14.12.2021 // தேர்வுகள் தனி கவனம் //
அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் /மெட்ரிக் /உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
நடைபெற்ற செப்டம்பர் - 2021 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் தேர்வு எண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில். 15. 12. 2021 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்படுகிறது இதில் இடம் பெறுபவர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பட்டியலில் இடம் பெறாத தேர்வர்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு .அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் இணைப்பில் உள்ள கடிதத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு