Thursday, 9 December 2021

 09.12.2021   // தேர்வுகள் // EMIS //

அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் /மெட்ரிக் /உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு

2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான பள்ளி மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு அனைத்து உயர்நிலை  மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் 22.11.2021 முதல் 04. 12.2021 வரையிலான நாட்களில் EMIS  தளத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் பெயர் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.தற்போது சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட பணியை மேற்கொள்வதற்கு கூடுதல் கால அவகாசம் கோரியதால் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் செய்யும் பணியினை மேற்கொள்ள 20.12.2020 வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது மேற்குறிப்பிட்ட பணிகளை  மேற்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பு ஆகும்.

குறிப்பு :-அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் இணைப்பில் உள்ள கடிதத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு