. 
மேலும் தேர்வெழுதவுள்ள மாணாக்கர்களுக்கு தேர்வு நடைபெறும் தேதியினை (15.12.2019) தெரிவிக்குமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 10.12.2019 முதல் தேர்வர்களின் தேர்வுகூட நுழைவுச்சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து மாணாக்கர்களுக்கு வழங்கிடுமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
10.12.2019 - தேர்வுகள் அவசரம் - தனிகவனம் - அனைத்து வகை சுயநிதி/மெட்ரிக் பள்ளிகள் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச்/ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - ஆரம்ப/தொடர் ஆங்கீகாரம் பெறப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் பொதுத்தேர்வெழுத அனுமதி வழங்குதல் - சார்பாக Attachment 
09.12.2019
 அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 தானியங்கி நாப்கின் எரியூட்டி இயந்திரம் சார்பாக இணைப்பில் காணும் படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆ2 பிரிவில் 10.12.2019 மாலை 05.00 மணிக்குள்  தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT 

Sunday 8 December 2019


09.12.2019  அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைய வழியில் ( e - Certificate)  மூவகைச் சான்று - 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 6, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு சாதிச் சான்று/ வருமானச்சான்று / இருப்பிடச் சான்று ஆகிய மூவகைச் சான்றுகள் பெற்று வழங்குதல் சார்பாக, இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 



09.12.2019  அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

               2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல்கள்  6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மொழி வாரியாகவும், பாட வாரியகவும் EMIS இன் எண்ணிக்கைக்கு ஏற்ப உத்தேசப் பட்டியலினை நாளை மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரடியாக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Friday 6 December 2019

06.12.2019   அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2018 - 2019 மற்றும் 2019 - 2020 ஆம் கல்வியாண்டுகளில் சுகாதாரம், தன் சுத்தம், சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 09.12.2019  (திங்கட்கிழமை) மாலை 03.00 மணிக்குள் அ5 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT

Thursday 5 December 2019

06.12.2019
 முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை 
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாலும், மேலும்,  அரையாண்டு தேர்வுகள் +1, +2 வகுப்புகளுக்கு 11.12.2019 முதலும் மற்றும் SSLC வகுப்பிற்கு 13.12.2019 முதலும் தொடங்கவுள்ளதால்   மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஏதுவாகவும் நாளை (07.12.2019) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் புதன் கிழமை அட்டவணையினை பின்பற்றி 07.12.2019 (நாளை ) பள்ளி செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
                                                                         மாவட்டக்கல்வி அலுவலர் 
                                                                                  திருப்பத்தூர் 

06.11.2019
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர்  கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / அரசுநிதியுதவி /மெட்ரிக்/ சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் உள்ள சாரண சாரணியர்களுக்கு 26.06.2019 அன்று நடைபெற்ற திருத்திய சோபன் முகாமில் கலந்துக் கொண்ட சாரண சாரணிய மாணவர்களுக்கு 2019- 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான இராஜ்ய புரஸ்கார் விருது விண்ணப்பங்களை பெற்று செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பம் மற்றும் திருத்திய சோபன் சான்றிதழ் கட்டணம் ரூ.20 மட்டும் , மேலும் நடப்பு கல்வியாண்டின் 2019 - 2020 க்கான சாரண இயக்க புதுப்பித்தல் , பதிவு கட்டணம் ரூ.550/ பெரும்பாலன பள்ளிகள் செலுத்தவில்லை பதிவு கட்டணம் செலுத்தாத பள்ளிகள் 10.12.2019 அன்று பதிவு கட்டணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
நாள் : 10.12.2019
இடம் :- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , திருப்பத்தூர் 
நேரம் :- 11.00 மணி
ATTACHMENT 

05.12.2019 
 அரசு உயர்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

01.01.2019 ãytu¥go muR ca®ãiy¥ gŸë¤ jiyik MÁça® gâæl¤Â‰F jF thŒªjt®fë‹ K‹Dçik¥ g£oaš btëæl¥g£L 13.11.2019 m‹W Ïizajs« têahf fyªjhŒéš fyªJbfh©L, gjé ca®Î / gâkhWjèš ca®ãiy¥gŸë jiyik MÁçauhf gâæš nr®ªjt®fŸ gâ¥gÂnt£oid mYtyf¤Âš x¥gil¡fhj jiyik MÁça®fŸ 06.12.2019 khiy 05.00 kâ¡FŸ x¥gil¡FkhW nf£L¡bfhŸs¥gL»wh®fŸ 



05.12.2019
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு  

01.01.2019 ãytu¥go muR ca®ãiy¥ gŸë¤ jiyik MÁça® gâæl¤Âற்கு  jF thŒªjt®fë‹ K‹Dçik¥ g£oaš btëæl¥g£L 13.11.2019 m‹W Ïizajs« têahf fyªjhŒéš fyªJbfh©L  , muR ca®ãiy¥gŸë¤ jiyik MÁça®  gjé ca®Î / gâ khWjèidj‰fhèfkhf cçik élš brŒjt®fŸ (g£ljhç MÁça®/KJfiy MÁça®) rh®ghd étu§fis Ïiz¥Ãš fhQ« got¤Âš ó®¤Â brŒJ 06.12.2019 khiy 05.00 kâ¡FŸ jåeg®  _y«  ஆ2 பிரிவில் x¥gil¡FkhW nf£L¡bfhŸs¥gL»wh®fŸ cçik élš brŒjt®fŸ vtU« Ïšiy våš got¤Âš Ï‹ik m¿¡ifæid më¡FkhW nf£L¡bfhŸs¥gL»wh®கள் 

got«
t. v©
K‹Dçik¥ g£oaè‹go v©
MÁça® / t£lhu¡ fšé mYty® bga® / gjé k‰W« gâòçÍ« gŸë / mYtyf«
cçik élš brŒ ÂU¥Ã‹ mj‹ étu«
F¿¥ò
1
2
3
4
5







F¿¥ò Ñœ¡f©l Mtz§fis Ïiz¤J mD¥g nt©L«.
cçikélš brŒÂU¥Ã‹ mj‹ Miz efš k‰W« gâ¥gÂnt£oš gÂÎ brŒa¥g£l g¡f efš