Thursday, 30 September 2021

  30.09.2021   // NMMS    FRESH AND RENEWAL  // மிக மிக அவசரம் ( நினைவூட்டல் - 3)

அரசு/அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் – தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திறன் தேர்வில் (National Means-cum-Merit Scholarship Scheme) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித் தொகை பெறத்தகுதியான மாணவ/மாணவியர்களின் விண்ணப்பங்கள் (2020-2021 Fresh & தற்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Renewal) ஆன்லைன் மூலம் NSP (National Scholarship Portal) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை இன்று 01.10.2021 காலை 11.00 மணிக்குள் இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி செய்து முடித்து அன்றை தினமே Institute Verification முடித்து விண்ணப்பங்களை ஆண்டுவாரியாக தொகுத்து 2 நகல்களில்  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ5 பிரிவுல் தனிநபர்மூலம் ஒப்படைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு1  இணைப்பு2

1. NMMS Result - இல் உள்ள படியே விண்ணப்பத்திலும் பெயர் இருத்தல் வேண்டும்.

2. Scholarship என்ற கலத்தில் Prematric -  யையும்  Scheme Type என்ற கலத்தில் Scholarship  யையும் தேர்வு செய்ய வேண்டும். Father Occupation - இல் Other  என்று Select செய்ய வேண்டும்.

3. ஆதார் அட்டை மற்றும் NMMS Result  ஒரே மாதிரியான பெயர் இருந்தால் மட்டுமே ஆதார் அட்டை Upload செய்யப்பட வேண்டும். 

4. இல்லையெனில் NMMS  RESULT  இல் உள்ளபடி கட்டாயமாக ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்யவேண்டும். 

5. ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்த பின்பு மாணவரின் APPLICATION ID  இல் சென்று பதிவு செய்யவும்.

6. Community - இல் Sc /St / General மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

7. Previous  year - 2021 & Competitive Exam Year - 2020  என Enter செய்ய வேண்டும்.

8.Renewal Application ஒரு போதும் Withdraw செய்தல் கூடாது. Correction இருந்தால் Defect  மட்டுமே கொடுக்க வேண்டும்.