Thursday, 21 October 2021

 21/10/2021      //மிக மிக அவசரம் // தேர்வுகள் //

அனைத்து  வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின்  கவனத்திற்கு

நடைபெற்ற ஆகஸ்ட் 2021, மேல்நிலை இரண்டாமாண்டு துணை பொதுத்தேர்வு  எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு (Revaluation ) கோரி விண்ணப்பித்தவர்களுள் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது தேர்வெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in  என்ற  இணையதளத்தில் 22.10.2021 அன்று முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம்பெறாத தேர்வெண்களுக்குரிய (Roll No) தேர்வர்களின் விடைத்தாட்களில் எவ்வித  மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
    மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் மேற்காண் இணையதளத்தில் தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதி (Date of Birth ) ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.