Thursday, 31 March 2022

 01/04/2022  // 

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

பள்ளிக்கல்வி - புகார் மனு - திருப்பத்தூர் மாவட்டம் - திருப்பத்தூர் கல்வி மாவட்டம்- திருப்பத்தூர் மாவட்டத்திற்குபட்ட பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களை முறையற்ற வகையில் நியமனம் செய்தது சார்பான புகார் மனு பெறப்பட்டது  இணைப்பில் உள்ள PTA  சார்பான அறிவுறைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமின்றி செயல்படுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பு1 இணைப்பு 2 

Tuesday, 29 March 2022

 30.03.2022

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) ஆணைக்கிணங்க தங்கள் பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் தற்போதைய நிலையினை இணைப்பில் கண்டுள்ள  ONLINE SHEET -  இல் இன்று பிற்பகல் 02.00 மணிக்குள் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள. இணைப்பு - 1   ONLINE SHEET

 29.03.2022

அனைத்து வகை அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளியில்  பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அலவலகப் பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்துப்படி பெறுவோர் விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து நாளை 30.03.2022 மாலை  04.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் இரு நகல்களில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. படிவம் -1, படிவம் - 2படிவம் - 3 

  

29.03.2022   

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு நிதியுதவி  உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்திடும் அலுவலர்களும் கருவூலத்தில் பட்டியல்கள் கேட்பு செய்திடும் அலுவலர்களும் மற்றும் தன் வைப்பு நிதி கணக்கு உட்பட அனைத்து வகையிலான வைப்புநிதி கணக்குகளை பராமரிக்கும் அலுவலர்களும் 2021 - 2022 நிதியாண்டின் நிதி ஒதுக்கீடுகளை நிலுவை இன்றி 28.03.2022 க்குள் முடிவிற்கு கொணர தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு

Monday, 28 March 2022

 29.03.2022     

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி /உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைக்கப்பட்டுள்ள GOOGLE SHEET - இல் 29.03.2022  காலை 9.45 மணிக்குள் ஆசிரியர் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் வருகை விவரத்தினை பதிவு செய்யுமாறு தெரிவிக்கலாகிறது.  GOOGLE SHEET 

Friday, 25 March 2022

   

26.03.2022             // தனி கவனம் // மிகவும் அவசரம் //  நினைவூட்டல் - 5 //

அனைத்து வகை அரசு / நிதியுதவி  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி -  வங்கிக் கணக்கு விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள " PROPOSED TO REMITTANCE"  column - த்தில் உள்ளத் தொகையினை அரசுக் கணக்கில் செலுத்தி  அதன் விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து செலுத்துச் சீட்டு மற்றும் படிவத்தினை 28.03.2022 அன்று மாலை 02.00 மணிக்குள் dsefc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும்  deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பில் உள்ள பள்ளிகளின் பெயர் படிவத்தில் "PROPOSED TO REMITTANCE"  column - த்தில் உள்ளத் தொகையினை அந்தந்த பள்ளிகள் தங்கள் வங்கிக் கணக்கினை கொண்டு பள்ளியின் பெயரை சரிபார்த்து  RMSA, SSA, திட்டம் சார்ந்த வங்கிக் கணக்கிணை தவிர்த்து ஏணைய அனைத்து வங்கிக் கணக்கில் உள்ள தொகையினை அரசுக் கணக்கில் செலுத்தி செலுத்துச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 28.03.2022 க்குள் வழங்காத பள்ளிகளின் பெயர் பட்டியலை பள்ளிக்கல்வி ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும் என்பதையும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. தமிழ்நாடு நிதிக்கட்டுபாட்டு அலுவலர் அவர்களின் செயல்முறைகள் கடிதம் மற்றும் பணம் செலுத்த வேண்டிய பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பூர்த்தி செய்யும் படிவத்தில் தங்கள் பள்ளிகளின் RANDOM எண்ணை தவறாமல் குறிப்பிடவும் இணைப்பு  - GOVT HEAD OF ACCOUNT,  ACCOUNT DETAILS SCHOOL NAME  LIST  FORM -1  ATTACHMENT - 1,  ATTACHMENT -  2 ATTACHMENT -3

29.03.2022

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி /உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைக்கப்பட்டுள்ள GOOGLE SHEET - இல் 29.03.2022  காலை 9.30 மணிக்குள் ஆசிரியர் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் வருகை விவரத்தினை பதிவு செய்யுமாறு தெரிவிக்கலாகிறதுGOOGLE SHEET 


25.03.2022

                                         மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்

                                            ..எண். 737/அ1/2022    நாள்.  25.03.2022


அனைத்து வகை அரசு /உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை 28.03.2022 அன்று மாலை 03.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு

Thursday, 24 March 2022

24.03.2022    

 அனைத்து  அரசு நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்  கவனத்திற்கு 

அரசு நிதியுதவி மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 7,8,9-ம் வகுப்பு (12 வயது முதல் 14 வரைபயிலும் அனைத்து மாணவர்களுக்கு  கொரானா-19 தடுப்பூசி செலுத்த மருத்துவத் துறைச் சார்ந்த குழுக்கள்  பள்ளிக்கு வருகை புரியும்  பொழுது முழு ஒத்துழைப்பு வழங்கி தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பெற்றோர்களால் இடையூறு ஏற்படும் பொழுது சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவும், மேலும் அனைத்து மாணவர்களுக்கும்  கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக் கொண்டதை  தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ளவும் தெரிவிக்கலாகிறது. 

Wednesday, 23 March 2022

23.03.2022    // தேர்வுகள்  அவசரம் //

மே  - 2022 பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு பொது தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்வதற்கும் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன தற்போது மே - 2022 பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு பொது தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் விடுபட்ட மாணவர்களது பெயரை புதிதாக சேர்ப்பதற்கு 28.03.2022 முதல் 30.03.2022 வரையிலான நாட்களில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் பொதுத் தேர்வுகளுக்கான முன்னிலை பணிகள் துவங்க இருப்பதால் இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. எனவே அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இப்பணியின் முக்கியத்துவம் அறிந்து தனி கவனம் செலுத்தி பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொது தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியினை 30.03.2022 க்குள் நிறைவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு.

இணைப்பில் உள்ள  அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடித வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்இணைப்பு - 1, இணைப்பு - 2 

 23.03.2022   

அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 01.04.2022 முதல்  ஊதியம் மற்றும் ஊதியமில்லா பட்டியல்கள் சார்நிலை கருவூலம்  திருப்பத்தூரிலிருந்து மாவட்டக் கருவூலம் திருப்பத்தூருக்கு மாற்றம் செய்யப்படுகிறது. எனவே மார்ச் - 2022  ஆம் மாத அனைத்து பட்டியல்களும் (ஊதியம் மற்றும் ஊதியமில்லாதவை) வரும் 28.03.2022 க்குள் திருப்பத்தூர் சார்நிலை கருவூலத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது.  இணைப்பு - 1, இணைப்பு - 2

Monday, 21 March 2022

21.03.2022   

அனைத்து வகை அரசு  / நிதியுதவி / மெட்ரிக் / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

சாரண சாரணியர் – திருப்பத்தூர் கல்வி மாவட்டம் – அனைத்து வகை அரசு  / நிதியுதவி / மெட்ரிக் / உயர் / மேல்நிலைப்பள்ளிகள்  - இராஜபுரஸ்கார் விருது தேர்விற்கு விண்ணப்பித்துள்ள சாரண சாரணிய மாணாக்கர்களுக்கு ஆயத்த பயிற்சி முகாம் மற்றும் சாரண சாரணிய ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி முகாம் நடத்துதல் – சார்பாக. 

2021 – 2022 கல்வியாண்டில் பள்ளிகளில் சாரண சாரணிய ஆசிரியர்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  நாட்களில் முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து சாரண சாரணிய ஆசிரியர்களும் தவறாமல் சீருடையில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணைப்பு


Sunday, 20 March 2022

 21.03.2022      //மிக மிக அவசரம்  //தனி கவனம்  // 

அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள்  கவனத்திற்கு,

தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் கட்டணம் குறித்த விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளதால்  PRIVATE SCHOOLS FEE DETERMINATION COMMITTEE DPI CAMPUS, CHENNAI - 600 006.  வழங்கிய FEE STRUCTURE FOR 2022 - 2023 ஆணையின் இரண்டு நகல்களை பெற்று 22.03.2022 அன்று காலை 11.00 மணிக்குள்  இவ்வலுவலகத்தில்  ஆ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

