25.02.2022
அனைத்து அரசு /அரசு நிதிஉதவி/ மெட்ரிக், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் /தாளாளர்கள் கவனத்திற்கு.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வருகின்ற 27.02.2022 ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இது குறித்த தகவலை ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் 27.02.2022 இன்று போலியோ சொட்டு மருந்து போட தவறியவர்களுக்கு 28.02.2022 மற்றும் 01.03.2022 ஆகிய இரு நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செவிலியர்கள் தங்கள் இல்லம் தேடி வந்து சொட்டு மருந்து வழங்கிட அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. மருத்துவ ஊழியர்கள் தங்கள் பள்ளியில் முகாம் அமைக்க கோரினால் கேட்கும் இடவசதி ,குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.