Wednesday, 7 October 2020

 08.10.2020   //தனிகவனம்//   // நினைவூட்டல் -1 //

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 மத்திய கல்வி உதவி தொகை திட்டம் - பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் (NSIGSE)  - 2012-2013, 2013-2014, 2014 - 2015 , 2015 - 2016  மற்றும் 2016-2017  ஆகிய  ஆண்டுகளில் 9 ஆம் வகுப்பு பயின்று தொடர்ந்து அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இத்திட்டத்திற்கு தகுதியான SC/ST  மாணவியர்களின் விவரங்கள் பெறப்பட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அம்மாணவியர்களை கண்டறிந்து  இணைப்பில் உள்ள படிவத்தில்  அம்மாணவியர்களின் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் பிரதி 4 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் 30.09.2020  க்குள் சமர்ப்பிக்குமாறு  தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தேதியில் 15 பள்ளிகள் மட்டுமே முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது.  எனவே இணைப்பில் உள்ள பள்ளிகள்  இனியும் காலந்தாழ்த்தாமல் மேற்படி குறிப்பிட்ட ஆண்டுகளில் ஆண்டு வாரியாக தொகுத்து கண்டிப்பாக 4 நகல்களில்  இன்று  (08.10.2020) மாலை 05.00 மணிக்குள் தனி நபர் மூலம் நேரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இன்மை அறிக்கை என்றாலும் ஆண்டு வாரியாக 4 நகல்களில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT  ATTACHMENT1   ATTACHMENT2     PROFORMA