Wednesday, 29 June 2022

 29.06.2022    // தேர்வுகள் அவசரம் //

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்களின்  கவனத்திற்கு 

 2021- 2022-ஆம் கல்வியாண்டு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு இடைநின்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை உடனடி தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் விவரங்களை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் இணையதளத்தில் உள்ள  ஆன் லைன் படிவத்தில் 01.07.2022 க்குள்  உள்ளீடு செய்யுமாறு  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Tuesday, 28 June 2022

 28.06.2022// தேர்வுகள் அவசரம் // 

அனைத்து மேல்நிலை / இடைநிலை தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

மே – 2021 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத்தேர்வு மையங்களுக்கு முதன்மை விடைத்தாட்கள் மற்றும் எழுது பொருட்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ள எழுது பொருட்களின் இருப்பு விவரம் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 02.07.2022 க்குள் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்யில்  எழுதுப்பொருட்கள் ஒப்படைக்க அனைத்து மேல்நிலை / இடைநிலை தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 28.06.2022   // மிக மிக அவசரம் // 

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மத்திய அரசின் தேசிய பெண் குழந்தைகளுக்கான  இடைநிலைக்கல்வி ஊக்கத் தொகை திட்டம் (NSIGSE) 2017 -2018 ஆம் ஆண்டிற்கான திட்டம் சார்பாக  இணைப்பில் உள்ள   படிவத்தில் பூர்த்தி செய்து 29.06.2022 - காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) அனுப்பிவிட்டு அதன் 2 நகலினை  இவ்வலுவலக அ5 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு1 இணைப்பு2 

Monday, 27 June 2022

 27.06.2022   

அனைத்து  அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கான  6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடநூல்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அப்பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது போக  இருப்பில்  உள்ள பாடநூல்களை மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 30.06.2022 க்குள்  ஒப்படைக்கும் படியும் மேலும் கூடுதல்  பாடநூல்கள் தேவையிருப்பின் பெற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Thursday, 23 June 2022

 23.06.2022  // மிக மிக அவசரம் //  தனி கவனம்//

 அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

அரசினர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கீழ்காணும் பொருள் சார்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கூட்டத்திற்கு தகவல்கள் அளிக்க வேண்டியுள்ளதால் பின் வரும் தகவல்களை நாளை (24.06.2022) காலை 11.00 மணிக்குள்  இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com) அனுப்பிவிட்டு அதன் நகலினை தலைமை ஆசிரியர் ஒப்பத்துடன் தனி நபர் மூலம்  ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இது மிகவும் அவசரம்.

1. இடிக்கப்படவேண்டிய கட்டிடங்கள் சார்பான விவரம்

2 . மழை நீர் தேங்கியுள்ள பள்ளிகள்  சார்பான விவரம் 

Tuesday, 21 June 2022

  21.06.2022  // மிக மிக அவசரம் //

 அனைத்து வகை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மாவட்ட கருவூல அலுவலரின்  கடிதத்திற்கிணங்க ஊதியமில்லா பட்டியல்களின் 01.04.2020 முதல் 31.03.2022 வரையிலான காலத்திற்கு வரவு செலவு இருப்பு (NON SALARY)   விவரத்தினை  இணைப்பில்  உள்ள  படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட கருவூலம்  மற்றும் சார்கருவூலம் அலுவலர்களுக்கு அனுப்பிவிட்டு அதன்  நகலினை  இவ்வலுவலகத்தில்  ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு 

 21/06/2022 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் ஒன்றிய அளவிலான SPOKEN ENGLISH  பயிற்சியில் கலந்து 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு 24.06.2022 அன்று நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பொருட்டு சார்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இணைப்பு 

