Thursday 24 February 2022

 TRUST EXAM

 25.02.2022 // //தேர்வுகள்// தனிகவனம் //

அனைத்து  வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

27.02.2022 அன்று நடைபெறும் ஊரகத்திறனாய்வு தேர்வு (RURAL TRUST) தேர்விற்கு நியமனம் செய்யப்பட்ட அறைக்கண்காணிப்பாளர்கள் உரிய தேர்வு மையத்தில் 26.02.2022 அன்று காலை 11.00 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கலாகிறது

     மேலும் இணைப்பில் தேர்விற்கான வருகை பதிவேடு, (AQUNTIANCE),தேர்விற்கான வழிகட்டுதல்கள், பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1 இணைப்பு 2  

 

25.02.2022

அனைத்து அரசு /அரசு நிதிஉதவி/ மெட்ரிக், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் /தாளாளர்கள் கவனத்திற்கு.

 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வருகின்ற 27.02.2022 ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இது குறித்த தகவலை ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் 27.02.2022 இன்று போலியோ சொட்டு மருந்து போட தவறியவர்களுக்கு 28.02.2022 மற்றும் 01.03.2022 ஆகிய இரு நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செவிலியர்கள் தங்கள் இல்லம் தேடி வந்து சொட்டு மருந்து வழங்கிட அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. மருத்துவ ஊழியர்கள் தங்கள் பள்ளியில் முகாம் அமைக்க கோரினால் கேட்கும் இடவசதி ,குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

25.05.2022

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் உயர்/ மேல்நிலைப் பள்ளி ,மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு தங்கள் பள்ளி முதன் முதலில் துவங்கியதற்கான ஆணை மற்றும் இறுதியாக பெறப்பட்டுள்ள தொடர் அங்கீகார ஆணை  ஆகிய இரண்டையும் முகப்பு கடிதத்துடன் 02.03.2022க்குள் ஆ5 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

24.02.2022 // தேர்வுகள் (NMMS)// //தனிகவனம்//

அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – 

05.03.2022(சனிக்கிழமை) அன்று நடைபெறவிருக்கும் தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டம் (NMMS) தேர்விற்கு வருகை புரியும் மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் மற்றும் பெயர்பட்டியலினை   www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 25.02.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே,  சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்துகொள்ள    கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மற்றும் தேர்வு மையம் வாரியாக (NR) பெயர்பட்டியலினை  பதிவிறக்கம் செய்துகொள்ள    கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு களில் பெயர்/புகைப்படம்/பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றொப்பம் பெற்று தேர்வு எழுத                     அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு


24.02.2022 //தேர்வுகள்// தனிகவனம் //

அனைத்து வகைப் அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு.

 6 முதல் 9ஆம் வகுப்பு வரை மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு முதல் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. தங்கள் பள்ளியின் EMIS-யின் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் 11ஆம் வகுப்பு பாட பிரிவு / பயிற்று மொழியில் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை இன்று 24.02.2022 க்குள்  சரிபார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். EMIS-யில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பாடவாரியான /பிரிவு வாரியான/பயிற்று மொழி வாரியான வினாத்தாட்கள் தயாரிக்கப்பட உள்ளதால் இதன் மீது தனிகவனம் செலுத்தி மாணவர்களின் எண்ணிக்கையினை சரிபார்த்துக்கொள்ள அனைத்து வகைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். பின்னர் வினாத்தாட்கள் பெறப்பட்ட பிறகு பாடம்/பயிற்று மொழியில் வேறுபாடு இருப்பின் சார்ந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களே முழுப்பொறுப்பேற்க நேரிடும் என அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

 




ஆய்வக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் காலிப்பணியிடம் கோருதல்

 24.02.2022 

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

 24.02.2022 நிலவரப்படி தங்கள் பள்ளியில் உள்ள ஆய்வக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் காலிப்பணியிட விவரம் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் 25.02.2022 காலை 11.00 மணிக்குள்  உள்ளீடு செய்யுமாறு  அனைத்து பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் அதன் 2  நகலினை  அ1 பிரிவில் ஒப்படைக்குமாறும் .  காலிப்பணியிடம் ஏதும் இல்லை எனில் இன்மை அறிக்கை  ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  ONLINE SHEET 

Wednesday 23 February 2022

பதவி உயர்வு அடிப்படை பணியிலிருந்து பதிவறை எழுத்தர்

 24.02.2022  

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு

தமிழ்நாடு அடிப்படைப்பணி - அலுவலக உதவியாளர், இரவுக்காவலர்,துப்புரவாளர், பெருக்குபவர் பதவியிலிருந்து பதிவு எழுத்தர் பதவி உயர்வுக்கு 01.12.2021 நிலவரப்படி தகுதி வாய்ந்தவர்களின் தேர்ந்தோர் பட்டியல் இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில்  திருத்தங்கள் மற்றும்  பெயர் விடுபட்டிருப்பின்  அவர்களின் விவரங்களை 25.02.2022 மாலை 05.00 மணிக்குள் அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

பதவி உயர்வு RC to LAB

 24.02.2022  

அனைத்து வகை அரசு  உயர்நிலை  / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

தமிழ்நாடு பொது சார்நிலைப்பணி  பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து ஆய்வக உதவியாளர் பதவி உயர்வு வழங்க தகுதியானவர்களின் முன்னுரிமை பட்டியல் இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.  மேலும் , விடுபட்டவர்கள்  எவரேனும் இருப்பின் அவர்களின் விவரங்களை  நாளை 25.02.2022 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு

ROAD SAFETY MATRIC SCHOOL AND PRIVATE SCHOOL ONLY

 23.02.2022   // மிக மிக அவசரம்//

 அனைத்து  மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு 

அனைத்து மெட்ரிக் மற்றும் தனியார் உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில்  "சாலை பாதுகாப்பு மன்றம் " ( ROAD SAFETY CLUB )   தங்கள் பள்ளிகளில் உள்ளதா என்ற விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் EXCEL FORMAT  ல் பூர்த்தி செய்து 23.02.2022 மாலை 5.00  மணிக்குள்     மாவட்ட கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@ gmail.com )  அனுப்பிவிட்டு அதன் நகலினை முதல்வர் கையொப்பத்துடன் 24.02.2022 காலை 10.00 மணிக்குள் தனிநபர் மூலம்  அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Tuesday 22 February 2022

OLD BOOK

 22.02.2022 // 

 அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி  அலுவலரின் செயல்முறைகள் ந.க-எண்.4239 / அ5/2022 நாள். .02.2022 

அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை  மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடமிருந்து பழைய பாடபுத்தகங்களை பெற்று பாதுகாப்பாக    வைக்கப்பட்டுள்ள விவரத்தினை   24.02.2022 காலை 11.00 மணிக்குள்   இவ்வலுவலகத்தில் ஆ3 பிரிவில்  நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Monday 21 February 2022

BANK DETAILS AND HM MEETING REG

  22.02.2022  // 

அனைத்து  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித்தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு

 தங்கள் பள்ளிகளில் பராமரித்து வரும் அனைத்து வங்கி கணக்குகளின் நிதி சார்பான விவரங்களை இத்துடன் இணைத்துள்ள படிவம் 1 மற்றும் படிவம் 2 இல்  பூர்த்தி செய்து 23.02.2022 அன்று  பிற்பகல் 2.00 மணியளவில்  டோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறும் தலைமை ஆசிரியர்களின் கூட்டத்தில்   சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கலாகிறது. மேலும், அனைத்து  வங்கி  கணக்கு புத்தகத்தினையும்   நாளது தேதி வரை UPDATE   ENTRY  செய்து அதன் அசல் மற்றும் நகலுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  படிவங்கள் 

MBC AND DNC SHOLARSHIP FORM

   21.02.2022 //  தனி கவனம்// மிக மிக அவசரம் //

அனைத்து வகை அரசு அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு

மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும்  சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 3 முதல் 6 வகுப்பு வரை பயிலும் கிராமப்புற பெண் குழுந்தைகளுக்கு 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்குதல் சார்பாக தேவைப்படும் கூடுதல் தொகை குறித்த விவரங்களை இணைப்பில்  உள்ள  ஆன் லைன்  படிவத்தில்  24.02.2022 மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு  செய்து மற்றும் முன்று நகல்களில் A 4  தாளில்  Excel Sheet  ல் பூர்த்தி செய்து இவ்வலுவலக  அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு 

    படிவத்தினை ஒப்படைக்கும்போது மாணவர்களின் வங்கி  சேமிப்பு  புத்தகத்தின் முதல்  பக்க  தாள் நகல் 3 ஒப்படைக்கவேண்டும் 

ON line sheet 

 21  .02.2021   // அவசரம் தனி கவனம்//      நினைவூட்டல் -1   

அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு

வங்கி கணக்கு விவரங்களில் குறிப்பிட்டுள்ள "AMOUNT AVILABLE FOR REMITTANCE   தொகையினை அரசுக்கணக்கில் செலுத்துதல்  

