Monday, 15 August 2022

  16.08.2022 // தனி கவனம் மிக மிக அவசரம் // நினைவூட்டல் 1 //

அனைத்து வகை  அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி  உதவித்தொகை 2021-2022 ஆம் ஆண்டில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 6  ஆம் வகுப்பு  பயின்ற கிராமப்புற பெண்குழுந்தைகளுக்கு கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டதற்கான பயனீட்டுச்சான்று இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 12.08.2022 அன்று  மாலை 03.00 மணிக்குள் 3 நகல்களில் இவ்வலுவலக அ4 பிரிவில் நேரடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

மேலும், 2021-2022 ஆம் ஆண்டுக்கான 6 ஆம் வகுப்பு கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையிடமிருந்து பள்ளி தலைமை ஆசிரியர் வங்கி கணக்கிற்கு  நேரடியாக வரவு (ECS) வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதர்கான பயனீட்டு சான்றினை குறித்த காலத்திற்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது ஆனால் , இரண்டு பள்ளியினை தவிர மற்ற பள்ளிகளிலிருந்து பயனீட்டுச்சான்று ஒப்படைக்கப்படவில்லை ஆகவே , இன்னும் காலம் தால்தாமல் இன்று மாலை (16.08.2022) 02.00 மணிக்குள்  ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . .   இணைப்பு