Monday, 7 December 2020

 08.12.2020  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பாக இணைப்பில் காணும் தமிழ்நாடு பள்ளிகல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு தகுதி வாய்ந்தவர்கள் சார்பாக கருத்துருக்கள் 3 நகல்களுடன் பணிப்பதிவேட்டுடன் இவ்வலுவலக ஆ2 பிரிவில் 15.12.2020 க்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகுதிவாய்ந்தவர்கள் இல்லை எனில் இன்மை அறிக்கை   அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

    01.01.2019 நிலவரப்படி வெளியிடப்பட்ட முன்னுரிமைப்பட்டியலில் எஞ்சிய 701 முதல் உள்ள ஆசிரியர்களின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களது பணி விவரங்கள் சரியாக உள்ளனவா என்பது குறித்தும் பணி ஓய்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளவர்கள் விவரங்களை நீக்கம் செய்வது குறித்தும் சேர்க்கை /நீக்கல் விவரங்களை இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பணிப்பதிவேட்டுடன் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1, இணைப்பு - 2