Friday, 18 February 2022

தேர்வுகள்

 

18.02.2022    //தேர்வுகள் தனி கவனம் //

அனைத்து  வகை பள்ளித்தலைமையாசிர்களின் கவனத்திற்கு 

    2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் தவிர்த்து தேர்வு கட்டண தொகையை பெற்று 5.1.2022 ஆண்டு முதல் 31.1.2022 வரையிலான நாட்களுக்குள் தேர்வு கட்டணத் தொகை மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான TML கட்டணத் தொகையையும் ஆன்லைன் வழியாக செலுத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

     இந்நிலையில் தேர்வு கட்டணம் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கு கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக செலுத்த இயலவில்லை என சில பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் அவ்வாறு ஆன்லைன் வாயிலாக பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதுவதற்கான தேர்வு கட்டணம் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான TML  கட்டணத்தை செலுத்த இயலாத பள்ளிகள் DIRECTOR OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI-06"என்ற பெயரில் தனித்தனி (SSLC/+1/+2/TML) வங்கி வரைவோலையாக (DEMAND DRAFT) எடுத்து அவற்றுடன் பள்ளி எண், பள்ளியின் பெயர், வகுப்பு, மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களுடன் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர்,கல்புதூர் , காட்பாடி வட்டம், வேலூர் மாவட்ட அலுவலகத்திற்கு 25.02.2022-க்குள் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு