Wednesday, 23 March 2022

23.03.2022    // தேர்வுகள்  அவசரம் //

மே  - 2022 பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு பொது தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்வதற்கும் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன தற்போது மே - 2022 பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு பொது தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் விடுபட்ட மாணவர்களது பெயரை புதிதாக சேர்ப்பதற்கு 28.03.2022 முதல் 30.03.2022 வரையிலான நாட்களில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் பொதுத் தேர்வுகளுக்கான முன்னிலை பணிகள் துவங்க இருப்பதால் இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. எனவே அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இப்பணியின் முக்கியத்துவம் அறிந்து தனி கவனம் செலுத்தி பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொது தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியினை 30.03.2022 க்குள் நிறைவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு.

இணைப்பில் உள்ள  அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடித வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு - 1, இணைப்பு - 2