07.07.2022 // தேர்வுகள் அவசரம் //
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல் சார்பு.
பள்ளி மாணவர்களது பெயர் பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பு அளித்தும் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரி கடிதம் பெறப்படுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது.
மாணவர்களது நலன் கருதி பிழைகள் அற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக தற்போது வழங்கப்படும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்யக்கோரி இவ்வலுவலகத்தில் மனுக்கள் பெறப்படின் அரசின் நிதி செலவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்ற அறிவிப்போடு அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் மே 2022 பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 08.07.2022 முதல் 16.07.2022 வரை இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பிழை இல்லா விவரங்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.