Wednesday, 7 August 2019


மிக மிக அவசரம்  தனிகவனம்
அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் மற்றும்  மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு 

ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஒவ்வொரு  பள்ளியிலும் , ஒவ்வொரு வகுப்பிலும் பயிலக்கூடிய மாணவ/மாணவிகள் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படல் வேண்டும் என உயர் அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியும் , இது சார்ந்த பயிற்சியும் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ள  நிலையில் , இது  நாள் வரை EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் மற்றும் திருத்தம் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள்   சரிபார்த்தும் UPDATE  செய்யப்படாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குறியது .
                எனவே தலைமையாசிரியர்கள்  ( 08.08.2019 மற்றும் 09.08.2019) இரண்டு நாட்களுக்குள் EMIS  இணையதளத்தில்  உள்ள  விவரங்களை சரியாகவும்  , துள்ளியமாகவும் சரிபார்த்து  UPDATE   செய்யப்படல் வேண்டும் என தெரிவிக்கலாகிறது .
                மேலும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில்  உள்ள  நர்சரி பிரைமரி  மற்றும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து உடனே  இப்பணியினை  முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மற்றும் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் மேற்கண்ட பணி முடித்ததற்கான சான்று  தலைமை ஆசிரியர்  கையொப்பத்துடன்  வட்டாரக்கல்வி அலுவலர்  மேற்கையொப்பம்  செய்து  09.08.2019 மாலைக்குள் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்கப்படல் வேண்டும்.  இதில்   சுனக்கம் இல்லாமல்  துரிதமாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
குறிப்பு
ஒவ்வொரு  பள்ளியிலும்  உள்ள குழந்தைகள் சார்ந்த விவரங்கள்  EDWIZEVELLORE   இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அத்தகவல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, எனவே சம்மந்தப்பட்ட வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை  உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் CBSE. மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   மேற்குறித்த பணிகள் முடித்தமைக்கான சான்றினை  09.08.2019   மாலை 5.00 மணிக்குள்  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்  தனி நபர் மூலம் ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT