28.12.2021 // தேர்வுகள் //
அனைத்து வகை அரசு /நிதியுதவி /சுயநிதி /மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் /முதல்வர்களின் கவனத்திற்கு –
தேர்வுகள் – 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான 2021-2022-கல்வியாண்டில் பொதுத் தேர்வுக்கு முன்னர் மாணவர்களின் அறிவுத் திறனை சோதிக்கும் வகையில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன அதற்கான தேர்வுகால அட்டவணைகள் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்விற்கான (குறைக்கப்பட்ட) பாடத்திட்டம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
மேற்காணும் விவரத்தினை அனைத்து பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் அறியும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் தேர்வுகள் நடத்துவது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் விவரங்கள் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
குறிப்பு. அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதம் இணைப்பில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு1 . இணைப்பு2 இணைப்பு3