Monday, 7 March 2022

 07.03.2022      // நினைவூட்டல்//   மிக அவசரம் // 

 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2021 – 2022 ஆம் கல்வியாண்டு  -   ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த    6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்தும், சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்றும் இதுவரை சமர்ப்பிக்காமல் உள்ள பள்ளிகள் நாளை 08.03.2022 மாலை 03.00 மணிக்குள் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட்டு அதன் 3 நகலினை இவ்வலுவலக அ5 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT - 1ATTACHMENT - 2ATTACHMENT - 3 

குறிப்பு: - 

மேலும், இதுவரை SC/ST கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்கியவர்களும் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பூர்த்தியான படிவங்களை அனுப்புமாறு சார்ந்த  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

(குறிப்பு : -  
1. மாணவிகளின் பெயரில் மட்டுமே தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் வங்கி கணக்கு இருக்க வேண்டும்.
2 .மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல்
3.  படிவம் 1, 2  (3 நகல்கள் )