04.08.2020 அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் கல்வி மாவட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு கல்வித்துறை சார்பான செய்திகள் அனுப்பவும், உடனுக்குடன் தகவல்கள் பெறும் பொருட்டு 2018ஆண்டு BSNL
CUG SIM வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இவ்வாண்டிற்குண்டான வருடாந்திர கட்டணம் ரூ.1400/-ஐ சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலத்தில்
06-08-2020 அன்று மாலை 04.00 மணிக்குள் செலுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் தற்போது வருடாந்திர கட்டணம் செலுத்தாத சூழ்நிலையினால் தற்காலிகமாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக BSNL நிறுவனத்திலிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது. தாங்கள் செலுத்தும் வருடாந்திர கட்டணத்திற்கு உரிய இரசீது
BSNL நிறுவனத்திலிருந்து பெற்று தங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உரிய கட்டணம் செலுத்தி புதுபித்தபின் கீழ்க்காணும் வசதிகள் இந்த இணைப்பு
மூலம் பெற்று பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
1.
BSNL CUG இணைப்பில் உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களிடமும் எவ்வித கட்டணமும் இன்றி ஒருவருடத்திற்கு
அழைப்புகள் மூலம் அலைபேசியினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
2. நாள் ஒன்றுக்கு
1 GB இணையதளவசதி வழங்கப்பட்டுள்ளது. (சென்ற ஆண்டு மாதத்திற்கு 1 GB வழங்கப்பட்டுள்ளதை தற்போது மாற்றம் செய்து பெறப்பட்டுள்ளது.)
3. நாள் ஒன்றுக்கு 100 குறுஞ்செய்தி எவ்வித கட்டணமும்மின்றி அனுப்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மேற்கண்ட செயல்முறையினை பின்பற்றி செயல்படுமாறு தெரிவிக்கப்படுகிறது.