 21.06.2022  // மிக மிக அவசரம் //   நினைவூட்டல் 3 

  அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

07.06.2022 நாளிட்ட ந.க.எண்.000606 /எப்2/2022 இலக்கமிட்ட சென்னை , பள்ளிக்கல்வி ஆணையரக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் இத்துடன்  அனுப்பலாகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ACCOUNT NUMBER NOT MATCHED  என குறிப்பிட்டுள்ள EXCEL  படிவத்தில் தெரிவித்துள்ள வங்கிக்கணக்குகளின் தொடர்புடைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மட்டும் வங்கிக்கணக்கு புத்தகத்துடன் கணக்கு எண் சரிபார்த்து  EXCEL   படிவம்  (F) இல் சரியான வங்கிக்கணக்கு எண் குறிப்பிட்டு தலைமையாசிரியர் ஒப்பத்துடன் இரு நகல்களில் தனி நபர்மூலம்  ஒப்படைக்க இரு முறை இவ்வலுவலக இணையதளத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது ஆனால் , நாளாது வரை அனுப்பாத தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி கோரப்பட்ட தகவல்களை வங்கிகணக்கு புத்தக நகலுடன்  நாளை ( 22.06.2022 ) 11.30  மணிக்குள் தனி நபர் மூலம் இவ்வலுவலகத்தில்  நேர்முக உதவியாளரிடம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 இணைப்பு1 இணைப்பு 2 

 

21/06/2022  // தேர்வுகள் அவசரம் // 

 அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

மே 2022 பத்தாம் வகுப்பு/மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள்/ மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் /விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் சார்பாக.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்/மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்:

24.06.2022 முற்பகல் 11.00 மணி முதல் மே 2022, பத்தாம் வகுப்பு/பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்/மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், 24.06.2022 முற்பகல் 11.00 மணி முதல் பள்ளி மாணவர்கள்/தனித்தேர்வர்கள் தங்களுக்கென தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்/மதிப்பெண் பட்டியலை தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பத்தாம் வகுப்பு தேர்வர்கள்-மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

மே 2022, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தாம் தேர்வு எழுதிய எந்தவொரு  பாடத்திற்கும் பள்ளி மாணவர்கள்/தனித்தேர்வர்கள் மறுகூட்டலுக்கு (RETOTALLING) விண்ணப்பிக்கலாம்.

மே 2022 பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி விடைத்தாள்களில் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 22.06.2022(புதன்கிழமை) காலை 10.00 மணி முதல் 29.06.2022(புதன்கிழமை) மாலை 5.00 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு: மறுகூட்டலுக்காண கட்டணம் செலுத்தும் முறை, மறுகூட்டலுக்கான  கட்டணம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வர்கள்- விடைத்தாள் நகல் /மறு கூட்டலுக்கு-I விண்ணப்பிக்கும் முறை,விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறை ஆகியவை இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதல்படி பின்பற்றுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இனைப்புஇணைப்பு 2 இணைப்பு3 இணைப்பு4 

Friday, 17 June 2022

17.06.2022   

அனைத்து வகை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு 

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு  எதிர் வரும் 21.06.2022 அன்று  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டடத்தினை திறந்து வைத்தல்.பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்  சார்பாக வருகை புரியவதால்  வருகையின் போது பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் தணிக்கை செய்ய வாய்ப்பு உள்ளதால் அனைத்து வகை பள்ளிகளும்,அலுவலகங்களும் (தொடக்கக் கல்வி உட்பட)  நல்ல சுகாதாரமான நிலையில் இயங்குவதையும், சுற்றுப்புறத் தூய்மை, கழிப்பட வசதிகள்,குடிநீர் வசதிகள்(சுகாதாரமான முறையில் குடிநீர் தொட்டிகள் (Water Tank) , மாணவர்கள் நல்ல நிலையில் உள்ள கட்டடங்களில்  பயில்வதையும்  உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்  என தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு 

Wednesday, 15 June 2022

  15.06.2022  // மிக மிக அவசரம் // 

  அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

07.06.2022 நாளிட்ட ந.க.எண்.000606 /எப்2/2022 இலக்கமிட்ட சென்னை , பள்ளிக்கல்வி ஆணையரக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் இத்துடன்  அனுப்பலாகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ACCOUNT NUMBER NOT MATCHED  என குறிப்பிட்டுள்ள EXCEL  படிவத்தில் தெரிவித்துள்ள வங்கிக்கணக்குகளின் தொடர்புடைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மட்டும் வங்கிக்கணக்கு புத்தகத்துடன் கணக்கு எண் சரிபார்த்து  EXCEL   படிவம்  (F) இல் சரியான வங்கிக்கணக்கு எண் குறிப்பிட்டு தலைமையாசிரியர் ஒப்பத்துடன் இரு நகல்களில் தனி நபர்மூலம்  ஒப்படைக்க 13.6.2022 நாளிட்ட இவ்வலுவலக இணையதளத்தில் 23 பள்ளி வங்கி கணக்குகள் சார்பான தகவல்கள்  14.06.2022 மாலை 4.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது  ஆனால் பெரியகரம் மற்றும் ஜோலார்பேட்டை மகளிர் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து மட்டுமே தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

எனவே , நாளாது வரை அனுப்பாத தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி கோரப்பட்ட தகவல்களை வங்கிகணக்கு புத்தக நகலுடன் இன்று மாலை 05.00 மணிக்குள் தனி நபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 இணைப்பு1 இணைப்பு 2 

Tuesday, 14 June 2022

நல்லாசிரியர் விருது

 14.06.2022   

அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2022 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் 20.06.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு 

Monday, 13 June 2022

 13.06.2022 

அனைத்து  வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு  மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு  2022 -2023 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. அப்பாடநூல்கள் மாணவர்களுக்கு   வழங்கப்பட்ட விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 16.06.2022 மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் நேரில் ஒப்படைக்ககேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்புபடிவம் 

 13.06.2022  // மிக மிக அவசரம் //

 அனைத்து வகை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மாவட்ட கருவூல அலுவலரின்  கடிதத்திற்கிணங்க ஊதியமில்லா பட்டியல்களின் 01.04.2020 முதல் 31.03.2022 வரையிலான காலத்திற்கு வரவு செலவு இருப்பு (NON SALARY)   விவரத்தினை  இணைப்பில்  உள்ள  படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட கருவூலம்  மற்றும் சார்கருவூலம் அலுவலர்களுக்கு அனுப்பிவிட்டு அதன்  நகலினை  இவ்வலுவலகத்தில்  ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 13.06.2022  // மிக மிக அவசரம் // 

  அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

07.06.2022 நாளிட்ட ந.க.எண்.000606 /எப்2/2022 இலக்கமிட்ட சென்னை , பள்ளிக்கல்வி ஆணையரக நிதி கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் இத்துடன்  அனுப்பலாகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ACCOUNT NUMBER NOT MATCHED  என குறிப்பிட்டுள்ள EXCEL  படிவத்தில் தெரிவித்துள்ள வங்கிக்கணக்குகளின் தொடர்புடைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மட்டும் வங்கிக்கணக்கு புத்தகத்துடன் கணக்கு எண் சரிபார்த்து  EXCEL   படிவம்  (F) இல் சரியான வங்கிக்கணக்கு எண் குறிப்பிட்டு தலைமையாசிரியர் ஒப்பத்துடன் இரு நகல்களில் தனி நபர்மூலம் 14.06.2022 மாலை 4.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 இணைப்பு1 இணைப்பு 2 

Tuesday, 7 June 2022

 07.06.2022   

2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை நாளை  08.06.2022  வழங்கப்படவுள்ளது. கீழ்கண்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் காலை 10.00 மணிமுதல் பள்ளியில் தயார் நிலையில் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

1. அ.உ.நி.பள்ளி, மண்டலநாயனகுண்டா.

2. அ.உ.நி.பள்ளி, கும்மிடிகாம்பட்டி

3. அ.உ.நி.பள்ளி, பெரியகரம்.