இணைக்கப்பட்டுள்ள படிவம் 2 இல்  திருப்பத்தூர் கல்வி மாவட்ட பள்ளிகளின் வரிசை எண்.21397 முதல் 21582 வரை உள்ள  பள்ளிகள் படிவம் 2 இல் "AMOUNT AVILABLE FOR REMITTANCE  என்ற கலத்தில் உள்ள தொகையினை இணைப்பில் உள்ள அரசு கணக்கு தலைப்பில் செலுத்தி செலுத்து சீட்டின் விவரங்களை படிவத்தில் உள்ள P  and Q  என்ற கலத்தில் பூர்த்தி செய்து, மேலும் படிவம் -2 மற்றும் செலுத்து சீட்டினை SCAN  செய்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் dsefc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு     அனுப்பிவிட்டு அதன்  நகலினை  இவ்வலுவலக deotpt2015 @ gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் இரண்டு நகலினை   ஆ1 பிரிவுல்  தனி நபர் மூலம் ஒப்படைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது

  பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் இன்றைய  செயல்முறை.

கீழ்கண்ட செயல்முறைகளின் படி காலதமதம் இன்றி  உடனடி நடவடிக்கை மேற்கொள்ள  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது

Sir / Madam,

All DDOs ( HMs) are instructed to remit the amount which have been shown in the "To be Remitted" 
column already given to government in the Government Head of Account on or before 22-02-2022 without fail. 
And the completion report should be sent to "dsefc@nic.in" mail before 5:00 PM on    22-02-2022.

This may be treated as "Very Urgent "


Thanks & Regards,
Financial Controller,
Commissionerate of School Education,
DPI Campus, Chennai - 6.

இணைப்பு1 இணைப்பு2 . 

 


Friday 18 February 2022

தேர்வுகள்

 

18.02.2022    //தேர்வுகள் தனி கவனம் //

அனைத்து  வகை பள்ளித்தலைமையாசிர்களின் கவனத்திற்கு 

    2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் தவிர்த்து தேர்வு கட்டண தொகையை பெற்று 5.1.2022 ஆண்டு முதல் 31.1.2022 வரையிலான நாட்களுக்குள் தேர்வு கட்டணத் தொகை மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான TML கட்டணத் தொகையையும் ஆன்லைன் வழியாக செலுத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

     இந்நிலையில் தேர்வு கட்டணம் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கு கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக செலுத்த இயலவில்லை என சில பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் அவ்வாறு ஆன்லைன் வாயிலாக பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதுவதற்கான தேர்வு கட்டணம் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான TML  கட்டணத்தை செலுத்த இயலாத பள்ளிகள் DIRECTOR OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI-06"என்ற பெயரில் தனித்தனி (SSLC/+1/+2/TML) வங்கி வரைவோலையாக (DEMAND DRAFT) எடுத்து அவற்றுடன் பள்ளி எண், பள்ளியின் பெயர், வகுப்பு, மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களுடன் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர்,கல்புதூர் , காட்பாடி வட்டம், வேலூர் மாவட்ட அலுவலகத்திற்கு 25.02.2022-க்குள் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 


Thursday 17 February 2022

 

17.02.2022  //தேர்வுகள் அவசரம்//   // தனிகவனம்//

அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

 

 2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்புதேர்வு மையங்களுக்கான இணைப்பு பள்ளிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.02.2022  மதியம்    2.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அரசுத்தேர்வுகள் இயக்கத்திலிருந்து பெறப்பட்டுள்ள தேர்வுமைய இணைப்பின்படி பள்ளிகள் விவரங்களை சரிபார்த்து, இணைப்பு2 –ல் உள்ள தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள் அ3 பிரிவில் நேரில் கையொப்பம் செய்ய அனைத்து வகை பொதுத்தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள்/கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 1    இணைப்பு2

17.02.2022 //தேர்வுகள்//தனிகவனம்

 அனைத்து வகை ஊரகப் பகுதி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு .

27.02.2022 அன்று நடைபெறவுள்ள ஊரகத்திறனாய்வுத் தேர்விற்கு 21.02.2022 பிற்பகல் முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை தங்களது பள்ளிகளுக்கான User ID & Password-யினை கொண்டு பதிவிறக்கம் செய்து தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழங்கிட ஏற்பாடுகளை செய்திடுமாறு அனைத்து வகை ஊரகப்பகுதி உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.