14.03.2022 // தேர்வுகள் அவசரம் //
மே - 2022 - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர் பட்டியலை அனைத்து உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் 10.03.2022 அன்று பிற்பகல் முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge.tn.gov.in-க்கு சென்று தங்கள் பள்ளிக்கான வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் PASSWORD ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் பெயர் பட்டியலில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் (பெயர், பிறந்த தேதி, தாய் தந்தை / பாதுகாவலர் பெயர், புகைப்படம்) அத்திருத்தங்களை 11.03.2022 மற்றும் 12.03.2022 ஆகிய இரு நாட்களில் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது 11.03.2022 மற்றும் 12.03.2022 ஆகிய இரு நாட்களில் பத்தாம் வகுப்பு பெயர் பட்டியலில் பகுதி-1 (Part-I) -இல் மொழிப் பாடங்களில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றினை மேற்கொள்வதற்கும், பயிற்று மொழி தொடர்பாக (MEDIUM) திருத்தங்கள் இருப்பின் அவற்றினை உரிய கடிதத்துடன் b1sectiondge@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2022 - க்குள் அனுப்பி வைக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.