19.01.2022 //தேர்வுகள்//
அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு.
2021 -2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களின் விவரங்களை 04.01.2022 முதல் 19.01.2022 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, தேர்வு கட்டணம் மற்றும் TML கட்டணத்தையும் இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஒரு சில பள்ளிகள் மாணவர்களின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன என தெரியவித்ததால் பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கும், இணையதளம் மூலம் தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கும் 20.01.2022 முதல் 31.01.2022 வரையிலான நாட்களில் கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே, பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதன் பின்னர், இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது.
குறிப்பு :இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு.