Tuesday, 31 May 2022

 31.05.2022 

அனைத்து வகை அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் கண்டுள்ள ஆசிரியரல்லாதோர் விவரம் சார்ந்த படிவத்தை பூர்த்தி செய்து 06.06.2022  அன்று மாலை 04.00 மணிக்குள் இரு நகல்களில்  தனிநபர் மூலம் இவ்வலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 31.05.2022       // தனிகவனம் // தேர்வுகள்//

அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் முகாம் திருப்பத்தூர் மேரிஇமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் 01.06.2022 காலை 9.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. அப்பணியிணை மேற்கொள்ளும்பொருட்டு கீழ்கண்ட பணியாளர்களை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிலிருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


1)திரு.ஜெ.வள்ளிமணாளன், இருக்கை கண்காணிப்பாளர் மாவட்டக் கல்வி அலுவலகம், திருப்பத்தூர். 

2)திரு.வெ.கிரிகண்ணன், இளநிலை உதவியாளர், அ.உ.நி.பள்ளி, மதனாஞ்சேரி.

3)திரு.சௌகத்அலி, ஆய்வக உதவியாளர், அ.மே.நி.பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி.

4) திரு.சரவணன், ஆய்வக உதவியாளர், அ.உ.நி.பள்ளி, ஆதியூர். 

Sunday, 29 May 2022

 30.05.2022       // தனிகவனம் // தேர்வுகள்//

அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் முகாம் திருப்பத்தூர் மேரிஇமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் 01.06.2022 காலை 9.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. அப்பணியிணை மேற்கொள்ளும்பொருட்டு கீழ்கண்ட பணியாளர்களை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிலிருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 1- SCRIPT SECTION - I

    1. திரு.மாதையன், இளநிலை உதவியாளர், அ.மே.நி.பள்ளி, குனிச்சி

    2. திரு.சந்தானம், இளநிலை உதவியாளர் அ.பெ.மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை.

    3. திரு.பாலாஜிராவ், ஆய்வக உதவியாளர்  அ.பெ.உ.நி.பள்ளி, மிட்டூர்.

2- SCRIPT SECTION - II

     1. திரு.மணிகண்டன், இளநிலை உதவியாளர், அ.மே.நி.பள்ளி, வள்ளிப்பட்டு.

    2. திரு.சமரன், ஆய்வக  உதவியாளர் அ.உ.நி.பள்ளி, சின்னகம்மியம்பட்டு     

    3. திரு.இராஜேந்திரன், ஆய்வக உதவியாளர்  அ.உ.நி.பள்ளி, புலியூர்.

3. ACCOUNT SECTION 

    1. திரு.சரவணன், உதவியாளர், மாவட்டக் கல்வி அலுவலகம், திருப்பத்தூர். 

    2.திரு.பிரபாகரன், உதவியாளர், மாவட்டக் கல்வி அலுவலகம், திருப்பத்தூர்.

    3.திரு.சசிகுமார், இளநிலை உதவியாளர், அ.மே.நி.பள்ளி, தாசிரியப்பனூர்.

    4. திரு.சதீஷ்குமார், ஆய்வக உதவியாளர், அ.உ.நி.பள்ளி, திரியாலம்.

    5. திரு.அருண், ஆய்வக உதவியாளர், அ.ஆ.மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

 4. OFFICE WORK

    1. திரு.இரத்தினம், பதிவறை எழுத்தர், அ.மே.நி.பள்ளி, பொன்னேரி.

    2. திரு.சரவணன், பதிவறை எழுத்தர், அ.ஆ.மே.நி.பள்ளி திருப்பத்தூர்.

    3. திரு.அசோக் குமார், பதிவறை எழுத்தர், அ.பெ.மே.நி.பள்ளி, மடவாளம்.

    4. திரு.அன்பு, அலுவலக உதவியாளர், அ.மே.நி.பள்ளி, குனிச்சி.

    5. திரு.கோபி, இரவுக் காவலர், அ.ஆ.மே.நி.பள்ளி புதுப்பேட்டை.

    6.  திரு.வினோத் இரவுக்காவலர், அ.உ.நி.பள்ளி, சந்திரபுரம்.

30.05.2022 

// அனைத்து வகை அரசு / நகராட்சி / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு. 

பொதுத்தேர்வுகள் - தேர்ச்சி அறிக்கை - அரசு / நகராட்சி / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி 06 ஆம் வகுப்பு முதல் 09 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் மே 2022 பொதுத்தேர்வு தேர்ச்சி விவரம் சரிபார்க்கும் பணி (30.05.2022 மற்றும் 31.05.2022) அன்று திருப்பத்தூர் தோமினிக் சேவியோ மேல்நிலைப்பள்ளியில் பிற்பகல் 02.00 மணியளவில் நடைபெறவுள்ளது. தேர்ச்சி பதிவேடு, வினாத்தாள் கட்டணம் செலுத்திய இரசீது, மேல்நிலைப்பள்ளிகள் செய்முறைப்பயிற்சி கட்டணம் செலுத்திய இரசீது ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்ச்சி சரிபார்க்கும் பணிக்காக கீழ்காணும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறது.

TIRUPATTUR BLOCK

1.MALARKODI C, HM, GOVT HR SEC SCHOOL, MALLAPALLI. 6380038379

2. THENRAL L,HM GOVT HS THIMMANAMATHUR 9442546496

KANDILI BLOCK

1. M SWAMINATHAN, HM, GOVT GIRLS HR SEC SCHOOL, GAJALNAYAKANPATTI. 9385202206

2. JAYAKANTHAM S,HM GHS ELVAMPATTI,9486639437

JOLERPETTAI BLOCK

1. CELENIA C, HM, GOVT GIRLS HR SEC SCHOOL, PUDUPETTAI. 9443507924

2.SURIYA SELVI D ,HM GHS ACHAMANGALAM 9865825953

ALANGAYAM BLOCK

1. K KRISHNAMOORTHY, HM, GOVT BOY HR SEC SCHOOL, PUDUPETTAI. 

9486881512

2.DEVAN E,HM GHS PERIYAKURUMBATHERU 9442804243.

                                                                                                                              

Sunday, 22 May 2022

23.05.2022

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் பொதுத் தகவல் வழங்கும்                            அலுவலர்  திருப்பத்தூர்  ந.க.எண். 1268/அ2/2022    நாள்.  23.05.2022


 அனைத்து வகை அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 

இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் கீழ்கண்டுள்ள முகவரிக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை 25.05.2022 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) அனுப்புமாறு பள்ளி (பொதுத் தகவல் அலுவலர்)   தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   மேலும் இதில் காலதாமதம் ஏற்படுமாயின் பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க வேண்டும். என தெரிவிக்கலாகிறது. இணைப்பு 

 தகவல் அனுப்ப வேண்டிய முகவரி

திரு.செந்தில் ஆறுமுகம் மாநில செயலாளர், மக்கள் நீதிமய்யம் எண்.4 எல்டாம்ஸ் ரோடு ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.

 

Friday, 20 May 2022

 20.05.2022

அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்டம் - கல்வி உதவித்தொகை  2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாதிய கிருத்துவ மாணவர்களுக்கு SC/ST/SCC  - Pre metric  மற்றும் Post metric  கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை  சம்பந்தப்பட்ட பள்ளிகள்  23.05.2022 தேதிக்குள்  Resubmission Pending approval செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். ணைப்பு

Wednesday, 18 May 2022

 19.05.2022

அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

2015 - 2016 ஆம் ஆண்டு பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களில் 13628 வரை பணிவரன்முறை செய்யப்பட்ட தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவியிலிருந்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த தலைமை ஆசிரியர்கள்  கருத்துருக்களை 3 நகல்களில் இவ்வலுவலக ஆ2 பிரிவில் 20.05.2022 பிற்பகல் 12.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகுதி வாய்ந்தவர் இல்லை எனில் தவறாது இன்மை  அறிக்கை ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு - 1   இணைப்பு - 2

 18.05.2022                                    

                        மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் பொதுத் தகவல் வழங்கும்                                             அலுவலர்  திருப்பத்தூர்

                                            ..எண். 941 /ஆ5/2022       நாள்.  18.05.2022


அனைத்து வகை மெட்ரிக் / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு - இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை 20.05.2022 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள் / செயளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு, படிவம் 

