08.10.2020 // நினைவூட்டல் -1
அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்/ முதல்வர்களின் கவனத்திற்கு
பெருந்தலைவர் காமராசர் - இணைப்பில் உள்ள செயல்முறை கடிதம் மற்றும் அரசாணையின் நிபந்தணையின்படி 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 07.10.2020 க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deotpt2015@gmail.com ) அனுப்பிவிட்டு அதன் பிரதியை 3 நகல்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தேதியில் 13 பள்ளிகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே , 08.10.2020 இன்று பிற்பகல் 02.00 மணிக்குள் வரப்பெரும் மாணவர்களின் விவரங்கள் மட்டுமே திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தகுதியான மாணவ /மாணவிகள் இல்லை எனில் இன்மை அறிக்கை 3 நகல்களில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு . மாணாக்கர்களின் மதிப்பெண் விழுக்காட்டிற்கு இணைப்பில் உள்ள அட்டவணை 1 ல் உள்ள அறிவுரைகளை பின்பற்றவும் .