Friday, 2 August 2019


02.08.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

          அனைத்து ஊரகப் (Rural) பகுதிகளிலுள்ள அரசு ஆரம்ப/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கவனதிற்கு - மாவட்ட திட்ட இயக்குநர், வேலூர் அவர்களின் செயல்முறைகளின்படி, பொது சுகாதாரம் சார்பான போட்டிகள் பள்ளி அளவில் வருகின்ற ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட்டு, ஒன்றிய அளவில் வருகின்ற 21.08.2019 அன்று நடத்தப்படல் வேண்டும் என தெரிவிக்கலாகிறது. மேலும் போட்டிகள் நடத்தப்பட்ட விவரத்தினையும் அதற்காக ஒவ்வொருப் பள்ளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கான பற்றுச்சீட்டுக்கள் இரண்டு நகல்களுடன் படிவம்-2, ஆரம்ப பள்ளிகளுக்கு தனியாகவும், நடுநிலைப்பள்ளிகளுக்கு தனியாகவும் பூர்த்தி செய்து BEO கையொப்பத்துடன் இரண்டு நகல்களில் 26.08.2019 அன்று காலை 11.00 மணிக்குள் மாவட்டக்கல்வி அலுவலக கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
            மேலும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளை பொருத்தவரையில் பள்ளி அளவில் போட்டிகளை நடத்தி மேற்படி படிவங்கள்-2 மற்றும் பற்றுசீட்டுகள் இரண்டு நகல்களில் 26.08.2019 அன்று காலை 11.00 மணிக்குள் மாவட்டக்கல்வி அலுவலக கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் மற்றும் படிவங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.    
குறிப்பு:- 1. 2018-19 ஆம் கல்யாண்டிற்கு தனியாகவும் மற்றும் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கு தனித்தனியாகவும் பற்றுசீட்டுக்கள் மற்றும் படிவங்கள் ஒப்படைக்கவேண்டும்.
                    2. பள்ளியின் SMC வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், IFSC Code, படிவம் 1-ல் கண்டிப்பாக பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
ATTACHMENT