06.09.2019 - தேர்வுகள் - தனி கவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.ஏஸ்.இ உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - தேசிய திறனாய்வுத் தேர்வு 2019 (NTS EXAM 2019) - 2019-20ஆம் கல்யாண்டில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணக்கர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் 22.08.2019 முதல் 07.09.2019 வரையில் பதிவிறக்கம் செய்து மாணக்கர்களிடம் வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID & Password-ஐ பயன்படுத்தி மாணாக்கர்களிடமிருந்து பெறப்பட்ட விவரங்களை 09.09.2019 முதல் 18.09.2019 வரையில் சார்ந்த பள்ளிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிட்டு 19.09.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 11.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் கீழ்கண்ட விவரங்களை ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமைஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் (சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
19.09.2019 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவகத்தில் ஒப்படைக்கவேண்டிய ஆவணங்கள்:-
1. ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல் - 02 (இரண்டு நகல்)
2. Summary Report - 03 (மூன்று நகல்)
3.தேர்வு கட்டணத்தொகை ஒரு மாணவருக்கு ரூ 50/-