Monday, 16 May 2022

 16.05.2022            // மிக மிக அவசரம் //தனிகவனம் //

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட  அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணப்பொருட்கள் பள்ளி வாரியாக விநியோகம் செய்வதன்பொருட்டு இணைப்பில் உள்ள ONLINE SHEET  இல் கோரப்பட்ட  விவரங்களை எவ்வித காலதாமதத்திற்கு இடமின்றி 13.05.2022 மாலை 05.00 மணிக்குள் பதிவிடுமாறு கோரப்பட்டது. ஆனால் கீழ்கண்ட பள்ளிகள் இதுவரை மேற்கண்ட விவரங்கள் பதிவிடவில்லை  என தெரிவிக்கலாகிறது. எனவே விரைந்து நாளை காலை 10.00 மணிக்குள் பதிவிடுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ONLINE SHEET 

பள்ளிகள் விவரம்

1.அ.மே.நி.பள்ளி, வக்கணம்பட்டி

2.அ.பெ.மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை.

3. அ.மே.நி.பள்ளி, மலைரெட்டியூர்

4. அ.ஆ.மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை

5. அ.பெ.மே.நி.பள்ளி, மடவாளம்,

6. அ.மே.நி.பள்ளி, பூங்குளம்,

7. அ.ஆ.மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

8. அ.மே.நி.பள்ளி, கசிநாயக்கன்பட்டி

9. அ.மே.நி.பள்ளி, நத்தம்,

10. அ.மே.நி.பள்ளி, மட்றப்பள்ளி,

11. தோமினிக் சாவியொ மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

12. உபைபாஸ் பெ.மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

13. அ.உ.நி.பள்ளி, அண்ணான்டப்பட்டி

14. அ.உ.நி.பள்ளி, அசோக்நகர்,

15. அ.ஆ.தி.உ.நி.பள்ளி, ஜடையனூர்.

16. அ.மே.நி.பள்ளி, சுந்தரம்பள்ளி,

Friday, 13 May 2022

 13.05.2022      // தேர்வுகள் அவசரம் //

அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்கள் / பத்தாம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு - மே  - 2022 பணியில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் நடுநிலைப்பள்ளிப் பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு,

நடைபெற்றுக்கொண்டிருக்கும்   பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே - 2022 தேர்வுப் பணியில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் நடுநிலைப்பள்ளிப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு முடியும் வரை தேர்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

     //ஓம்//  13.05.2022

திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர்,

 

13.05.2022

                                         மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்

                                            ..எண்.997/அ1/2022    நாள்.  13.05.2022

 

 அனைத்து வகை அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 

இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் கீழ்கண்டுள்ள முகவரிக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை 16.05.2022 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) அனுப்புமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு

 தகவல் அனுப்ப வேண்டிய முகவரி

திரு.ஜெ.வி.மதன்ராஜ் த/பெ ஜான் செல்வராஜ்213/2, குறிஞ்சி நகர் பெ.பொன்னேரி, பெண்ணாடம் RSதிட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606 111.

 

13.05.2022

                                         மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்

                                            ..எண்.996/அ1/2022    நாள்.  13.05.2022


அனைத்து வகை அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 

இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் கீழ்கண்டுள்ள முகவரிக்கு அனுப்பி விட்டு அதன் நகலினை 16.05.2022 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) அனுப்புமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

தகவல் அனுப்ப வேண்டிய முகவரி

M.V.பாஸ்கர் B.Sc., B.L.,
No: 05,  மாதா கோவில் தெரு,
காந்தி நகர்,
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம்.

Thursday, 12 May 2022

 12.05.2022         // மிக மிக அவசரம் //தனிகவனம் //

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட  அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணப்பொருட்கள் பள்ளி வாரியாக விநியோகம் செய்வதன்பொருட்டு இணைப்பில் உள்ள ONLINE SHEET  இல் கோரப்பட்ட  விவரங்களை எவ்வித காலதாமதத்திற்கு இடமின்றி  நாளை  13.05.2022 மாலை 05.00 மணிக்குள் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   ONLINE SHEET     

Tuesday, 10 May 2022

 

10.05.2022          // மிக மிக அவசரம் //தனி கவனம்//NMMSS//

மத்திய அரசின் உதவித் தொகை திட்டம்  - NMMSS  (National Means-cum-Merit Scholarship Scheme) உதவித்தொகை - 2015 - 2016, 2016 - 2017, 2017 - 2018 ஆகிய  ஆண்டுகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்ற NMMS உதவித் தொகை  பெறுவதற்குத் தகுதிபெற்ற மாணவ / மாணவியர்களில்,     இணைப்பில் உள்ள பள்ளிகளில்பயிலும் மாணவர்களுக்கு மட்டும் சரியான வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்த்து  11.05.2022 அன்று முற்பகல் 11.00 மணிக்குள் இவ்வலுவலக  மின்னஞ்சல் முகவரிக்கு  (deotpt2015@gmail.comஅனுப்பிவிட்டு அதன் 2 நகலை  இவ்வலுவலக பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த  அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு - 1  இணைப்பு - 2


1. இராமகிருஷ்ணா மே.நி.ப.திருப்பத்தூர்.

