08.04.2022
அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
நடைபெறவுள்ள மே 2022 இடைநிலைக்கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வுக்கான முகப்புத் தாட்களை 06.04.2022 முதல் 09.04.2022 வரையிலான நாட்களில் தேர்வு மைய தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி முதன்மை விடைத்தாளுடன் முகப்புத்தாட்களை இணைத்து தைக்கும் பணியினை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.
எனவே, தேர்வு மைய தலைமையாசிரியர்கள்
தங்கள் மையத்தில் தேர்வு எழுதும் அனைத்து தேர்வுகளுக்கும் தேர்வு எழுதும் அனைத்து பாடங்களுக்கான முகப்புத் தாட்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதை தங்கள் தேர்வு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து 06.04.2022 அன்று முதல் பதிவிறக்கம் செய்த பெயர் பட்டியலை பெற்று முகப்புத்தாட்களில் அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளனவா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
முகப்புத்தாட்கள் கிடைக்கப்பெறாத /சேதமடைந்த (Barcode-Reg No. Overlapped,barcode
smudged) முதன்மை மொழி பாடம் மாற்றம், பயிற்று மொழி மாற்றம் கொண்ட தேர்வர்களுக்கு புதிய முகப்புத் தாட்களை தேர்வு மையத்திற்கு என வழங்கப்பட்டுள்ள
userid/password கொண்டு இணையதளம் மூலம் 13.04.2022 அன்று முதல் அந்தந்த தேர்வு மையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
பெயர் பட்டியலில் சரியான பதிவுகள் இருந்து, தேர்வு மையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட முகப்புத் தாட்களில் கீழ் குறிப்பிட்டுள்ள திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் பின்வரும் வழிமுறைகளின் படி செயல்பட சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமையாசிரியர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. தேவரின் பெயர் (candidates' Name)
2. புகைப்படம் மாறி இருத்தல்.
பிற்சேர்க்கை
வ.எண் |
முகப்புத்தாளில் (Top Sheet) உள்ள குறை |
நிவர்த்தி செய்தல் |
1 |
முப்புத்தாளில் (Top Sheet) பெயர் தவறாக இருப்பின் |
பெயர் சிவப்பு நிற மையினால் திருத்தம் செய்து Attest செய்தல் வேண்டும் |
2 |
மாணவர்களின் புகைப்படம் மாறியிருந்தால் |
மாணவரின் சரியான புகைப்படத்தை பெற்று ஒட்டி Attest செய்தல்
வேண்டும் |