13.01.2022 //தேர்வுகள்// தனி கவனம்.(NTSE EXAM POSTPONED)
அனைத்து அரசு/ அரசு உதவி பெறும்/ உயர்நிலைப்பள்ளி/ மேல்நிலைப்பள்ளி/ மெட்ரிக் பள்ளி/ ஆங்கிலோ இந்தியன் பள்ளி/ சிபிஎஸ்சி மற்றும் கேவி கேந்திர வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு.
23.01.2022(ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE), ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக 29.01.2022(சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர்/தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 19.01.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID, Password- ஐப் பயன்படுத்தி தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு களில் பெயர்/புகைப்படம்/பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிகப்பு நிற மையினால் குறித்து சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றொப்பம் பெற்று தேர்வு எழுத தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1 , இணைப்பு 2