2. அ.மே.நி.பள்ளி, பேராம்ப்பட்டு

3. ஸ்ரீமீனாட்சி மகளிர் மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

4. அ.ம.மே.நி.பள்ளி, புதுப்பேட்டை.

5. அ.மே.நி.பள்ளி, கேத்தாண்டப்பட்டி

6. அ.மே.நி.பள்ளி, வெலக்கல்நத்தம்.

7. மேரிஇமாக்குலேட் மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

8. தோமினிக் சாவியோ மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

9. அ.ஆ.மே.நி.பள்ளி, புதுப்பேட்டை.

10. TMS  மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.

11. அ.ஆ.மே.நி.பள்ளி, மடவாளம்,

12. ஆ.பெ.மே.நி.பள்ளி, மடவாளம்,

13. அ.மே.நி.பள்ளி, மல்லப்பள்ளி

14. அ.மே.நி.பள்ளி, கசிநாயக்கன்பட்டி

15. அ.மே.நி.பள்ளி, தாமலேரிமுத்தூர்.

16.உபைபாஸ் பெ.உ.நி.பள்ளி, திருப்பத்தூர்.

17. அ.உ.நி.பள்ளி, கோணப்பட்டு.

18. அ.ஆ.மே.நி.பள்ளி, மிட்டூர்.

19. அ.ம.உ.நி.பள்ளி, மிட்டூர்.

20. அ.ம.மே.நி.பள்ளி, ஜோலார்பேட்டை.

21. அ.உ.நி.பள்ளி, என்.எம்.கோயில்.

22. அரசு பூங்கா உ.நி.பள்ளி, திருப்பத்தூர்.

23. அ.மே.நி.பள்ளி, குனிச்சி. 

Monday, 9 May 2022

தேர்வுகள்- SSLC செய்முறைத் தேர்வுகள்

 நினைவூட்டல்-1 -  தேர்வுகள் – மிக அவசரம் 

     நடைபெற்று முடிந்த ஏப்ரல்/மே 2022 பத்தாம் வகுப்பு  செய்முறைத் தேர்வுகள் மதிப்பெண் பட்டியல்களை இந்நாள் வரையில் சமர்பிக்காத பள்ளிகள் இன்று 09.05.2022 மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க அனைத்து வகை மேல்நிலைப்/உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, 5 May 2022

 06.05.2022       // பொதுத் தேர்வுகள் மிக அவசரம் // 

மே - 2022  இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் பின்வரும் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

1. தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வருகை புரியாதோர் ( Absentees entry) / மொழிப் பாட விலக்கு பெற்றோர் (Language Exemption) போன்ற விவரங்களை பிற்பகல் 02.00 மணி முதல் 03.00 மணிக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என  இணைப்பு - 1 இல் தெரிவிக்கப்பட்டது. 

தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வருகை புரியாதோர் ( Absentees entry) / மொழிப் பாட விலக்கு பெற்றோர் (Language Exemption) போன்ற விவரங்களை பிற்பகல் 1.30 மணிக்குள் தவறாது  தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள  USER ID மற்றும்  PASSWORD  யை பயன்படுத்தி  பதிவேற்றம் செய்யவேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் ஏற்படாதவாறு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2. அனைத்து தேர்வர்களும் தேர்வெழுத வருகை புரிந்திருப்பின் இணையதளத்தில் " All Present"  என்பதை  Click செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இணைப்பு-1   (04.05.2022  நாளிட்ட அரசு தேர்வுகள் இயக்குநரின் கடிதம்)   இணைப்பு - 2   (05.05.2022  நாளிட்ட அரசு தேர்வுகள்  இயக்குநரின் தொடர்ச்சி  கடிதம்) 

SSLC தேர்வுகள்

பத்தாம் வகுப்பு தேர்வுமையங்களின் விவரங்கள் 

அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேர்வுமையத்தின் பெயர் மற்றும் முதன்மைக்கண்காணிப்பாளர்கள் பெயர்கள் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது. SSLC EXM CENTRE 

05.05.2022          நினைவூட்டல்  - 1   // மிக மிக அவசரம் //தனி கவனம்//

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

மத்திய அரசின் உதவித் தொகை திட்டம்  - NMMSS  (National Means-cum-Merit Scholarship Scheme) உதவித்தொகை - 2015 - 2016, 2016 - 2017, 2017 - 2018 ஆகிய  ஆண்டுகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்ற NMMS உதவித் தொகை பெறுவதற்குத் தகுதிபெற்ற மாணவ / மாணவியர்களில், இணைப்பில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் சரியான வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்த்து  06.05.2022 அன்று முற்பகல் 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு  (deotpt2015@gmail.com) அனுப்பிவிட்டு அதன் 2 நகலை இவ்வலுவலக 5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்  கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு - 1  இணைப்பு - 2

தேர்வுகள் SSLC EXAM 2022 JA/LA ORDER

 அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளராக  நியமனம் செய்யப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்  கவனத்திற்கு,

            முதன்மைக் கண்காணிப்பாளராக  நியமனம் செய்யப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்திற்கு எழுத்தராக பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் அல்லது ஆய்வக உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பெயர்களை இணைப்பில் உள்ளவாறு  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறதுஎழுத்தர்கள் 

Wednesday, 4 May 2022

தேர்வுகள்

 அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளராக  நியமனம் செய்யப்பட்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்  கவனத்திற்கு,

            முதன்மைக் கண்காணிப்பாளராக  நியமனம் செய்யப்பட்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,  முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்திற்கு எழுத்தராக பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் அல்லது ஆய்வக உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பெயர்களை இணைப்பில் உள்ளவாறு மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. எழுத்தர்கள் 

Monday, 2 May 2022

 02.05.2022

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

மத்திய அரசின் உதவித் தொகை திட்டம்  - NMMSS (National Means-cum-Merit Scholarship Scheme) உதவித்தொகை - 2015 - 16, 2016 - 17, 2017 - 18 ஆகிய ஆண்டுகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்ற NMMS உதவித் தொகை பெறுவதற்குத் தகுதிபெற்ற மாணவ / மாணவியர்களில், இணைப்பில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் சரியான வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்த்து  04.05.2022 அன்று முற்பகல் 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com)அனுப்பிவிட்டு அதன் நகலை இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1  இணைப்பு - 2

தேர்வுகள்

 02.05.2022 

அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளராக  நியமனம் செய்யப்பட்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்  கவனத்திற்கு,

நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத்தேர்விற்கு முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாட்கள் எண்ணிக்கையினை  வினாத்தாள் கட்டுக்காப்பாளராக நியமனம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களை தொடர்புக்கொண்டு இன்று மாலைக்குள் சரிபார்த்து அறிக்கையினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

தேர்வுகள்

 02.05.2022  

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும்  / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

  நடைபெறும்  மேல்நிலைப்பள்ளி மற்றும்  பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் விவரங்கள் சார்ந்த பள்ளிகளுக்கு  பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அறைக் கண்காணிப்பாளராக நியமன ஆணை பெறப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்குமாறு  சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்  மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

      மேலும், தங்கள் பள்ளியில் அறைக்கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்படாத பட்டதாரி ஆசிரியர்கள் / முதுகலை ஆசிரியர்கள் விவரங்களை இணைப்பில் உள்ள ONLINE SHEET  இல் தனிக்கவனம் செலுத்தி தலைமை ஆசிரியர்கள் உள்ளீடு செய்யுமாறு (ஆங்கிலத்தில் மட்டும்)  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ONLINE SHEET



தேர்வுகள்

02.05.2022

அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளராக  நியமனம் செய்யப்பட்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்  கவனத்திற்கு,

முதன்மைக் கண்காணிப்பாளராக  நியமனம் செய்யப்பட்ட அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்திற்கு எழுத்தராக பணிநியமனம் செய்ய தங்கள் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் அல்லது ஆய்வக உதவியாளர் பெயர்களை இணைப்பில் காணும் ONLINE படிவத்தில் உரிய விவரங்களை   இன்று  பிற்பகல்  03.00 மணிக்குள் பூர்த்தி  செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE SHEET