4. அ.ஆ.மே.நி.பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி

5. அ.பெ.மே.நி.பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி

6. அ.மே.நி.பள்ளி, கசிநாயக்கன்பட்டி

7. அ.உ.நி.பள்ளி, பாரண்டப்பள்ளி,

8. அ.உ.நி.பள்ளி, செவ்வாத்தூர்.

9. அ.உ.நி.பள்ளி, ஆதியூர்

10. அ.உ.நி.பள்ளி, எலவம்பட்டி

11. அ.மே.நி.பள்ளி, நத்தம்.

12. அ.மே.நி.பள்ளி, குனிச்சி,

13. அ.மே.நி.பள்ளி, சுந்தரம்பள்ளி,

14. அ.மே.நி.பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி.

15. அ.பெ.மே.நி.பள்ளி, புதுப்பேட்டை

16. அ.மே.நி.பள்ளி, மல்லப்பள்ளி

17. அ.மே.நி.பள்ளி, வெலக்கல்நத்தம்.

18. அ.ஆ.மே.நி.பள்ளி, புதுப்பேட்டை.

19. அ.உ.நி.பள்ளி, சந்திரபுரம்.

20. அ.உ.நி.பள்ளி, அக்ராகரம்.

21. அ.உ.நி.பள்ளி, புத்தகரம்.

22. அ.மே.நி.பள்ளி, ஜெயபுரம்.

Friday, 3 June 2022

பவானிசாகர் பயிற்சி

 02.06.2022  

அனைத்து வகை அரசு  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

 தமிழ்நாடு அமைச்சுப்பணி -பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி  நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு அடிப்படைப்பயிற்சி நடைபெறுவதல்  15.03.2022 நிலவரப்படி பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் பட்டியல் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து  07.06.2022 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்க  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் ,  எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Thursday, 2 June 2022

 02.06.2022 // மிக மிக அவசரம்//

அனைத்து வகை அரசு  / அரசு உதவிபெறும்  உயர்நிலை மற்றும்  மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பணிமனைக்காக ஓவிய ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்களுக்கு (03.06.2022 மற்றும் 04.06.2022)  YMCA மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளதால் தங்கள் பள்ளியில் உள்ள ஓவிய ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Wednesday, 1 June 2022

 01.06.2022  // மிக மிக அவசரம் //

 அனைத்து வகை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மாவட்ட கருவூல அலுவலரின்  கடிதத்திற்கிணங்க ஊதியமில்லா பட்டியல்களின் 01.04.2020 முதல் 31.03.2021 வரையிலான காலத்திற்கு வரவு செலவு இருப்பு (NON SALARY)   விவரத்தினை  இணைப்பில்  உள்ள  படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட கருவூலம்  மற்றும் சார்கருவூலம் அலுவலர்களுக்கு அனுப்பிவிட்டு அதன்  நகலினை  இவ்வலுவலகத்தில்  ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.      படிவம் 

 02.06.2022  

அனைத்து வகை  உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2021 - 2022 ஆம்  ஆண்டிற்கான  பொதுத்தேர்வில்  10 ஆம் வகுப்பு , 11 ஆம் வகுப்பு  மற்றும் 12 ஆம் வகுப்பு இணைப்பில் உள்ள பள்ளிகளின்  மாணவர்கள்  பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தை  இணைப்பில் உள்ள  படிவத்தில்  தங்கள் பள்ளி மாணவர்களின் பெயருக்கு  எதிரே கடைசியாக  உள்ள களம் J and K  வை  பூர்த்தி செய்து   06.06.2022 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு   அதன் நகலினை நேரில்  ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு1  இணைப்பு 2 

 01.06.2022  // மிக மிக அவசரம் //

இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மாவட்ட கருவூல அலுவலரின் அறிவுறுத்தலின்படி இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணைப்பில்  உள்ள  படிவத்தினை பூர்த்தி செய்து நானை காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் 2  நகலினை  இவ்வலுவலகத்தில்  நேரில் ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 1இணைப்பு   2படிவம்