Wednesday, 16 March 2022

 16.03.2022       // தனி கவனம் // மிகவும் அவசரம் //  நினைவூட்டல் - 4 //

அனைத்து வகை அரசு / நிதியுதவி  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி - வங்கிக் கணக்கு விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள " PROPOSED TO REMITTANCE"  column - த்தில் உள்ளத் தொகையினை அரசுக் கணக்கில் செலுத்தி  அதன் விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து செலுத்துச் சீட்டு மற்றும் படிவத்தினை நாளை 17.03.2022 மாலை 02.00 மணிக்குள் dsefc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும்  deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பில் உள்ள பள்ளிகளின் பெயர் படிவத்தில் "PROPOSED TO REMITTANCE"  column - த்தில் உள்ளத் தொகையினை அந்தந்த பள்ளிகள் தங்கள் வங்கிக் கணக்கினை கொண்டு பள்ளியின் பெயரை சரிபார்த்து  RMSA, SSA, திட்டம் சார்ந்த வங்கிக் கணக்கிணை தவிர்த்து ஏணைய அனைத்து வங்கிக் கணக்கில் உள்ள தொகையினை அரசுக் கணக்கில் செலுத்தி செலுத்துச்சீட்டு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 17.03.2022 க்குள் வழங்காத பள்ளிகளின் பெயர் பட்டியலை பள்ளிக்கல்வி ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும் என்பதையும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. தமிழ்நாடு நிதிக்கட்டுபாட்டு அலுவலர் அவர்களின் செயல்முறைகள் கடிதம் மற்றும் பணம் செலுத்த வேண்டிய பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பூர்த்தி செய்யும் படிவத்தில் தங்கள் பள்ளிகளின் RANDOM எண்ணை தவறாமல் குறிப்பிடவும் இணைப்பு  - GOVT HEAD OF ACCOUNT,  ACCOUNT DETAILS SCHOOL NAME  LIST  FORM -1  ATTACHMENT - 1,  ATTACHMENT -  2 ATTACHMENT -3

Tuesday, 15 March 2022

 16.03.2022 

அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/மெட்ரிக்/நிதியுதவிப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

17.03.2022  அன்று தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள தலைமை ஆசிரியர் கூட்டத்தில் பாரத சாரண சாரணிய இயக்க இரண்டு ஆண்டிற்கான (2020 - 2021, 2021 - 2022 ) சந்தா  தொகை  ரூ.550 /-  வீதம் மொத்தம் ரூ.1100/- (550+550)  தொகையினை செலுத்துமாறு அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/ மெட்ரிக்/நிதியுதவிப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Monday, 14 March 2022

 15.03.2022                                    

                        மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்

                                            ..எண். 0434/2/2022    நாள்.  15.03.2022


அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள்,  பூர்த்தி செய்து 16.03.2022 அன்று மாலை 03.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறும் மற்றும் மின்னஞ்சல் (deotpt2015@gmail.com) மூலம் அனுப்பிவைக்க பள்ளித் தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள் / செயளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு

14.03.2022                                    

                        மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்

                                            ..எண். 595/2/2022    நாள்.  14.03.2022


அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை 16.03.2022 அன்று மாலை 03.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள் / செயளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு 


 

 

 14.03.2022      // தேர்வுகள் அவசரம் //

மே - 2022  - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர் பட்டியலை அனைத்து உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் 10.03.2022 அன்று பிற்பகல் முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge.tn.gov.in-க்கு சென்று தங்கள் பள்ளிக்கான வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் PASSWORD ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் பெயர் பட்டியலில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் (பெயர், பிறந்த தேதி, தாய் தந்தை / பாதுகாவலர் பெயர், புகைப்படம்) அத்திருத்தங்களை 11.03.2022  மற்றும் 12.03.2022 ஆகிய இரு நாட்களில் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது 11.03.2022 மற்றும் 12.03.2022 ஆகிய இரு நாட்களில் பத்தாம் வகுப்பு பெயர் பட்டியலில் பகுதி-1  (Part-I) -இல் மொழிப் பாடங்களில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றினை மேற்கொள்வதற்கும், பயிற்று மொழி தொடர்பாக (MEDIUM) திருத்தங்கள் இருப்பின் அவற்றினை உரிய கடிதத்துடன் b1sectiondge@gmail.com என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2022 - க்குள் அனுப்பி வைக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

Friday, 11 March 2022

 11.03.2022      // நினைவூட்டல் - 1//   மிக மிக அவசரம் // 

 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2021 – 2022 ஆம் கல்வியாண்டு  -   ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த    6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்தும், சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்றும் இதுவரை சமர்ப்பிக்காமல் உள்ள பள்ளிகள் நாளை 11.03.2022 அன்று முற்பகல் 11.00 மணிக்குள் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட்டு அதன் 3 நகலினை இவ்வலுவலக அ5 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT - 1ATTACHMENT - 2ATTACHMENT - 3 

குறிப்பு: - 

மேலும், SC/ST கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்கியவர்களுள் கீழ்கண்ட பள்ளிகள் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு   MS-EXCEL SHEET இல்  பூர்த்திசெய்த தகவல்களை நாளை காலை 11.00 மணிக்குள் அனுப்புமாறு சார்ந்த  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

(குறிப்பு : -  
1. மாணவிகளின் பெயரில் மட்டுமே தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் வங்கி கணக்கு இருக்க வேண்டும்.
2 .மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல்
3.  படிவம் 1, 2  (3 நகல்கள் )

பள்ளிகள் விவரம்

1. N.M.கோயில்
2. மதனாஞ்சேரி
3. பெருமாப்பட்டு
4. பீ.நாயக்கனூர்
5. அக்ராகரம்
6. கொல்லகுப்பம்
7. நிம்மியமபட்டு (பெண்கள்)
8. செயின்ட் சார்லஸ் அத்தனாவூர்.
9.  சின்னமூக்கனூர்.
10. ஏகலைவா மாதிரிப்பள்ளி, விசமங்கலம்.
11. T.M.S  மே.நி.பள்ளி, திருப்பத்தூர்.
12. ஸ்ரீமீனாட்சி மே.நி.பள்ளி திருப்பத்தூர்.
13. மட்றப்பள்ளி.
14. கிரிசமுத்திரம்.
15. வனத்துறை நெல்லிவாசல்.
16. சந்திரபுரம்.
17. அங்கநாதவலசை.
18.வெள்ளக்குட்டை.
19. பால்நாங்குப்பம்.
20. கனவாய்புதூர்.
21. மதனாஞ்சேரி.

Wednesday, 9 March 2022

 10.03.2022

அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி / வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு அமைச்சுப்பணி - தாங்கள் அலுவலகத்தில் உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் நிலை II / சுருக்கெழுத்தர் பணியிடம் 15.03.2022 முதல் 14.03.2025 வரை ஓய்வு பெறுவதால் ஏற்படக் கூடிய காலிப்பணியிடங்கள் விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பணியிடம் வாரியாக தனித்தனியாக பூர்த்தி செய்து  GOOGLE SHEET இல் பதிவு செய்தும் ஒரு நகல் 10.03.2022 மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறதுONLINE SHEET    இணைப்பு - 1

 25.02.2022             நினைவூட்டல் - 1

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் உயர்/ மேல்நிலைப் பள்ளி ,மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு தங்கள் பள்ளி முதன் முதலில் துவங்கியதற்கான ஆணை மற்றும் இறுதியாக பெறப்பட்டுள்ள தொடர் அங்கீகார ஆணை  ஆகிய இரண்டையும் முகப்பு கடிதத்துடன் 02.03.2022க்குள் ஆ5 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுநாள் வரை சமர்ப்பிக்காத பள்ளிகள் உடன் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

09.03.2022      // தேர்வுகள்  அவசரம் //

மே - 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அவரவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெயர் பட்டியலை (NOMINAL ROLL) 04.01.2022 முதல் 19.01.2022 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்ய கால அவகாசமும், 20.01.2022 முதல் 05.02.2022 வரை கூடுதலாக கால நீட்டிப்பும் வழங்கப்பட்டது.

இதன் படி தயாரிக்கப்பட்ட மே - 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் தேர்வு எழுதிய பெயர் பட்டியலை அனைத்து உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் 10.03.2022 அன்று பிற்பகல் முதல் அரசு தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பள்ளிக்கான வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும், பெயர் பட்டியலில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின்(பெயர், பிறந்த தேதி, தாய், தந்தை/பாதுகாவலர் பெயர், புகைப்படம்) அத்திருத்தங்களை 11.03.2022 மற்றும் 12.03.2022 ஆகிய இரு நாட்களில் மேற்கொள்ளவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவரேனும் (NOMINAL ROLL) சேர்க்காமல் விடுபட்டு இருப்பின் பெயர் பட்டியலில் சேர்ப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

Tuesday, 8 March 2022


08.03.2022             // தேர்வுகள் அவசரம் //

அனைத்து  வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

நடைபெறவுள்ள மே - 2022 பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு பொதுத்தேர்வு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏற்கனவே நேரடித் தனித் தேர்வராக மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) தேர்வு எழுதி பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற/தேர்ச்சி பெறாத/வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வு எழுதுவதற்கும் முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்

மே - 2022, பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், 09.03.2022 (புதன்கிழமை) முதல் 16.03.2022 (புதன்கிழமை) வரையிலான நாட்களில்) 13.03.2022  (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை  திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியிலும், வக்கணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

தட்கல் சிறப்பு அனுமதி முறையில்  விண்ணப்பிப்பதற்கான நாட்கள்

மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 18.03.2022 (வெள்ளிக்கிழமை) முதல் 21.03.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (20.03.2022 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுத்துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக  ரூ.1000/-  (மேல்நிலை) / ரூ.500/- (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தட்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பொதுவான அறிவுரைகள்  (கொரோனா தடுப்பு  சார்ந்து)

1.தனித்தேர்வர்கள் மே - 2022 பொதுத் தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பிக்க, சேவை மையங்களுக்கு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும்.

2. போதிய சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

3.அரசின் வழிகாட்டுதல் முறையினை பின்பற்றவும் தெரிவிக்கப்படுகிறது.

 08.03.2022       // தனி கவனம் // மிகவும் அவசரம் //

அனைத்து வகை அரசு / நிதியுதவி  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி - வங்கிக் கணக்கு விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள " PROPOSED TO REMITTANCE"  column - த்தில் உள்ளத் தொகையினை அரசுக் கணக்கில் செலுத்தி  அதன் விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து செலுத்துச் சீட்டு மற்றும் படிவத்தினை நாளை மாலை 05.00 மணிக்குள் dsefc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும்  deotpt2015@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. இணைப்பில் உள்ள பெயர் படிவத்தில் "PROPOSED TO REMITTANCE"  column - த்தில் உள்ளத் தொகையினை அந்தந்த பள்ளிகள் தங்கள் வங்கிக் கணக்கினை கொண்டு பள்ளியின் பெயரை சரிபார்த்து  RMSA, SSA, திட்டம் சார்ந்த வங்கிக் கணக்கிணை தவிர்த்து ஏணைய அனைத்து வங்கிக் கணக்கில் உள்ள தொகையினை அரசுக் கணக்கில் செலுத்திட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. தமிழ்நாடு விதிக்கட்டுபாட்டு அலுவலர் அவர்களின் செயல்முறைகள் கடிதம் மற்றும் பணம் செலுத்த வேண்டிய பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு - GOVT HEAD OF ACCOUNT,  ACCOUNT DETAILS SCHOOL NAME  LIST  FORM -1  ATTACHMENT - 1,  ATTACHMENT -  2 ATTACHMENT -3


08.03.2022     தேர்வுகள்//தனிகவனம்//

 2021- 2022 ஆம் கல்வியாண்டு, மே 2022-ல் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாடத்தில் செய்முறை பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவு செய்ய தவறிய தனித்தேர்வர்கள் 09.03.2022 முதல் 15.03.2022 வரை பயிற்சி வகுப்பில் இணைய இதுவே இறுதி வாய்ப்பு என தெரிவிக்கப்படுகிறது.  இணைப்பு - 1 

Monday, 7 March 2022

 07.03.2022      // நினைவூட்டல்//   மிக அவசரம் // 

 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2021 – 2022 ஆம் கல்வியாண்டு  -   ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த    6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்தும், சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்றும் இதுவரை சமர்ப்பிக்காமல் உள்ள பள்ளிகள் நாளை 08.03.2022 மாலை 03.00 மணிக்குள் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட்டு அதன் 3 நகலினை இவ்வலுவலக அ5 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT - 1ATTACHMENT - 2ATTACHMENT - 3 

