31.03.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு விடைத்தாள் மைய மதிப்பீட்டு முகாமிற்கு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை விடுவித்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளின் படி விடைத்தாள் மதிப்பீட்டு முகாமினை எட்டு தினங்களுக்குள் முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்துவகை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு வந்து ஒத்துழைப்பினை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு பள்ளிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகைபுரியாத பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிகளிலிருந்து விடுவிக்காத தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் அனைத்தும் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் மற்றும் அரசுத்தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) அவர்களுக்கும் துறை சார்பான நடவடிக்கைக்கு மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.