24.12.2021 //தேர்வுகள்//
அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு.
தேர்வுகள் – நடைபெற்று முடிந்த செப்டம்பர் 2021, மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு எழுதி,மறுகூட்டல்- 2 (Re-total-II) மற்றும் மறுமதிப்பீடு. (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவு எண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (Notification பகுதியில்) 27.12.2021 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவுகளுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மறுகூட்டல்/ மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், உடன் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை (statement of marks) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
குறிப்பு: அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு