22.11.2022 தேர்வுகள் அவசரம்
அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
ஏப்ரல் - 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - பகுதி - 1 இல் தமிழ்மொழிப்பாடம் எழுத விலக்கு கோருதல் - தொடர்பாக இணைப்பு - 1 இணைப்பு - 2
22.11.2022 தேர்வுகள் அவசரம்
அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
ஏப்ரல் - 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - பகுதி - 1 இல் தமிழ்மொழிப்பாடம் எழுத விலக்கு கோருதல் - தொடர்பாக இணைப்பு - 1 இணைப்பு - 2
16.11.2022
ந.க.எண்.2773 /ஆ4/2022 நாள். .10.2022
// சிக்கன தந்தி //
அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது,
2023 - 2024 ஆம் கல்வியாண்டிற்கான உத்தேச பாடநூல் தேவைப்பட்டியல் 28.10.2022 அன்று மாவட்டக் கல்வி அலுவலக (இடைநிலை) இணையதளத்திலும் மற்றும் சார்ந்த பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டது. அப்பட்டியலை பூர்த்தி செய்து 04.11.2022 அன்று மாலைக்குள் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட படிவத்தினை ஆ4 பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் 08.11.2022 நாள் வரை கீழ்காணும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இப்படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்கப்படாதது குறித்த விவரத்தினை DEO Whatsapp Group - இல் வெளியிடப்பட்டு விரைந்து வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டும், மேலும் தொலைபேசி மூலமாகவும் தேவைப்பட்டியலை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டும் இன்று வரை (16.11.2022) கீழ்கண்ட பள்ளிகள் பாடநூல் தேவைப்பட்டியல் அளிக்கப்படாத காரணத்தால் பாடநூல் தேவைப்பட்டியலை தொகுத்து பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களுக்கு அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயர் அலுவலரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுகிறது என்பதால் இந்த சிக்கனத் தந்தி கிடைக்கப்பெற்ற இன்றே (16.11.2022 க்குள் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும், 2023 - 2024 கல்வியாண்டில் பாடநூல் பற்றாக்குறை ஏற்படின் அதற்கு சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என்பதனை திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.
// ஓம் //
மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)
திருப்பத்தூர்
பெறுநர்,
கீழ்கண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
1. அ.மே.நி.பள்ளி மலைரெட்டியூர்.
2. அ.உ.நி.பள்ளி பீ.நாயக்கனூர்.
3. அ.உ.நி.பள்ளி திம்மாம்பேட்டை
4. அ.மே.நி.பள்ளி வடசேரி
5. அ.மே.நி.பள்ளி பொம்மிகுப்பம்
6. அ. ஆதிதிராவிடர் மே.நி.பள்ளி ஆலங்காயம்.
7. கண்கார்டியா மே.நி.பள்ளி ஆம்பூர்.
8. மஸ்ருல் உம் மே.நி.பள்ளி ஆம்பூர்.
9. இந்து பெண்கள் மே.நி.பள்ளி ஆம்பூர்.
10. முகமதியா உ.நி.பள்ளி, உமராபாத்.
11. இஸ்லாமியா ஜமாத் உ.நி.பள்ளி நரியம்பட்டு
12. அ.மே.நி.பள்ளி கசிநாயக்கன்பட்டி
நகல்,
திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது.
08.11.2022 //தேர்வுகள் அவசரம் //
அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
மார்ச் / ஏப்ரல் - 2023 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்பு. இணைப்பு