14.08.2019 - அவசரம் - தனிகவனம் - அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - கீழ் கண்ட பள்ளிகளில் பணிபுரியும் அரசாணை எண் 47-இன்படி சிறப்பு காலமுறை ஊதிய துப்புறவாளர்களாக பணிநியமனம் பெற்று அரசாணை எண் 50-இன் படி முறையான ஊதியத்தில் துப்புறவாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு இரவு காவலராக பணிமாறுதல் கோருபவர்கள் தங்களது விருப்ப கடிதத்தினை மூன்று (3) நகல்களில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் இன்று மாலை 04.30 மணிக்குள் தனிநபர் மூலமாக திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இரவு காவலராக பணிமாறுதலில் விருப்பம் இல்லாத துப்புறவுபணியாளர்கள் தங்கள் விருப்பமின்மை கடிதத்தினை மூன்று (3) நகல்களில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் இன்று மாலை 04.30 மணிக்குள் தனிநபர் மூலமாக திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
1.புதுப்பேட்டை மகளிர், 2. ஜோலார்பேட்டை மகளிர், 3.மடவாளம் மகளிர், 4. ஆலங்காயம் மகளிர், 5. பொன்னேரி, 6. கொரட்டி, 7. வக்கணம்பட்டி, 8. புதுப்பேட்டை ஆண்கள், 9. மிட்டூர் மகளிர், 10. பெரியகரம், 11. மலைரெட்டியூர், 12. ஆதியூர், 13. அண்ணாண்டப்பட்டி, 14, சந்திரபுரம், 15. சின்னகம்மியம்ப்பட்டு, 16. கொத்தகோட்டை, 17. புத்தகரம், 18. கொடுமாம்பள்ளி, 19. பெருமாப்பட்டு, 20. கிரிசமுத்திரம், 21. நிம்மியம்ப்பட்டு, 22. பால்நாங்குப்பம்.