02.02.2022 // தேர்வுகள் தனிகவனம்//
அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு –
2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாமாண்டு பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வு கட்டணம் மற்றும் TML கட்டணம் (பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு) செலுத்துவதற்கு மேலும் கூடுதலாக 03.02.2022 முதல் 05.02.2022 வரையிலான நாட்களில் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே, பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதன் பின்னர், இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கலாகிறது. இணைப்பு