Thursday, 20 January 2022

 

21.01.2022            நினைவூட்டல்-1 //தேர்வுகள்//  தனிகவனம்  

 அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக்/சி.பி.எஸ். உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு .

 தேசிய திறனாய்வுத் தேர்வுகள் (NTSE) ஜனவரி 2022 – 29.01.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வுகள் (NTSE) 05.02.2022 (சனிக்கிழமை) நடைபெறும் என்று தெரிவிக்கலாகிறது. தேர்வு தேதி மாற்றத்தினை தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்காண் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுக்களை (Hall Ticket) 25.01.2022 அன்று பிற்பகல் முதல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.