Wednesday, 19 January 2022

 

19.01.2022  //தேர்வுகள்//

அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு.

நடைபெற்று முடிந்த செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு துணை தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை 21.01.2022(வெள்ளிக்கிழமை) முதல், அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்

இதில், நிரந்தரப் பதிவு எண் ( Permanent Register Number) கொண்ட தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை செப்டம்பர் 2021 துணைத் தேர்வில் தேர்வு எழுதி, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

குறிப்பு: இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு.