Friday, 24 December 2021

 

24.12.2021  EMIS  //தேர்வுகள் அவசரம்//

நினைவூட்டல் -1

அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு.

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக 20.12.2021 வரை கால அவகாசம் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டது,

அவ்வாறு EMIS-ல் பதிவேற்றம் செய்யபட்ட மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து அதன் நகலினை EMIS-ல் இருந்து பதிவிறக்கம் செய்து                  இவ்வலுவலக தேர்வுத்துறை பிரிவில் 28.12.2021  மாலை 4 மணிக்குள் முகப்பு கடிதத்துடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இணைப்பு