01.08.2022 // NMMS // புதியது மற்றும் புதுப்பித்தல்
அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
2021-2022 ஆம் ஆண்டிற்கான NMMS 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் புதியதாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் NSP புதியதாக பதிவிறக்கம் செய்யுமாறும் , மற்றும் 10 , 11, மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரம் புதுப்பித்தல் செய்யுமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்காண் தகவல்கள் மேற்கொள்வதில் எந்தஒரு மெத்தனமும் இல்லாமல் 100 சதவிதம் முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எந்த ஒரு மாணவர்க்கும் புதியதாக பதிவிறக்கம் மற்றும் புதுப்பித்தல் செய்யாமல் இருப்பின் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு ஏற்கநேரிடும் , மேலும் இப்பணி வரும் 16.08.2022 க்குள் முடித்து பதிவிறக்கம் செய்து 2 நகல்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.