குறிப்பு: - 

மேலும், இதுவரை SC/ST கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்கியவர்களும் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பூர்த்தியான படிவங்களை அனுப்புமாறு சார்ந்த  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

(குறிப்பு : -  
1. மாணவிகளின் பெயரில் மட்டுமே தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் வங்கி கணக்கு இருக்க வேண்டும்.
2 .மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல்
3.  படிவம் 1, 2  (3 நகல்கள் )

Sunday, 6 March 2022

 

07.03.2022         // தனிகவனம்//

அனைத்து  உயர்நிலை/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி இன்று (07.03.2022) ஆசிரியர்களின் வருகை பதிவையும் & மாணவர்களின் வருகை பதிவையும் சரியான நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யுமாறும், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Refresher Quiz  (Mathematics HOTs questions)ஐ உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தின் மூலம் நடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, இன்று பள்ளிக்கு வருகை தராத மாணவர்களை சார்ந்த பள்ளி வகுப்பாசிரியர்/பாட ஆசிரியர் மூலம் தொடர்புகொண்டு பள்ளிக்கு வரவழைத்து இத்தேர்வினை முழுமையாக (100%)முடித்திட அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Thursday, 3 March 2022

 04.03.2022     // மிக மிக அவசரம் தனி கவனம்//      நினைவூட்டல் -3   

அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு

 இணைப்பில் (3) இல் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகளின்படி பள்ளிகளில் பராமரித்து வரும் வங்கிக் கணக்குகளில் உள்ள Unspent  Amount  பயன்படுத்தாத தொகையினை இணைப்பில் உள்ள அரசுக்கணக்கில் 07.03.2022 அன்று மாலை 04.00 மணிக்குள் E- Challan  கருவூல செலுத்துச்சீட்டு மூலம் செலுத்தி அச்செலுத்துச்சீட்டினை  dsefc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு   அனுப்பிவிட்டு அதன்  நகலினை  இவ்வலுவலக deotpt2015 @ gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்பிவிட்டு அதன் இரண்டு நகலினை   ஆ1 பிரிவில்  தனி நபர் மூலம் ஒப்படைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது

இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி காலதமதம் இன்றி  உடனடி நடவடிக்கை மேற்கொள்ள  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது

 04.03.2022   // தேர்வுகள்//   // தனிகவனம்//

அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு,

மே - 2022, இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் கால அட்டவணை தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்முதல்வர்களுக்கு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மேலும் வகுப்பறையிலும் மற்றும் பள்ளி தகவல் பலகையிலும் ஒட்டி மாணவர்கள் அறியும் வண்ணம் தெரியப்படுத்த தலைமை ஆசிரியர்கள்முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவர்களை மே - 2022 பொதுத்தேர்வு கால அட்டவணைப்படி பொதுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தி தேர்ச்சி விகிதத்தினை அதிகப்படுத்த தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 

 


(NMMS EXAM)

 03.03.2022   // தேர்வுகள் // தனிகவனம் // 

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

05.03.2022 அன்று நடைபெறும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு (NMMS) தேர்விற்கு நியமனம் செய்யப்பட்ட அறைக் கண்காணிப்பாளர்கள் உரிய தேர்வு மையத்தில் 04.03.2022 அன்று மதியம் 02.00 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கலாகிறது.

    மேலும் இணைப்பில் தேர்விற்கான வருகை பதிவேடு (AQUNTIANCE), தேர்விற்கான வழிகட்டுதல்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1, இணைப்பு -2

Wednesday, 2 March 2022

03.03.2022

01.03.2022 அன்று மாறுதல் / பதவி உயர்வில் பணியில் சேர்ந்த அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவரங்களை இணைப்பில் உள்ள ONLINE SHEET இல் இன்றே பூர்த்தி  செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ONLINE SHEET

 

03.03.2022  / கூடுதல் மின்கட்டணம் தேவை விவரம்//

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2021-2022 ஆம் கல்வியாண்டில் 2202 02 109AA என்ற கணக்கு தலைப்பில் மின்கட்டணம் (2021 -2022)பெற்றது  போக கூடுதல்  மின்  கட்டணம்  தேவைப்படும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய படிவத்தில்  பூர்த்தி செய்து  இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு   அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிது.     படிவம்