Monday, 31 October 2022

 

01.11.2022                        //தேர்வுகள் அவசரம் //

ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு / நிதியுதவி / ஆதிதிராவிடர் நலம் / வனத்துறை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு - ஊரகத் திறனாய்வுத் தேர்வு - டிசம்பர்-2022 தேர்விற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - சார்பு   - இணைப்பு

 31.10.2022               //  தேர்வுகள் அவசரம் //

அனைத்து வகை அரசு / நகராட்சி / நிதியுதவி / ஆதிதிராவிடர் நலம் / வனத்துறை - உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - மார்ச் /ஏப்ரல் - 2023 - புதிய தேர்வு மையம் அமைத்தல், புதுப்பித்தல் சார்பான கருத்துருக்கள்  04.11.2022 க்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் 3 நகல்களில் சமர்ப்பிக்கக்கோருதல் - சார்பு. இணைப்பு 

Friday, 28 October 2022

 28.10.2022  //  மிக மிக அவசரம்  தனி கவனம்//

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு  வழங்கும் பொருட்டு  இணைப்பில் உள்ள உத்தேச பாடநூல்கள்  தேவைப்பட்டியல் (2 நகல்கள்) பூர்த்தி செய்து 04.11.2022  அன்று மாலை 05.00 மணிக்குள்   இவ்வலுவக ஆ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு 

Thursday, 27 October 2022

 27.10.2022

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2022 - 2023  ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் எண்ணிக்கையினை ( EMIS  இல் உள்ளீடு செய்யப்பட்டவாறு) இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரண்டு நகலினை 01.11.2022  அன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ4 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

Wednesday, 12 October 2022

 12.10.2022

                                        தேர்வுகள் அவசரம்

மே – 2022   பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்  13.10.2022 அன்று  திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் முற்பகல் 10.00 மணியளவில் வழங்கப்படும். அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நேரில் வந்து  தங்கள் பள்ளியின் முத்திரையுடன் கையொப்பமிட்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு :  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை  விநியோகிக்க வேண்டிய  நாள்.  14.10.2022

                                                                                                                                                                


Tuesday, 11 October 2022

 12.10.2022  

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2022 -2023 ஆம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் இணைப்பில் கண்ட அட்டவணைப்படி ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒரு மாணவர் / மாணவியை தேர்வு செய்து போட்டியில் பங்கேற்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கலாகிறது. இணைப்பு 

 

11.10.2022

அனைத்து வகை அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆசிரியரின் பொது வைப்புநிதி  - GPF Missing Credit விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள  படிவத்தில் பூர்த்தி செய்து சார்நிலை கருவூலத்தில் உடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும், மாநில கணக்காயர் சார்நிலை கருவூலகத்திற்கு 19.10.2022 வருகைப்புரிவதால் உரிய விவரத்துடன் சென்று  GPF Missing Credit  கணக்கை சரிசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

Monday, 10 October 2022

 நினைவூட்டல் -1 உள்ளீடு செய்யாத அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு  உடனடியாக இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ONLINE SHEET ல் முதுகலை, பட்டதாரி,  இடைநிலை,சிறப்பாசிரியர்கள் மற்றும்  உடற்கல்வி ஆசிரியர்களின் தொலைபேசி எண் , முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது

  ONLINE ATTACHMENT

Thursday, 6 October 2022

 06.10.2022  // மிக மிக அவசரம் // மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு சமர்ப்பிக்கவேண்டியுள்ளதால் தனி கவனம் தேவை //

 திருப்பத்தூர் மாவட்ட அனைத்து அரசு உயர்நிலை  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 VPRC   மூலம் நியமனம் செய்யப்பட்ட துப்புரவு  பணியார்களின்( SANITARY WORKERS )   விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன்(GOOGLE SHEET )  படிவத்தில்  இன்று(06.10.2022) மாலை 6.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்      ON LINE SHEET