01.09.2022
// எண்வகைப்பட்டியல் மிக அவசரம் தனி கவனம் // நினைவூட்டல் 3 மற்றும் கூடுதல் விவரம்
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
பள்ளிக்கல்வி - IFHRMS - இல் பணியிடங்கள் -2023-2024 - வரவு செலவுதிட்டம் -IFHRMS - இல் எண் வகைப்பட்டியல் தயார் செய்து சமர்ப்பிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும், இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது IFHRMS LOGIN ID பயன்படுத்தி IFHRMS இல் NUMBER STATEMENT /NUMBER STATEMENT ANNEXURE OPEN செய்து தலைப்பு வாரியாக PDF FORMAT மற்றும் EXCEL FORMAT இத்துடன் தற்போது கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள தொகுப்பு படிவத்துடன் சேர்த்து அசலாகவும் மேலும், ஒரு நகலில் திருத்தங்கள் இருப்பின் தேவைப்படும் திருத்தங்களை கையெழுத்தாக (Manually ) மேற்கொண்டும் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட EXCEL FORMAT இல் கணினியில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொண்டும் 3 விதமான வழிகளில் தயார் செய்து அனைத்து பக்கங்களிலும் DDO க்கள் கையொப்பத்துடன்படிவம் மற்றும் குறுந்தகடு இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது. இணைப்பு 2 இல் NUMBER STATEMENT பதிவிறக்கம் செய்யும் முறை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் , 29.08.2022 அன்று முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் 30.08.2022 அன்று பள்ளிக்கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் அவர்களுக்கும் தொகுத்து பணிந்து அனுப்பவேண்டி உள்ளதால் காலதாமதம் இல்லாமல் உடன் நடவடிக்கை மேற்கொண்டு 01.09.2022 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு ,இணைப்பு 2 இணைப்பு 3 கூடுதல் இணைப்பு -4 இணைப்பு - 5